WatTruyen.Top

நெஞ்சில் மாமழை..

❤❤ 23 ❤❤

jamunaguru

கிருபா தன் மீது கொண்டுள்ள காதலை அறிந்த பின்பு.. அவன் அன்புக்கு தான் தகுதியானவள் தானா.. என்ற எண்ணம் தோன்றிய போதும்.. அவன் காதலை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தாள் அதிதி.

கிருபா மீதிருந்த நம்பிக்கை.. மெல்ல நேசமாக மாற தொடங்கியது.. தன்னை தன் தவறுகளோடு.. ஏற்றுக் கொள்ளும் உறவை யாரால் வெறுக்க முடியும்..

திருமண பேச்சு வந்தது முதலே மனதில் பலவித எண்ணங்களோடு கவலைகளோடு இருந்தவள்.. மனதிலிருந்து மகிழ்ச்சி பொங்க.. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டிருந்தாள் மனதளவில்.. அது அவள் முகத்திலும் எதிரொளித்தது.

தங்கள் இருவருக்கும் நடக்கும் நிச்சயம்.. அதிலும் மனதில் நேசத்தோடு முதன்முதலாக கிருபாவை காணப்போகும் உற்சாகத்துடன் காத்திருந்தாள் அதிதி.

அப்போது அந்த அறைக்கு வந்த லேகாவின் மனதில் சஞ்சலம் இருந்தது.

திருமண பேச்சு வந்தது முதலே அதிதியின் முகத்தில் இயல்பான சந்தோஷத்தை காணவில்லை.. அவள் மனதில் வேறு ஏதோ இருக்கிறது என்ற எண்ணம் லேசாக இருந்தது லேகாவுக்கு.

அதிலும் அதிதிக்கும் நரேஷுக்கும் இருந்த உறவை அறிந்த பின்.. அதிதி தன் அண்ணன் கிருபாவுக்கு பொருத்தமானவள் தானா என்ற உறுத்தல் வந்தது.

நிச்சய வேலைகளில் இருந்த ஜீவனுக்கு போன் செய்த பிரதீப்.. நரேஷின் திருமணத்திற்கு வந்ததாகவும்.. அங்கே அவன் காணவில்லை என்பதால் பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்றான்.

முதலில் இதை எதற்காக தன்னிடம் சொல்கிறான் என ஜீவனுக்கு புரியவில்லை.

“அதிதியும் நரேஷும் லவ் பண்ணாங்க.. ஒருவேளை இரண்டு பேரும்.. ஓடி போய்.. எதுக்கும் விசாரிச்சு பாரு.. அதிதி வீட்டில இருக்காங்களா.. இல்லையானு..” என பிரதீப் தன் எண்ணத்தை வெளிப்படுத்த கடுப்பானான் ஜீவன்.

“தப்பா பேசாத.. அவங்க ப்ரெண்ட்ஸா தான் பழகிருக்காங்க.. இன்னைக்கு அவங்களுக்கும் என் அத்தான் கிருபாவுக்கும் நிச்சயதார்த்தம்.. தேவையில்லாம தப்பா பேசாத..” என்ற ஜீவன் போனை கட் பண்ணினான்.

கிருபா மீது ஜீவனுக்கு மிகுந்த மரியாதை உண்டு.. தொழிலில் இவரை நம்பலாம் இவரை நம்பக்கூடாது என மனிதர்களை கிருபா எடைபோடும் விதம் கண்டு பிரமித்திருக்கிறான் ஜீவன்.

கிருபா அதிதி மீது கொண்டுள்ள நம்பிக்கையை அறிந்த பின்பு.. அதிதி பற்றி தவறான விஷயங்கள் காதுக்கு வந்ததை ஜீவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் லேகாவுக்கு சின்ன உறுத்தல் இருந்து கொண்டேயிருந்தது.

இப்போதும் பிரதீப் ஜீவனிடம் பேசிய விஷயத்தை அறிந்ததும்.. அதிதி அப்படி ஏதாவது செய்து விடுவாளா.. என்ற சந்தேகம் வந்தது.

அப்படி ஏதாவது நடந்து விட்டால் அது தன் அண்ணனுக்கு.. தன் குடும்பத்துக்கு எத்தனை பெரிய அவமானத்தை தரும்.. அதிதி அப்படி ஒரு முடிவில் இருந்தால் கூட அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் அதிதியின் அறைக்கு வந்தாள் லேகா.

ஆனால் அதிதியின் முகத்தில் இருந்த சந்தோஷம்.. தன் எண்ணம் தவறோ என லேகாவை எண்ண வைத்தது.

“அவளுக்கு நீ என்ன பேசினாலும் கேட்காது.. அவ எப்படா மாப்பிள்ளையை பார்ப்போம்னு வெயிட் பண்ணிட்டு இருக்கா..” என அதிதியை யாரோ கேலி செய்ய.. அவள் முகத்தில் இருக்கும் சந்தோஷம்.. வெட்கமெல்லாம் நிஜம்தானா இல்லை நடிக்கிறாளா என குழப்பத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தாள் லேகா.

அதிதியை அழைத்து வருமாறு கூற.. அவள் மனதில் இருப்பதை அறிந்து கொள்ளும் எண்ணத்துடன் அவள் மீதே தன் பார்வையை வைத்திருந்தாள் லேகா.

அவள் பார்வையை உணராத அதிதி கிருபாவை சந்திக்கப் போகும் ஆவலில் இருந்தாள்.

மெல்ல தன் விழிகளை கிருபா மீது பதித்தாள் அதிதி. அவன் பார்வையில் அதிலிருந்த காதலில் தன்னை தொலைக்க தொடங்கினாள்.

பெரியவர்கள் நிச்சய தாம்பூலம் மாற்றிக் கொண்ட பின்.. நிச்சய மோதிரம் மாற்றிக் கொண்டனர் அதிதியும் கிருபாவும்.

சில நொடி விரல் தீண்டல்.. இறுக்கமாக அணைத்துக் கொள்ளும் ஆசையை இருவருக்குள்ளும் தூண்டியது. சூழ்நிலை உணர்ந்து இருவரும் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டனர்.

அதிதி கிருபாவின் பார்வை பரிமாற்றத்தில் இருந்த காதலை உணர்ந்து கொண்ட லேகாவின் மனதில் இருந்த சஞ்சலம் நீங்கியது.

“இன்னும் ஒரு வாரம் இருக்கா.. கல்யாணத்துக்கு.. அதுவரைக்கும் எப்டி சமாளிக்கிறது..” என அதிதியின் காதில் கிருபா கிசுகிசுக்க.. நாணத்தில் முகம் சிவந்தாள் அவள்.

அதிதி கிருபா இருவருமே அந்த தினத்தை மனதில் நிம்மதியுடன் காதலுடன் கடந்தனர்.

அதிதிக்கு நரேஷால் இனி எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை.. அவள் இனி தன் காதலை ஏற்றுக் கொள்வாள்.. தங்கள் வாழ்க்கை  இனிமையாக அமையும் என எண்ணிக் கொண்டிருந்த கிருபாவின் நிம்மதியை பறித்தது அந்த செய்தி.

நரேஷ் பூஜாவுக்கு நடைபெற இருந்த திருமணம் நின்று விட்டது. அதற்கு காரணம் நரேஷ் காணாமல் போனது.

ரிசப்ஷன் முடிந்ததும் வெளியே செல்ல வேண்டாம் என பூஜாவின் அப்பா தடுத்தும் யாரோ நண்பனை பார்க்க வேண்டும் என கிளம்பியவன்.. திரும்பி வரவில்லை.

திருமணத்தன்று காலையில் தான் நரேஷ் திரும்பி வராததை அறிந்து கொண்டவர்கள் அவன் போனுக்கு முயற்சித்தனர்.

அந்த போன் கிருபாவிடம் இருந்தது.. ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு.

பூஜாவின் அப்பா வைத்தியநாதன்.. நரேஷ் வேண்டுமென்றே தான் இப்படி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.

நரேஷின் தாய் ஈஸ்வரி எவ்வளவோ மன்றாடியும் வைத்தியநாதன் அவர் பேச்சுக்கு செவிமடுக்கவில்லை.

தன் மகளை இந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டானே என நரேஷின் மீது கடும் கோபத்தில் இருந்தவர்.. தன்னிடம் நெடுங்காலமாக வேலை பார்க்கும் மேகநாதனின் மகன் சுதனை தன் மருமகனாக்க முடிவு செய்தார்.

பூஜாவும் தன் தந்தையின் பேச்சை மறுத்து பேசி பழக்கம் இல்லாததால் சம்மதம் சொன்னாள்.

ஈஸ்வரி அதை தடுக்கும் எண்ணத்துடன் வைத்தியநாதனிடம் பேசிய எந்த பேச்சும் பலனளிக்கவில்லை.

“கல்யாண செலவுன்ற பேரில உனக்கும் உன் பையனுக்கும் கொடுத்தது தண்ட செலவுனு நினைச்சிக்கிறேன்.. அதை நீ திருப்பி தரலைனா கூட பரவாயில்லை.. என் பொண்ணை வாழ்க்கையை கெடுத்துடாத..” என முடித்துவிட்டார் வைத்தியநாதன்.

மேலும் பேசினால் பணத்தை திருப்பி கேட்பாரோ என்ற பயத்தில் அங்கிருந்து வெளியேறினார் ஈஸ்வரி நரேஷை திட்டி தீர்த்தபடி.

பூஜா சுதனின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

இந்த நரேஷ் எங்கே போயிருப்பான்.. அதிதிக்கும் தனக்கும் திருமணம் நடைபெற போவது தெரிந்திருக்குமா..

வீடியோ நிச்சயம் அவனிடம் இல்லை என தைரியமாக இருக்கலாமா.. இல்லை.. அவனிடம் இருக்கக்கூடுமா.. என்ன செய்வது.. அவன் என்ன செய்வான்.. எங்கே போயிருப்பான்.. என யோசித்துக் கொண்டிருந்தான் கிருபா.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top