WatTruyen.Top

நெஞ்சில் மாமழை..

❤❤ 12 ❤❤

jamunaguru

கிருபா மகதியின் தயவில் கொஞ்சம் நிம்மதியாக இருந்த அதிதி.. “எங்கையோ பார்த்திருக்கேன்..” என ஜீவன் சொன்ன நொடியிலே தன் நிம்மதியை இழந்தாள்.

நரேஷ் தன்னை எடுத்து வைத்திருக்கும் வீடியோவை தான் ஜீவன் பார்த்திருக்க வேண்டும்.. அதைத்தான் ஜீவன் இப்போது குறிப்பிடுவதாக அதிதி தனக்குள்ளாகவே முடிவுக்கு வந்தாள்.

அதிலும் தான் வேலை செய்த நிறுவனத்தின் பெயரை சரியாக குறிப்பிட்டு.. ஜீவன் கேட்டதும்.. நிச்சயம் நரேஷுடன் தான் பார்த்திருக்கிறான் என எண்ணினாள் அதிதி.

அதிதியிடம் ஏதோ பயம் பரவுவதை கிருபாவால் உணர முடிந்தது. ஆனால் அது எதற்கு என அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதுகுறித்து ஜீவன் எல்லோர் முன்னிலும் சொல்லி விட்டால் என்ன செய்வது.. எப்படி சமாளிப்பது என புரியாமல் அதிதியின் இதயம் பயத்துடன் துடித்தது.

“உங்களோட கொலீக் பிரதீப்பை ஞாபகம் இருக்கா.. அவன் என் ப்ரெண்ட் தான்.. அவனை பார்க்க வரும்போது தான் நான் உங்களை அங்க பார்த்திருக்கேன்.. ஒருவழியா ஞாபகம் வந்துடுச்சு..” என அத்தனை நேரம் யோசித்து ஒருவழியாக தான் கண்டுபிடித்து விட்ட நிம்மதி பெருமூச்சுடன் சொன்னான் ஜீவன்.

இதற்குத்தானா என்பது போல மனதில் ஒருவித நிம்மதி பரவினாலும்.. அந்த பேச்சு கிளறிய நரேஷின் நினைவு.. அந்த வீடியோ குறித்த பயம் அதிதியின் மனதை விட்டு அகல மறுத்தது.

அதன்பின் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த லேகா.. “அத்தை.. நாளை மறுநாள் நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் டிரெஸ் எடுக்க போகலாம்னு அம்மாவும் அப்பாவும் சொல்ல சொன்னாங்க..” என்றாள்.

“ஆம்.. சரிமா.. போய்ட்டு வந்துடலாம்..” என்றார் ஜானகியும்.

“கல்யாணத்துக்கும் சேர்த்தே எடுத்துடலாம்னு அம்மாவும் அப்பாவும் சொன்னாங்க..”

“அதுவும் சரிதான் மா.. கொஞ்ச நாள் தானே இருக்கு.. இரண்டு தடவை எதுக்கு அலைஞ்சிட்டு..” என்றார் ஆனந்தன்.

அதிதியிடம் தனியே பேச எண்ணிக் கொண்டிருந்த கிருபா.. “கிளம்பலாமா..” என கேட்டான்.

சரியென்ற லேகாவும் ஜீவனும் அதிதியை மட்டுமல்லாது ஆனந்தன் ஜானகியையும் தங்களுடன் சாப்பிட அழைத்தனர்.

“இல்லைமா.. நீங்க அதிதியை கூட்டிட்டு போங்க.. இன்னொரு நாள் நாங்களும் வர்றோம்..” என இருவரும் மறுத்துவிட்டனர்.

கிருபா குடும்பத்துடன் அதிதி பழக அவளுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என எண்ணினர் ஆனந்தனும் ஜானகியும்.

கிருபா காரை ஓட்ட.. அவனருகில் அதிதி அமர்ந்திருந்தாள். லேகாவும் ஜீவனும் மகதியுடன் பின்னால் அமர்ந்திருந்தனர்.

அதிதி மனமெல்லாம் அந்த வீடியோ வெளியானால் எல்லோரும் தன்னை வெறுத்து விடுவர்.. இப்போது இருக்கும் இந்த சந்தோஷம்.. தன் சந்தோஷம் மட்டுமல்லாது இரு குடும்பத்தின் சந்தோஷமும் பறிபோகுமே.. என்ன செய்வது.. எப்படி தடுப்பது.. என்பது மட்டுமே இருந்தது.

லேகாவும் ஜீவனும் அதிதி மட்டுமல்லாது கிருபாவும் அமைதியாக இருப்பதை கவனித்தனர். நன்றாக தானே பேசிக் கொண்டிருந்தனர்.. அதற்குள் என்னவாயிற்று.. என எண்ணினர்.

சரி அவர்கள் தனிமையில் பேசிக் கொண்டால் சரியாகிவிடும்.. ரெஸ்டாரெண்ட் சென்றதும் அவர்களுக்கு தனிமை தந்து தாங்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என எண்ணினர் லேகாவும் ஜீவனும்.

ரெஸ்டாரெண்ட் வந்ததும் காரை நிறுத்தினான் கிருபா.. லேகாவும் ஜீவனும் முதலில் இறங்கியதும்.. “நீங்க போய் ஆர்டர் பண்ணுங்க டா.. நாங்க கொஞ்ச நேரத்துல வந்துடுறோம்..” என்ற கிருபா காரை அங்கிருந்து கிளப்பினான்.

“நம்ம ஹெல்ப் பண்ண வேண்டியதே இல்லை.. நமக்குத்தான் அவ்ளோ விவரம் பத்தாது போல..” என முணுமுணுத்தான் ஜீவன்.

மகதி மீண்டும் காருக்குள் ஏற அடம்பிடிக்க.. கிருபா அவளை தங்களுக்கு இடையில் அமர்த்திக் கொண்டான்.

நடப்பது எதிலும் கவனம் பதியாமலே இருந்த அதிதி திருதிருவென விழித்தபடி கிருபாவை பார்த்தாள்.

காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு.. “சொல்லு.. என்ன பிரச்சனை..” என கேட்டான் கிருபா.

சில நிமிட அமைதிக்கு பிறகு.. “எ.. எனக்கு பயமா இருக்கு..” என்றாள் அதிதி.

“என்ன பயம்..”

“அ.. அந்த வீடியோவை அவன் நெட்ல அப்லோட் பண்ணிடுவானோனு பயமா இருக்கு..

என்னை எங்கையோ பார்த்திருக்கேன்னு சொன்னதும்.. அ.. அந்த வீடியோவில தான் இருக்குமோனு பயமா இருக்கு..

என்னால முடியலை.. நான் பண்ணது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்பத்தான் புரியுது.. அவனோட தான் வாழப்போறேன்ற நம்பிக்கைல தான் நான்.. ஆனா.. அவன் என் நம்பிக்கையை கொன்னுட்டான்.. அதுக்கான தண்டனையையும் நானே அனுபவிக்கிறேன்..” என்ற அதிதி அழுது விட்டாள்.

அவள் பயத்தை புரிந்து கொள்ள முடிந்தது கிருபாவால்.

மகதி இருவரின் பேச்சையும் கவனிக்காமல் தன் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

சில நொடிக்கு பின்.. அதிதியின் கரத்தை பற்றிக் கொண்ட கிருபா.. “அப்டிலாம் எதுவும் நடக்காது.. தைரியமா இரு..” என்றான்.

அவன் வார்த்தைகள் உள்ளுக்குள் ஏதோ திடம் தந்தது.

“அப்டித்தான் நினைச்சுக்கிறேன்.. ஆனாலும் கஷ்டமா இருக்கு.. ஏதாவது நடந்துடுச்சுன்னா.. அதையே யோசிச்சு யோசிச்சு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு..” என்றாள் அதிதி.. தன் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டிவிடும் எண்ணத்துடன்.

“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவனோட எண்ணம்.. அந்த வீடியோவை வெளியே விட்டு உன்னை அசிங்கபடுத்துறது இல்லை..

நீ வேணும் அவனுக்கு.. அதேசமயம் அந்த பொண்ணும் வேணும்.. உன்னை மிரட்டுறதுக்காக தான் அவன் அந்த வீடியோவை எடுத்திருக்கான்.

அந்த வீடியோ வெளியே பரவிடுச்சுனா அவன் நினைச்சது நடக்காதுனு அவனுக்கு தெரியும்.. நீ ஏதாவது தப்பா முடிவெடுத்துடுவனு அவன் நினைக்கலாம்.. அதனால அவன் இப்போதைக்கு அப்டிலாம் எதுவும் பண்ண மாட்டானு எனக்கு தோணுது..

அட்லீஸ்ட் அந்த பொண்ணோட கல்யாணம் ஆகுற வரைக்குமாவது இதை தள்ளிப் போடலாம்.. அதனால தைரியமா இரு..” என்றான் கிருபா.

அவன் சொல்வதை ஏற்றுக்கொள்ள அதிதியால் முடிந்தது.

கிருபாவும் நரேஷின் எண்ணத்தை சரியாகவே கணித்திருந்தான்.

அதிதி கிருபாவின் நிச்சயதார்த்தத்தன்று தான் நரேஷ் பூஜா திருமணம்.

அதிதி தன்னிடம் இருந்து விலகுவதற்காக வேலையை விடுவது நம்பரை மாற்றவது என ஏதேதோ செய்கிறாள்.. ஆனால் இதையெல்லாம் மீறியும் தான் அவளை அணுக வேண்டும்.. அணுக முடியும்..அவளை அடைந்தே தீர வேண்டும்.. என்ற எண்ணம் நரேஷுக்கு.

அதிதிக்கும் கிருபாவுக்கும் திருமணம் முடிவானது அவனுக்கு இன்னமும் தெரியாது. அதனாலே அதிதி தன்னிடம் இருந்து விலகி இருந்தாலும்.. அவளை மீண்டும் வீழ்த்தி விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தான்.

பணத்திற்காக என்றாலும் பூஜாவுக்கும் தனக்குமான திருமணம் முடிந்த பின்னர் அதிதியை கவனித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தான் நரேஷ்.

இப்போதைக்கு அவனிடம் இருந்து அந்த போனை எப்படி எடுப்பது என்பது தான் கிருபாவுக்கு புரியவில்லை. ஆனால் அதையும் அவன் தன் கல்யாண பரபரப்பில் இருக்கும் போதே நடத்தி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான் கிருபா.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top