❤❤ 10 ❤❤
நரேஷ் எடுத்து வைத்திருக்கும் வீடியோவை யாருக்காவது அனுப்பி விடுவானோ.. அப்படி ஏதாவது நடந்தால்.. இல்லை நடக்காது.. நடக்காது.. அதற்கு என்ன உறுதி.. எதுவும் இல்லையே.. ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை அவ்வளவு தான்..
அப்படி நடந்தால்.. நடந்து விட்டால் என்ன செய்வது.. எல்லோரின் பார்வையிலும் நான் தானே தப்பு செய்தவள்.. இல்லை தப்பானவள்..
அவனை நம்பி என்னையே கொடுத்ததை என்னுடைய தப்புதான்.. அதனால் நான் தப்பானவளா.. இதெல்லாம் அப்பா அம்மாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும்..
கடவுளே எனக்கு ஏன் இந்த சோதனை.. அப்படியெல்லாம் ஏதாவது நடந்தால்.. எத்தனை பேர் அருவெறுப்பாக பார்ப்பார்கள்.. ச்சே.. அதையெல்லாம் சகித்துக் கொண்டு வாழ்வதை விட சாவதே மேல்.. இதே எண்ணம் தான் மீண்டும் மீண்டும் அதிதிக்கு.
எவ்வளவுதான் முயன்றாலும் அதையே தன் மனம் சுற்றி வருவதை அவளால் தடுக்க முடியவில்லை.
தான் மட்டும் அந்த தவறு இழைக்காமல் இருந்திருந்தால்.. அப்பா அம்மாவை போல இந்த திருமணம் தனக்கும் சந்தோஷம் தருவதாகவே இருந்திருக்கும் என தோன்றியது அதிதிக்கு..
மீண்டும் மீண்டும் அதே குற்ற உணர்வு.. நடந்து முடிந்தது நடக்காமல் இருந்திருக்கலாமே என்ற எண்ணம்.. இனி நரேஷ் என்ன செய்வானோ.. அதை எப்படி சமாளிப்பது என்ற பயம்..
குற்ற உணர்வும் பயமுமாக அதிதி தவித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது தன் போனை.. புது போன்.. கிருபா கொடுத்தது.. அதை பார்த்ததும்.. கிருபா இருதினங்களாக போன் பண்ணாதது நினைவுக்கு வந்தது.. ஏன்.. ஏன் ஒரு போன் கூட பண்ணவில்லை..
உன்னை என்ன ஆசைப்பட்டா கல்யாணம் பண்ணிக்க போறாரு.. எப்ப பார்த்தாலும் போன்ல கொஞ்சிட்டு இருக்கிறதுக்கு.. என அதிதியின் மனம் அவளை கேலி செய்தது.
அதை நினைக்கையில் தன் தவறு பூதாகரமாக தோன்ற குற்ற உணர்ச்சியில் தவித்தாள் அதிதி.
தன் மனதை திசைதிருப்ப முயன்று போனில் பாடல் கேட்க தொடங்கினாள்.
கிருபாவுக்கு போன் பண்ணலாமா என தோன்றியது.. ஆனால் ஏதோ ஒரு தயக்கம்..
பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு இப்ப என்கிட்ட கொஞ்சுறாளே.. அவ்ளோ ஈசியா மனசை மாத்திக்கிட்டானு மட்டமா தானே நினைப்பான்.. என எண்ணினாள் அதிதி.
ஆனால் அதிதி போன் பண்ணியிருந்தால்.. கிருபா நிச்சயம் மகிழ்ந்திருப்பான் என்பது அப்போது அவளுக்கு புரியவில்லை.
போன்தான் பண்ணலை.. ஒரு மெசேஜ்ஜாவது பண்ணலாம்ல.. என ஏக்கம் தோன்றியது அதிதிக்கு.
இதையெல்லாம் தான் கிருபாவிடம் எதிர்பார்ப்பதே தவறு.. பொதுவாக ஆண்கள் தனக்கு வரும் மனைவி மனதளவில் கூட பரிசுத்தமானவளாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் தான் தப்பு செய்தவள் என்றறிந்தும் அப்பா அம்மாவுக்காக என்றாலும் கிருபா தன்னை ஏற்றுக் கொண்டதே பெரிது..
இதில் அவர் தன்னிடம் இயல்பாக பழக வேண்டும்.. அன்பு காட்ட வேண்டும்.. என்று எதிர்பார்ப்பதெல்லாம் முட்டாள்தனம் என எண்ணினாள் அதிதி.. கிருபா அவள் மீது காதல் கொண்டிருப்பதை உணராமல்.
அதிதி ஏற்கனவே தற்கொலை எண்ணம் கொண்டிருந்தாள்.. அன்று தான் அப்பா அம்மாவை நினைச்சு பாரு என சொன்னதுதான் அந்த முடிவை கைவிட காரணம் என அதிதி சொன்னது கிருபாவின் நினைவில் இருந்தது.
அவளின் பிரச்சனை இன்னும் தீரவில்லை.. அது தீராமல் அவள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அந்த முடிவுக்கு செல்லலாம்..
அவளின் மனநிலை மதில் மேல் பூனை தான்.. தான் செய்த தவறும் அதன் விளைவும் அவளை துரத்திக் கொண்டே இருக்கும்.. அதை சரி செய்வதுதான் தன் முதல் வேலை என எண்ணினான் கிருபா.
அதனாலே அவன் அந்த பிரச்சனையை தீர்ப்பது எப்படி என யோசிக்க தொடங்கினான்.
நரேஷிடம் இருக்கும் அந்த வீடியோவை முதலில் அழிக்க வேண்டும்.. அதை எப்படி செய்வது.. எங்கே தொடங்குவது என நிதானமாக யோசிக்க தொடங்கினான் கிருபா.
ஏற்கனவே அதிதியிடம் அவனை பற்றிய சில விவரங்களை கேட்டறிந்து இருந்தான் கிருபா. நரேஷை பின்தொடர்ந்து அவனை கண்காணித்தான் கிருபா.
அடுத்த நாள் அவன் வீட்டுக்குள் அவனில்லாத நேரம் நுழைந்தான். வீட்டை அலசி அங்கிருந்த பென் டிரைவ், மெமரி கார்ட் என எல்லாவற்றையும் எடுத்தான் கிருபா.
நரேஷ் அந்த வீடியோவை தன் போனில் சேவ் பண்ணியிருக்கிறான்.. அதுபோக வேறெதிலும்.. சேவ் பண்ணியிருந்தால்.. அதான் லேப்டாப் பென்டிரைவ் மெமரி கார்ட் என எல்லாவற்றையும் தேடினான்.
எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவைக்க கிருபா விரும்பவில்லை. நரேஷ் வீட்டில் கிடைத்த எல்லாவற்றையும் அலசி விட்டான்.. அது எதிலும் அந்த வீடியோ இல்லை.. மீதமிருப்பது நரேஷின் போன் மட்டுமே.. அதை எப்படி எடுப்பது என்ற யோசனையில் இருந்தான் கிருபா.
அப்போது "அண்ணா.." என அழைத்தபடி லேகா அவன் அறைக்கு வந்தாள்.
தன் எண்ணங்களில் இருந்து விடுபட்டு.. நிகழ்வுக்கு வந்தான் கிருபா.
"இரண்டு நாளா உன்னை பார்க்கவே முடியலை.. ரொம்ப தான் பிஸியா இருக்க.. என்ன அண்ணி கூட கடலை போட்டுட்டு இருந்தீயா.." என கேலி செய்தாள் லேகா.
சின்ன சிரிப்புடன் கிருபா பேச தொடங்கும் முன்னர்.. மகதியுடன் அங்கே வந்த ஜீவன்.. "விடுமா.. நமக்காவது நீண்ட நெடிய இரண்டு மாசம் இருந்துச்சு கல்யாணத்துக்கு முன்னால பேசி பழகுறதுக்கு..
ஆனா மச்சானுக்கு ஒரே ஒரு வாரம் தான இருக்கு.. பேசட்டுமே.. ஏன் டிஸ்டர்ப் பண்ற.. வந்த விஷயத்த சொல்லு முதல்ல.." என்றான்.
"மாமா.." என தன்னிடம் தாவிய மகதியை கொஞ்சியபடியே.. என்னவென லேகாவை பார்த்தான் கிருபா.
"அண்ணியை பார்க்க நாளைக்கு நாங்க போகலாம்னு நினைக்கிறோம்.. அம்மா உன்னை கூட்டிட்டு போக சொல்றாங்க.. நீயும் அண்ணியை நேரில பார்த்த மாதிரி இருக்கும்ல.." என்றாள் லேகா.
மனதில் உற்சாகம் பரவ ஒப்புக் கொண்டான் கிருபா.
"நமக்கு தான் இப்டி மீட்டிங் அரேஞ்ச் பண்ண ஆளே இல்லை.." என ஜீவன் நொந்து கொண்டான்.
"ஒரு குழந்தையும் பிறந்தாச்சு.. இன்னும் அதையே பேசிட்டு இருக்கீங்க.." என லேகா செல்லமாக கடிந்து கொள்ள.. அசடுவழிந்தான் ஜீவன்.
சில நிமிடங்கள் கேலியும் கிண்டலுமாக இனிமையாக பொழுது கழிந்தது.
லேகாவும் ஜீவனும் கிருபாவின் அறையில் இருந்து கிளம்ப.. "மகி வா.. நாம தூங்கலாம்.." என மகதியை அழைத்தாள் லேகா.
"வேணா.. வேணா.. மாமா.. மாமா.." என கிருபாவிடம் ஒட்டிக் கொண்டாள் மகதி.
"அவ இங்கே தூங்கட்டும்.. நீ போ மா.." என்றான் கிருபா.
"உன்னை மாமா ரூம்ல இருந்து விரட்ட அத்தை வந்தாச்சு.. அப்புறம் பாரு.." என மகளை செல்லமாக முறைத்துவிட்டு.. அங்கிருந்து நகர்ந்தாள் லேகா.
தன் லேப்டாப்பை தட்டிக் கொண்டிருந்த மகதியை தன் மடியில் அமர்த்திக் கொண்ட கிருபா.. "மகி குட்டி.. அத்தை கிட்ட பேசலாமா.." என்றான்.
புரியாமலே மகதி மகிழ.. தன்னவளை காணப் போகும் உற்சாகத்துடன் அதிதிக்கு வீடியோ கால் செய்தான் கிருபா.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top