WatTruyen.Top

நெஞ்சில் மாமழை..

❤❤ 08 ❤❤

jamunaguru

இருவரின் பெற்றோருக்கும் இந்த திருமணம் சந்தோஷம் தரும்.. அதை கெடுக்க வேண்டாம்.. என கிருபா சொல்ல.. அது சரியென்றே அதிதிக்கு தோன்றியது.

ஆனாலும் உள்ளுக்குள் ஏதோவொரு ஏமாற்றம் தோன்றியது.. அதற்கான காரணம் என்னவென அதிதிக்கு புரியவில்லை.

அதுகுறித்து மேலும் யோசிக்கவிடாமல்.. கிருபா இயல்பாக பேச தொடங்கினான்.

“உன்னோட பேவரைட் கலர் பிங்க் தான..” என கேட்டான்.

“ம்.. உங்களுக்கு எப்டி தெரியும்..” என கேட்டாள் அதிதி.

“எல்லாம் இந்த ஜானுவால வந்தது.. என்னோட பிங்க் சுடியை போட்டுக்குறேன்னு சொன்னா கேட்டாத்தானே..” கிருபாவின் மனதுக்குள் அதிதியின் புலம்பல் வந்து.. அவனிதழ்களில் புன்னகை தவழ்ந்தது.

“சும்மா கெஸ் தான்..” என தன்னை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த அதிதியிடம் சமாளித்தான்.

“சின்ன வயசுல நீ எங்க வீட்டுக்கு வந்திருக்கனு அம்மா சொன்னாங்க.. உனக்கு நியாபகம் இருக்கா..” என கிருபா கேட்க இல்லையென தலையசைத்தாள் அதிதி.

“பாட்டி வீடு மட்டும் தான் எனக்கு நியாபகம் இருக்கு..” என அதிதி சொன்னாலும் காலையில் தன் அத்தை மைதிலி பேசியது நினைவில் வந்தது.

“அபிராமி அக்கா வீட்டுக்கு நான் உன்னை கூட்டிட்டு போயிருக்கேன்.. உனக்கு நியாபகம் இல்லையாடா..

கிருபாவுக்குனு வச்சிருந்த ஐஸ்கிரீம் மொத்தத்தையும் காலி பண்ணிட்டு வந்த..” என மைதிலி சிரித்தார்.

“இனிமேலும் கிருபாவுக்கு மிச்சம் வைக்காம ஐஸ்கிரீமை காலி பண்ண போறன்னு நினைக்கிறேன்..” மைதிலியின் கேலிப் பேச்சை அப்போது கிருபாவிடம் சொல்ல தோன்றவில்லை அதிதிக்கு.

ஆனாலும் மெல்ல தன் தயக்கத்தை இழக்க தொடங்கினாள் அதிதி. கிருபாவிடம் இயல்பாக உரையாட அவளால் முடிந்தது.

அப்போது அவளின் போன் ஒலித்தது.. நரேஷின் பெயருடன்..

அதுவரை இருந்த இயல்பான மனநிலை மாறி மனம் படபடக்க தொடங்கியது.

இப்ப எதுக்கு இவன் போன் பண்றான்.. அவன்கிட்ட இருந்து விலகணும்னு வேலையை கூட விட்டுட்டேனே.. அவன் கல்யாணத்துக்கு என்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுனு தானே சொன்னான்.. எதுவும் பண்ணாம விலகித்தானே இருக்கிறேன்..

அப்புறமும் ஏன் போன் பண்ணி டார்ச்சர் பண்றான்.. மனதுக்குள் அவனை திட்டியபடியே.. தவிப்புடன் கிருபாவை பார்த்தாள் அதிதி.

யாரென்பது புரிய.. அவன் மீது வந்த தன் கோபத்தை மறைத்து.. “பேசு..” என்றான் கிருபா இயல்பான குரலில்.

“வே.. வேண்டாம்..” என தடுமாற்றத்துடன் பதிலளித்தாள் அதிதி.

போனை கொடு.. என்பது போல கையை நீட்டினான் கிருபா. தயக்கத்துடன் போனை கொடுத்தாள் அதிதி.

கிருபா போனை அட்டெண் செய்துவிட்டு அமைதியாக இருக்க.. அட்டெண் செய்தது அதிதியாக தான் இருக்கும் என்ற எண்ணத்தில் மறுமுனையில் இருப்பவர்கள் பேசுவதற்கு கூட இடம்கொடாமல் நரேஷ் பேச தொடங்கினான்.

“அதிதி என்னாச்சு உனக்கு.. எதுக்காக வேலையை விட்ட.. நான் அந்த வீடியோ எடுத்தது தானே உனக்கு கோபம்.. அது தப்பு தான்.. கண்டிப்பா அதை மிஸ்யூஸ் பண்ண மாட்டேன்..”

“பண்ணதே தப்பு.. அதுல அதை மிஸ்யூஸ் பண்ண மாட்டானாம்..” என கிருபா எண்ணினான்.

“அதை நான் ஏன் பண்ணேன்னு நீ புரிஞ்சுக்கோடா..” பதில் பேசவில்லை என்றாலும் அதிதி கேட்டுக் கொண்டிருப்பாள் என்ற எண்ணத்தில் நரேஷ் பேசிக் கொண்டிருந்தான்.

கிருபா லவுட் ஸ்பீக்கர் ஆன் செய்திருந்ததால் அதிதியும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.

“பண்ணுனது தப்புனு புரியுது.. அதுக்கு சாரி சொல்ல மாட்டானாம்.. தப்பை திருத்திக்க மாட்டானாம்.. ஆனா விளக்கம் கொடுப்பானாம்..” என மனதுக்குள் அலட்சியமாக எண்ணிக் கொண்ட கிருபா.. “சரி என்னதான் சொல்றானு கேட்போம்..” என நரேஷின் பேச்சை கேட்க ஆரம்பித்தான்.

“எனக்கு நீ வேணும் அதிதி.. காலம் முழுக்க நீ வேணும்.. ஆனா இப்ப நான் பூஜாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்.. எங்க அம்மாவோட பணத்தாசையை பத்திதான் உன்கிட்ட சொல்லிருக்கேனே..

பூஜா தூரத்து சொந்தம்.. கோடி கணக்குல சொத்து இருக்கு.. அது நம்ம ப்யூச்சருக்கும் யூஸ் ஆகும்.. எனக்கு வேற வழியில்லை.. அதான் அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன்..

அதுக்காக உன்னை விட்டுட மாட்டேன்.. பூஜா நம்மளோட லைப்ல வராம நான் பார்த்திருக்கிறேன்.. நீ தேவையில்லாம வொரி பண்ணிக்காத.. நாம எப்பவும் போல சந்தோஷமா இருக்கலாம்..”

அதற்கு மேல் நரேஷின் பேச்சை கேட்க தேவையில்லை என்பது போல போனை கட் செய்திருந்தான் கிருபா.

பூஜா வேண்டும்.. அவள் சொத்து முக்கியம்.. நீயும் வேண்டும்.. உன் உ.. ச்சே.. நரேஷின் பேச்சை நினைக்க நினைக்க கண்ணீர் வழிந்தது அதிதியின் கண்களில்.

அவன் அம்மாவின் பணத்தாசைக்காக சம்மதித்தானாம்.. அப்படியானால் அவனுக்கிருப்பது என்ன.. தான் எப்படிப்பட்ட ஒருவனை நம்பியிருக்கிறோம்.. என தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்தாள் அதிதி.

தகுதியற்றவனுக்காக தான் வழிந்தது அதிதியின் கண்ணீர்.. அது புரிந்தாலும் அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

அவள் மனம் புரிந்த கிருபா சற்று நேரம் எதுவும் பேசவில்லை.

“அதிதி.. ரெஸ்ட் ரூம் போய்ட்டு முகம் கழுவிட்டு வா.. வீட்டுக்கு கிளம்பலாம்..” என கிருபா சொல்ல சரியென்ற அதிதியும் அங்கிருந்து நகர்ந்தாள்.

திரும்பி வந்த அதிதி தன் போனுக்காக கைநீட்ட.. “இனிமே அது உனக்கு தேவையில்லை..” என்ற கிருபா புது போன் ஒன்றை அவளிடம் கொடுத்தான்.

லேசான தயக்கத்துடனே வாங்கிக் கொண்டாள் அதிதி.

“புது சிம் ஆக்டிவேட் பண்ணிருக்கேன்.. இனி இதையே யூஸ் பண்ணு..” என கிருபா சொல்ல.. சரியென தலையசைத்தாலும் வீட்டில் என்ன சொல்வது என யோசனையுடன் அவனை பார்த்தாள் அதிதி.

அவள் எண்ணத்தை புரிந்து கொண்டவனாக.. “நான் கிப்ட் பண்ணேன்னு சொல்லு.. அத்தை மாமா எதுவும் கேட்க மாட்டாங்க..” என்றான் கிருபா லேசான கண்சிமிட்டலுடன்.

மீண்டும் அதிதியின் அலைபேசி ஒலிக்க தொடங்கியது. போனை சைலண்ட்டில் போட்டான் கிருபா. தன் மனம் கூட அமைதியடைவதை உணர்ந்தாள் அதிதி.

என்னதான் நரேஷ் அந்த வீடியோவை மிஸ்யூஸ் பண்ணமாட்டேன் என சொன்னாலும் அதை நம்ப கிருபாவால் முடியவில்லை. அதனால் மேற்கொண்டு என்ன செய்வது என யோசிக்க தொடங்கினான்.

அதே எண்ணம் தான் அதிதிக்கும்.. ஆனால் கிருபாவை போல யோசிக்க அவளால் முடியவில்லை.. பயம்.. பதற்றம்.. தவித்துக் கொண்டிருந்தாள் அவள்.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top