WatTruyen.Top

நெஞ்சில் மாமழை..

❤❤ 06 ❤❤

jamunaguru

அதிதியின் வீட்டுக்கு சென்று வந்த அன்று இரவு.. கிருபா தன்னறையில் படுத்திருந்தான். உறக்கம் வரவில்லை.அவனை உறங்க விடாமல் செய்தது அதிதியின் நினைவுகள்..

அதை ஏன் வாசிக்க நேர்ந்தது. அதை வாசிக்காமலே இருந்திருக்கலாமோ.. என தன்னைத்தானே நொந்து கொண்டான் கிருபா.

தன் மனதில் நிறைந்தவள்.. அவள் வேறு ஒருவனுடன்.. ச்சே.. நினைக்கவே உடம்பெல்லாம் கூசியது கிருபாவுக்கு.

ஆனால் இதில் யாரை குற்றம் சொல்வது.. என்னதான் காதலன் என்றாலும்.. நம்பிக்கை கொண்டிருந்த போதும் வரம்பு மீறி பழகிய அவளையா.. தன்மீது நம்பிக்கை கொண்டு தன்னையே தந்த பெண்ணுக்கு துரோகம் இழைத்த அவனையா..

கிருபாவின் எண்ணமெல்லாம் இதிலே நிறைந்திருக்க.. அவனறியாமலே..மெல்ல உறங்கிப் போனான்.

“கிருபா.. கிருபா.. எழுந்திரு..” அபிராமி அவனை உலுக்கினார். விழிகளை திறக்காமலே.. “என்னம்மா..” என்றான்.

“அ.. அதிதி சூசைட் பண்ணிக்கிட்டாளாம்..” தடுமாற்றத்துடன் ஒலித்த குரல் கேட்டு பதறி எழுந்தான் கிருபா.

நேரம் நள்ளிரவு.. கனவு.. அறையில் அவனை தவிர யாருமில்லை..

தலைக்கு மேலாக சீரான வேகத்தில் சுழன்று கொண்டிருந்த மின்விசிறியையும் மீறி வியர்வை வழிந்தது.

அதிதியின் அறையில் கண்ட தூக்க மாத்திரை நினைவில் வந்தது. கனவையே அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நிஜமாவே எதாவது பண்ணிருப்பாளோ.. அப்பவே அதை தடுக்க ஏதாவது செஞ்சிருக்கணுமோ.. எதையும் யோசிக்க முடியவில்லை அவனால்.

அவ என்ன தப்பு பண்ணா.. அவ எதுக்காக சாகணும்னு நினைக்கிறா.. அவ நம்பிக்கையை சிதைச்ச அவன் மேல தான் தப்பு..

அப்ப அவ பண்ணது தப்பே இல்லைனு சொல்றீயா..

தெ.. தெரியலை.. ஆனா அதுக்காக அவ சாகட்டும்ணு என்னால எப்டி நினைக்க முடியும். இடுப்புல நிக்காத அந்த தாவணியில.. குழந்தை மாதிரி முகம்.. அவ மனசும் கூட அப்டித்தான்..

அப்ப அவளை கல்யாணம் பண்ணிக்க..

அதெப்டி முடியும்.. அவ வேற ஒருத்தனை..

வேற ஒருத்தனை..

வே.. வேற ஒருத்தனோட..

வேற ஒருத்தனை மனசுல வச்சிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் தப்பு.. அவ மனசில இப்ப அவன் இல்லை.. நிச்சயமா இருக்க மாட்டான்.. அப்புறம் என்ன..

அதுக்காக..

ம்.. அப்ப அவ பண்ணது தப்பு.. அவளுக்கு தூக்க மாத்திரை தான் சரி..

நோ.. அ.. அவ சாகக்கூடாது..

வேற ஒருத்தனை லவ் பண்ணா.. நம்பி ஏமாந்து நிக்கிறா.. அவளால உன்னை மட்டுமில்லை.. வேற யாரையும் ஏத்துக்க முடியாது.. அதனால சாகிறா.. சரிதானே..

அதெப்படி சரியாகும்.. அவ ஏன் சாகணும்.. இந்த உலகம் அவனோட முடிஞ்சி போகலை.. நான் இருக்கேன் அவளுக்கு..

உன்னால தான் அவளை கல்யாணம் பண்ணிக்க முடியாதே..

ஏன் முடியாது.. நான் அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்..

அது உன்னால முடியாது..

முடியும்..

அவ வேற ஒருத்தனோட..

ஸ்டாப் இட்.. அது அவளோட கடந்த காலம்.. முடிஞ்சு போன விஷயம்.. அதை திரும்ப திரும்ப பேசுறதால எதுவும் மாற போறதில்லை.. உலகத்துல தப்பே பண்ணாதவங்க யாருமில்லை.. தப்புக்கு தண்டனை சாவுன்னு அவ நினைக்கிறா.. அதை நான் மாத்துறேன்.. நாங்க கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்வோம்..

உறுதியாக எண்ணிய போதிலும்.. ஏதோ உணர்ச்சி வேகத்தில் இந்த முடிவை எடுக்கிறோமோ என்ற குழப்பம் கிருபாவுக்கு.

அதனாலே தன் அப்பா அம்மாவிடம் முடிவை சொல்வதை தள்ளிப்போட்டான் கிருபா.

இரு தினங்களும் எங்கே அவள் தப்பான முடிவுக்கு சென்று விடுவாளோ என்று உள்ளுக்குள் தவித்தான் கிருபா.

குறைகளே இல்லாத மனுசங்க யாருமில்லை.. ஒருத்தங்களை அவங்களோட நிறை குறையை முழுமனசோட ஏத்துக்கிறது தான் உண்மையான நேசம்..

நான் அவளை நேசிக்கிறேன்.. நான் என்னோட வாழ்க்கையை அவளோட வாழணும்னு ஆசைப்படுறேன்.. அவ்ளோதான்.. அது கட்டாயம் நடக்கும்.. என தீர்மானித்தான் கிருபா.

மோகன் அபிராமியிடம் தன் முடிவை கிருபா சொல்ல.. அவர்களுக்கும் அதில் சந்தோஷமே..

மோகன் உடனடியாக போன் செய்து ஆனந்தன் ஜானகியிடம் பேசி தேதியை முடிவு செய்தனர்.

கிருபா வீட்டிலிருந்து வரும் தகவல் நிச்சயம் தன் பெற்றோருக்கு வருத்தமாக இருக்கும்.. அவர்களை எப்படி சமாதானம் செய்வது என யோசித்துக் கொண்டிருந்த அதிதிக்கு.. கிருபாவின் சம்மதம் அதிர்ச்சியாக தான் இருந்தது.

அதிதி வேலை குறித்து சொல்ல நினைத்ததை ஜானகியே.. சொன்னார்.

“குட்டிமா இனிமே வேலைக்கு போக வேண்டாம் சரியா.. நிச்சயத்துக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு.. அதுக்கு பிறகு ஒரே வாரத்துல கல்யாணம்.. எப்டி எல்லாத்தையும் செய்ய போறோமோனு இருக்கு..” என சந்தோஷமும் மலைப்புமாக பேசிக் கொண்டிருந்தார் ஜானகி.

என்ன பேசுவதென புரியாமல் அதிர்ந்து விழித்துக் கொண்டிருந்தாள் அதிதி.

“நீ எதையும் நினைச்சு கவலைப்படாத டா.. நானும் அம்மாவும் எல்லாத்தையும் பார்த்துக்கிறோம்..” என ஆனந்தன் அதிதியின் தலையை வருடியபடி மென்மையாக சொன்னார்.

“ஆமா நீ வேற எதையும் யோசிக்காம கல்யாண பொண்ணா லட்சணமா.. மாப்பிள்ளை கூட டூயட் பாடு..” என கிண்டல் செய்தார் ஜானகி.

லேசான புன்னகையுடன் தன்னறைக்குள் அடைந்து கொண்டாள் அதிதி.

ஆனந்தனும் ஜானகியும் அதிதி கிருபாவின் திருமண வேலைகளை திட்டமிட தொடங்கினர்.

அதிதியின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. கிருபா இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வாய்ப்பேயில்லையே.. அப்புறம் எப்படி..

ஒருவேளை அவருடைய அப்பா அம்மாவின் கட்டாயத்தினால் சம்மதித்திருப்பாரோ.. என்னை மறுக்கும் உண்மையான காரணத்தை சொல்ல வேண்டாமென நினைத்து.. அதனால் சம்மதிக்க வேண்டிய கட்டாயமோ.. இப்போது என்ன செய்வது..

விருப்பமே இல்லாமல்.. என் தவறுகளை பற்றி அறிந்தும் எப்படி அவரால் என்னோடு வாழ முடியும்..

நான்  செய்த தவறுக்கு அவர் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்.. இது நிச்சயம் நடக்கக்கூடாது.. இந்த ஏற்பாடுகளை எப்படி நிறுத்துவது என யோசிக்க தொடங்கினாள் அதிதி.

கிருபாவிடம் பேசினால் ஏதேனும் வழி கிடைக்குமோ என்று எண்ணினாள் அதிதி.

ஆனால் எப்படி பேசுவது.. அவர் போன் நம்பர் கூட இல்லையே.. அப்பா அம்மாவிடமும் கேட்க தயக்கமாக இருக்கிறதே என தனக்குள்ளோ தவித்துக் கொண்டிருந்தாள் அதிதி.

அவள் தவிப்பை போக்கும் வண்ணம்.. கிருபாவே அவளை சந்திக்க வந்தான் அடுத்த நாள்.

புன்னகை நிரம்பிய முகத்துடன் கிருபாவை கண்டது மனதுக்கு இதம் தந்த போதிலும்.. அதிதி குழப்பமானாள்.

ஆனந்தன் ஜானகியிடம் அதிதியுடன் வெளியே சென்று வர அனுமதி கேட்டான் கிருபா.

“போமா.. போய் ரெடியாகு..” என்றார் ஜானகி அதிதியிடம்.

தலையசைத்து விட்டு தன்னறைக்குள் சென்றவளுக்கு சிறிது நேரம் எதுவுமே புரியவில்லை.

அப்பா அம்மா கட்டாயத்துக்காக கல்யாணத்துக்கு சம்மதித்திருப்பான்.. தன்னையே கல்யாணத்தை நிறுத்தும்படி சொல்வானோ.. என அதிதி எண்ணினாள்.

அதற்கு மாறாக கிருபாவின் முகத்திலிருந்த சந்தோஷம்.. ஏன் என அதிதிக்கு புரியவில்லை.

ஆனந்தன் ஜானகியிடம் கிருபா சிரித்து பேசிக் கொண்டிருக்க.. தன்மேல் உள்ள கோபத்தை தன் அப்பா அம்மாவிடம் காட்டவில்லை.. தன்னை பற்றி அறிந்த கசப்புகளையும் வெளியே சொல்லவில்லை.. கிருபா குணத்தில் நல்லவனே.. என எண்ணினாள் அதிதி.

காபி ஷாப் ஒன்றில் கிருபாவின் முன் தயக்கத்துடன் அமர்ந்திருந்தாள் அதிதி.. என்ன பேச வேண்டும் என மனதுக்குள் எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள்.

கிருபாவோ எந்த குழப்பமும் தயக்கமும் இன்றி அவளை பார்த்து புன்னகைத்தான்.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top