WatTruyen.Top

காதலின் சங்கீதம்..

14

jamunaguru

சில மாதங்கள் கடந்து விட்டது. தமயந்தி ரத்தினவேலின் செல்ல சண்டை.. பாலாவின் அன்பு என கங்காவின் வாழ்க்கை இனிதாக நகர தொடங்கியது.

வேலை காரணமாக மதிய உணவுக்கு பாலா வர தாமதமானால்.. கடையில் வைத்து சாப்பிட்டுக் கொள்ளச் சொல்லி அவனை வந்து சாப்பாடை வாங்கிக் கொள்ளச் சொல்வார் தமயந்தி.

இப்போது கங்காவையே நேரில் கொண்டு கொடுத்து வரச் சொன்னார்.

இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகரிக்கும் என எண்ணினார் தமயந்தி. ஆனாலும் இருவருக்கும் இடையில் இடைவெளி இருப்பதை அவரால் உணர முடிந்தது.

வேலையில் தன்னால் முடிந்த சின்னச்சின்ன உதவியை செய்தபடி.. பாலாவை சாப்பிட வைத்துவிட்டு.. அவனுடனே பைக்கில் வீடு திரும்புவாள் கங்கா.

எப்போதாவது இருந்த இந்த பழக்கம் அடிக்கடி மாறியது.. அவ்வளவே தமயந்தியின் முயற்சியால் ஏற்பட்ட மாற்றம்..

அவர்கள் விரும்பும் போது வாழ்க்கையை தொடங்கட்டும்.. நாம் அதில் தலையிடுவது சரியில்லை என பாலாவின் பெற்றோர் ஒதுங்கி இருந்தாலும் அவர்களிடம் மாற்றம் தெரிகிறதா என்பதை கவனிக்க தவறவில்லை.

தங்களுக்குள் இருக்கும் இடைவெளியை கடக்க கங்கா பாலா இருவருக்குமே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த சூழ்நிலையில் மணந்து விட்டு.. இப்போது தன்னை பாலாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ.. அதனால் தான் இந்த விலக்கமோ என சில நேரங்களில் கங்காவுக்கு தோன்றும்.

ஆனால் பாலாவின் அன்பும் அக்கறையும் கனிவும் குடும்பத்தில் நிலவிய இயல்பான மகிழ்ச்சியும் அந்த எண்ணம் குறித்து கங்காவை ஆழ்ந்து யோசிக்க விடாமல் செய்தது.

பாலா கங்காவை மணந்து கொண்ட சூழ்நிலை வேறுவிதமாக இருந்த போதிலும்.. தோழியாக இருந்தவளை மனைவியாக உணர தொடங்கினான்.மனைவியாக உணர்ந்து நெருங்க நினைத்தாலும் அவளால் இப்போது தன்னை ஏற்றுக் கொள்ள முடியுமா.. அவள் என்ன மனநிலையில் இருக்கிறாளோ.. என ஏதேதோ தயக்கம் அவனுக்குள்.

பாலாவின் இந்த தயக்கமே கணவன் மனைவியாக அவர்கள் வாழ்க்கையை தொடங்க தடையாக இருந்தது.

அன்று இரவு சுவரை ஒட்டி இருந்த அந்த கட்டிலில் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான் பாலா தன் லேப்டாப்புடன்.

அப்போது அறைக்குள் வந்த கங்கா.. “தூங்கலையா பாலா..” என கேட்டாள்.

“தூக்கம் வரலை.. அதான் எதாவது படம் பார்க்கலாம்னு..” என்றான் பாலா லேப்டாப்பிலே தன் பார்வையை வைத்தபடி.

“நானும்.. நானும்..” என உற்சாகத்துடன் பாலா அருகில் அமர்ந்தாள் கங்கா.

பிறமொழி படங்களாக இருக்க.. “பாட்டு தான் புரியாததா கேட்கிற.. படமாவது புரியுற மாதிரி பார்க்க கூடாதா..” என பாவமாக கேட்டாள் கங்கா.

“இதோ கீழ இங்க்லீஷ்ல வரும் அவங்க பேசுறது..” என்றான் பாலா.

“அதை வாசிக்கிறதா.. படம் பார்க்கிறதா.. அப்டினாலும் பாதி வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது..” என்றாள் கங்கா.

“சரி உனக்கும் புரியுற மாதிரி படம் பார்ப்போம்..” என்ற பாலா home alone படத்தை play செய்தான்.

அந்தப் படமும் சில நிமிடங்கள் கங்காவுக்கு எதுவும் புரியாதது போலிருந்தது. பாலாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“அந்தப் பையனை விட்டுட்டு போய்ட்டாங்க..” என கங்கா பதற.. “ம்..” என்றான் பாலா.

“இவங்க திருடங்களா.. அந்தப் பையன் மட்டும் தனியா தான இருக்கான்.. அச்சோ..” என பதறினாள் கங்கா.

“அந்தப் பையன் புத்திசாலி.. என்னலாம் பண்ணுவான்னு பாரு..” என்றான் பாலா.

சிரித்து மகிழ்ந்து படத்தை பார்த்து முடித்தாள் கங்கா. நெடுநாட்களுக்கு பிறகு சிரித்து மகிழ்ந்திருந்தவள் படுத்தவுடன் உறங்கியும் போனாள்.

பாலாவின் மனமும் உடலும் அவள் அருகாமைக்கு முன்னிலும் அதிகமாக ஏங்க தொடங்கியது.

காலையில் தமயந்தி எழுந்துவர.. கங்கா இன்னும் எழுந்து வராததே அவர் மனதுக்கு சந்தோஷம் தந்தது.

மகிழ்ச்சியுடன் அவர் டீ போட கிச்சனுக்குள் செல்ல.. “சாரி அத்தை நல்லா தூங்கிட்டேன்..” என்றபடி அங்கே வந்தாள் கங்கா.

“பரவாயில்லை டா..” என தமயந்தியும் புன்னகையோடு சொன்னார்.

“நைட்டு நானும் பாலாவும் படம் பார்த்தோமா.. அதான் படுக்க லேட்டாகிடுச்சு.. அந்த படத்துல..” என கங்கா கதை சொல்லிக் கொண்டிருக்க.. “இவ்ளோதானா.. நான் அதுக்குள்ள ஏதேதோ கற்பனை பண்ணிட்டேன்..” என மனதுக்குள் எண்ணிக் கொண்டார் தமயந்தி.

தன் அன்பை தன் மனைவிக்கு முழுதாக புரிய வைக்கவும் முடியாமல்.. அவளிடம் இருந்து விலகியிருக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் பாலா.

சில தினங்கள் கடந்திருந்த நிலையில்.. அன்று இரவு.. “பாலா எதாவது படம் பார்ப்போமா.. அன்னைக்கு மாதிரி ஜாலியா ஒரு படம்..” என்றாள் கங்கா.

சரியென்ற பாலாவும் தன் லேப்டாப்பை எடுத்தான்.. “நா.. நான் ஆன் பண்றேன்.. என்ன செய்யணும்..” என கேட்டு கங்காவே ஆன் செய்தாள்.

விரல் போன போக்கில் ஏதோ ஒரு படத்தை தேர்வு செய்வது என முடிவு செய்து just like heaven படத்தை play செய்தனர்.

“நல்லா இருக்குமா பாலா இந்த படம்..” என கங்கா கேட்க.. “ம்..” என்றான் பாலா.

தன் தோளில் சாய்ந்து இருந்தவளை.. இன்னும் இறுக்க கட்டிக்கொள்ள அவன் மனம் துடித்தது. ஆனால் கங்கா படத்தில் ஆழ்ந்திருந்தாள்.

“அவளுக்கு என்னாச்சு பாலா..”

“ஆக்சிடெண்ட்..”

“அவ செத்துட்டாளா.. ஆவியா.. அப்ப பேய் படமா..”

“இல்லை..”

“பின்ன..”

“அவன் கண்ணுக்கு மட்டும் தெரிவா.. அவ கோமால இருப்பா..”

“ஓ..”

கங்கா படத்தில் ஆழ்ந்திருக்க.. தனக்குள் இருக்கும் உணர்வுகள் இவளுக்கு கொஞ்சம் கூட இல்லையா.. என்ற எண்ணத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பாலா.

கடைசியில் முத்தக் காட்சியுடன் படம் நிறைவுற.. கங்கா தயக்கத்துடன் பாலாவை பார்த்தாள். அவன் தாப பார்வை அவள் மீதிருந்தது.

அவன் பார்வையிலே கிறங்கிக் கொண்டிருந்தவளின் கன்னத்தை தன் கரத்தால் ஏந்தி.. “கங்கா..” என தாபத்துடன் அழைத்தான்.

“ம்..” என்றாள் அவள் விழிகளை மூடியபடி.

இருவரின் இதயமும் படபடத்துக் கொண்டிருந்தது.

“என்னைப் பாரு..” என்றான் பாலா மெல்ல.

மெல்ல விழிகளை திறந்த கங்கா பாலாவை பார்த்தாள். சில நொடிகள்.. இருவரின் விழிகளும் எதையோ பேசிக் கொண்டன.

அவள் இதழ்களில் மெல்ல பதிந்த அந்த முதல் முத்தம்.. அழுத்தமாக மாறிக் கொண்டிருந்தது.

காலையில் கண்விழித்ததும் இரவின் நிகழ்வுகளில் துளிர்த்த வெட்கத்துடன் எழும்பப் போனவளை தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தான் பாலா.

சில நொடிகள் அவன் அணைப்பிற்குள் அடங்கியவள்.. “பாலா.. விடு.. நான் எழுந்திருக்கணும்.. அத்தை எழுந்திருச்சிருப்பாங்க..” என சிணுங்கினாள்.

“ம்.. இன்னும் கொஞ்ச நேரம்..” என கெஞ்சிக் கொண்டிருந்தான் அவள் கணவன்.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top