06
கங்கா செய்து கொடுத்த பிரியாணியை நன்றாக இருந்ததாக பாராட்டினான்.அரவிந்த்.
“கீது.. உன் அக்காவுக்கு கல்யாணம் ஆனா தான.. நாம கல்யாணம் பண்ணிக்க முடியும்..” என கேட்டான் அரவிந்த்.
“அவ கிடக்கிறா.. அவளுக்கு கல்யாணம் ஆன பிறகு தான் நாம கல்யாணம் பண்ணிக்கணும்னு கட்டாயமா என்ன..” என அலட்சியமாக பதிலளித்தாள் கீர்த்தனா.
“உனக்கு வேற எக்ஸாம் வரப்போகுது.. அப்புறம் எப்டி மீட் பண்றது..” என்றான் அரவிந்த்.
“அதெல்லாம் நீ ஏன் கவலைப்படுற.. ப்ரெண்டை பார்க்க போறேன்னு சொல்லிட்டு நான் வர்றேன்..” என சாதாரணமாக சொன்னாள் கீர்த்தனா.
“இன்னைக்கு எங்க போறோம்..” என கேட்டாள் கீர்த்தனா.
“போனதும் தெரிஞ்சுக்கோ..” என்றான் அரவிந்த்.
அரவிந்த் கீர்த்தனாவை அழைத்து சென்றது அந்த ஊரில் இருந்த ஒரு லாட்ஜ்க்கு.
லாட்ஜின் அறைக்குள் நுழைந்து கதவை பூட்டும் வரை.. அமைதியாக இருந்த கீர்த்தனா.. “இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த..” என கேட்டாள்.
“கீது..” என குழைந்தவன்.. “எத்தனை நாள் தான்.. கிஸ்ஸோடவே முடிச்சுக்கிறது.. அதுக்கு மேல போக வேண்டாமா..” என அவளை அணைத்தான்.
இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனநிலைக்கு எப்படி வந்தாளோ கீர்த்தனா. அதை சாதாரணமாக தான் எடுத்துக் கொண்டாள்..
சில நாட்களே பழகிய ஒருவனுடன் தனியறையை.. படுக்கையை பகிர்ந்து கொள்வதற்கும் தயாராக இருந்தாள்.
சதாசிவம் வேலைக்கு சென்றுவிட.. வீட்டில் இருந்த வேலைகளை முடித்துவிட்டு.. வார பத்திரிகை ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தாள் கங்கா.
சன் மியூசிக்கில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை முணுமுணுத்தாள் கங்கா.
முந்தைய தினம் பாலாவின் அறையில் கேட்ட பாடல் ஒலிக்க.. “ஹிந்தியா.. தெலுங்கா.. அதுல கேட்கிறதுக்கு கூட இந்த பாட்டு நல்லா இருந்துச்சுல்ல..” என மனதில் நினைத்தாள் கங்கா.
அப்போது பாலாவும் கங்காவை அழைத்தபடி அங்கே வந்தான்.
“இப்பத்தான் நினைச்சிட்டு இருந்தேன் பாலா..” என்றவள்.. ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பாடலை காட்டி.. “அர்த்தம் புரியாம கேட்கிறது கூட நல்லா இருக்கு..” என்றாள்.
சிரித்துக் கொண்ட பாலா.. “எந்த ரூம்ல பேன் மாட்டணும் கங்கா..” என கேட்டான்.
“கீர்த்தி ரூம்ல பாலா.. அந்த பேன் ரொம்ப சத்தம் வருது..” என கங்கா சொல்ல.. “உன்னை திருத்தவே முடியாது..” என மனதில் நினைத்துக் கொண்டான் பாலா.
கங்காவுடன் ஏதேதோ பேசியபடியே தன் வேலையை முடித்தான் பாலா. அவள் பேச்சிலிருந்து தனக்கு பிடித்த பாடல்கள் மீது அவளுக்கும் ஓர் ஈர்ப்பு உண்டானதை அறிந்து கொண்டான்.
கங்கா வீட்டில் வேலையை முடித்துவிட்டு தன் வீட்டுக்கு சென்றவன்.. மீண்டும் அங்கே வந்தான்.
எதையும் மறந்து வைத்து விட்டானோ.. என எண்ணிய கங்கா.. “என்ன பாலா.. எதையும் வச்சிட்டு போய்ட்டீயா..” என கேட்டாள்.
“ஒன்னும் மறக்கலை.. இந்தா பிடி..” என அவள் கையில் தன்னுடைய பழைய டேப்லெட் ஒன்றை கொடுத்தான்.
“வேண்டாம் பாலா.. எனக்கு இதெல்லாம் யூஸ் பண்ண தெரியாது..” என்றாள் கங்கா தயக்கமாக.
“அதெல்லாம் நான் சொல்லித் தர்றேன்.. உனக்கும் அந்த பாட்டெல்லாம் பிடிச்சிருந்துச்சு தான.. அதெல்லாம் இதில இருக்கு..” என்ற பாலா.. எளிமையாக அவளுக்கு அதை பயன்படுத்தும் முறையை விளக்கினான்.
பள்ளியில் படிக்கும் போது கடினமான பாடங்களை பாலா சொல்லிக் கொடுத்தால் எளிதாக புரிந்து கொள்வாள் கங்கா.
இது ஒன்றும் அந்த அளவு கடினம் இல்லையே.. கீர்த்தனாவிடம் கேட்டாலும் அவள் சொல்லிக் கொடுக்க மாட்டாள்.
“இது தான் கேமரா..” என பாலா சொல்ல.. “இதுவா..” என விழிகளை விரித்தாள் கங்கா.
கீர்த்தனா அவளுடன் செல்பீ எடுத்து.. வாட்ஸப்.. பேஸ்புக்.. என ஏதேதோ சொல்வாள்.. தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கங்கா அதைப்பற்றி கேட்டால்.. “அதெல்லாம் உனக்கெதுக்கு..” என விலகிச் சென்று விடுவாள்.
அதெல்லாம் இவ்வளவு எளிதா.. என்றிருந்தது கங்காவுக்கு.
“இதோ.. இதை தொட்டா போதும்.. போட்டோ எடுத்தாச்சு.. அவ்ளோதான்..” என பாலா செய்து காட்ட.. “இவ்ளோதானா..” என கேட்டாள் கங்கா குழந்தை போல.
“நா.. நான் ஒரு டைம் எடுத்து பார்க்கவா..” என கேட்ட கங்கா.. இதான.. இதை தான தொடணும்.. என பாலாவிடம் ஒவ்வொன்றாக கேட்டு.. போட்டோ எடுத்தாள்.
“நிஜமாவே போட்டோ எடுத்துட்டேனா பாலா..” என சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள் கங்கா.
தன் அம்மாவின் புகைப்படம்.. மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்த சதாசிவம்.. வீட்டில் பூத்திருந்த மலர்கள்.. தமயந்தி.. ரத்தினவேல்.. பாலா.. என ஒருவரையும் விட்டு வைக்காமல் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள் கங்கா.
“பேட்டரி கொஞ்சம் வீக்.. அடிக்கடி சார்ஜ் போட வேண்டியிருக்கும்..” என கங்காவிடம் சொன்ன பாலா.. அவளுக்கு பிடித்த பாடல்களை எப்படி கேட்பது என்றும் கற்றுக் கொடுத்தான்.
“அப்பா.. இப்டி நில்லுங்க..” “அத்தை மாமா கூட சேர்ந்து நில்லுங்க..” “போங்க அத்தை.. தலையை சாய்ச்சுட்டீங்க..” “மாமா சிரிக்காதீங்க.. அது நல்லா இல்லை.. இப்டி பாருங்க..” என கங்கா செய்த அலப்பறையை பார்த்து மற்றவர்களுக்கு சிரிப்பு தான் வந்தது.
அதையே கீர்த்தி செய்திருந்தால் எரிச்சல் வந்திருக்குமோ என்னவோ.
கீர்த்தனா கங்காவின் செயல்களை ஓர் அலட்சிய பார்வையுடன் கடந்துவிட்டாள்.
பாலாவின் அறையை போல.. கங்கா இருக்குமிடத்தையும் இசை நிறைக்க தொடங்கி இருந்தது.
“அவனை மாதிரியே உன்னையும் மாத்திட்டானா..” என தமயந்தி சலிப்புடன் கூறினாலும்.. கங்கா முகத்தில் இருந்த சந்தோஷம் அவருக்கும் மகிழ்ச்சியை தான் ஏற்படுத்தியது.
என்னதான் பாடல்.. கேமரா.. என புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்த போதும்.. கீர்த்தனாவிடம் இருந்த மாற்றம் கங்காவுக்கு உறுத்தலை தான் தந்தது.
கீர்த்தனாவின் தேர்வுகள் தொடங்க இருந்ததால் அதன்பின் இதுபோன்ற பிரச்சனைகள் வராது என தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள் கங்கா.
“கீது.. எல்லா எக்ஸாமும் முடிஞ்சிட்டுல்ல.. இன்னைக்கு..” என கண்ணடித்தான் அரவிந்த்.
“சரி சரி.. லேட் பண்ணக்கூடாது.. என் அக்கா.. அப்புறம் அட்வைஸ் பண்றேன்னு கழுத்தறுப்பா..”என சலித்துக் கொண்டு அவனுடன் சென்றாள் கீர்த்தனா.
மதன் தன் சொந்த வேலையாக வந்திருக்க.. அவனை அழைத்துச் செல்ல.. தன் பைக்கில் வந்தான் பாலா.
கீர்த்தனாவும் அரவிந்தும் லாட்ஜில் இருந்து வெளியேறுவதை அப்போது கவனித்தான் பாலா.
பாலாவின் பார்வையை கவனித்த மதன்.. “இது ரொம்ப நாளா நடக்குது டா.. அடிக்கடி இங்க அவங்கள நான் பார்க்கிறேன்.. லவ் பண்றாங்க போல..” என்றான்.
“இது லவ்வா.. ச்சீ..” என அருவெறுப்பாக இருந்தது பாலாவுக்கு.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top