WatTruyen.Top

வரம் நீயடி..

💞 14 💞

jamunaguru

அஞ்சலியிடம் உதயா சொல்லிவிட்டானா.. இல்லையா.. என புரியாமல் ரவிச்சந்திரனும் சாரதாவும் தவித்துக் கொண்டிருந்தனர். அஞ்சலி முன் காட்டிக் கொள்ளாமல் உதயாவிடம் பேச எண்ணினர்.

அஞ்சலி அந்த வீட்டுக்கு வந்தபின் அஞ்சலி விபுவுடன் சாரதா அந்த அறையில் தங்கிக்கொள்ள.. ரவிச்சந்திரன் உதயாவின் அறையில் தங்கியிருந்தார்.

உதயாவின் காதல் சாரதாவுக்கும் ரவிச்சந்திரனுக்கும் தெரியாது என எண்ணிக் கொண்டிருந்த அஞ்சலி.. உதயா தன் அறையில் இருப்பது அவர்களுக்கு தெரியக்கூடாது என எண்ணினாள். ஆனால் எப்படி உதியை எழுப்புவது என புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

மானசி தூக்கம் வருவதாக சொல்லி எழுந்து சென்றுவிட.. ரவிச்சந்திரனும் அறைக்கு செல்ல எழுந்தார். சாரதாவும் அறைக்குள் செல்வாரே.. உதி வேறு இருக்கிறானே.. எப்படி தடுப்பது என யோசித்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு.. ரவிச்சந்திரன் அந்த அறையில் உதயாவை தேடுவார் என்பது மறந்து போயிற்று.

உதயாவிடம் நடந்ததை கேட்டுவிட எண்ணி அறைக்குள் வந்த ரவிச்சந்திரன் உதயாவை காணாமல் விழித்தார்.

“உதய் எங்க மா.. இந்த நேரத்துல எங்க போனான்..” என அஞ்சலியிடம் கேட்டார் ரவிச்சந்திரன்.

சாரதாவை அறைக்குள் செல்லவிடாமல் தடுப்பதற்கு யோசித்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு.. அவர் கேட்டதும் தான் உதயாவின் அறை அது என்பது நினைவுக்கு வர.. என்ன பதில் சொல்வது என புரியாமல் விழித்தாள்.

“உன்கிட்ட எதுவும் சொல்லலையா மா.. நேத்து நைட்ல இருந்து போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருக்கு..” என்றார் சாரதா.

அஞ்சலியிடம் தன் காதலை வெளிப்படுத்தினால்.. வீட்டை விட்டு சென்று விடுவாளோ என பயந்து சொல்லாமல்.. வீட்டுக்கும் வராமல் இருக்கிறானோ.. என பதறினார் சாரதா.

“போன் ரூம்ல தான் இருக்கு..” என்றார் ரவிச்சந்திரன்.

“அண்ணன் அப்டி எங்க போயிருப்பான்.. உங்ககிட்ட எதுவும் சொல்லலையா அண்ணி..” என கேட்டபடி மானசியும் அங்கே வர.. எல்லோரும் அஞ்சலியை பார்த்தனர்.

“உதி எங்கையும் போகலை.. என் ரூம்ல தான் தூங்கிட்டு இருக்கான். ஆ.. ஆனா அதை எப்டி சொல்றது.. சொன்னா.. என்னையும் உதியையும் தப்பா நினைப்பீங்களே..” என தவித்த அஞ்சலி.. “அ.. அது..” என தடுமாறினாள்.

அப்போது விபு தன் அழுகையால் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தான். அஞ்சலி தயக்கத்துடன் நின்று கொண்டிருக்க.. “நீ போடா.. போய் விபுவை பாரு..” என்றார் சாரதா.

அஞ்சலியின் பதற்றத்தை வேறுவிதமாக புரிந்து கொண்டனர் மற்ற மூவரும். “அண்ணன் அண்ணி கிட்ட சொல்லிட்டான் போல ம்மா..” என மானசி சொல்ல ஆம் என்பது போல தலையசைத்தனர் ரவிச்சந்திரனும் சாரதாவும்.

“உதி எங்க போயிருப்பான்.. போனும் எடுத்துட்டு போகலை.. இப்ப என்ன பண்றது..” என தவிப்புடன் கேட்டார் சாரதா.

“அப்டி எங்க போயிட போறான்.. வந்துடுவான்..” என்றார் ரவிச்சந்திரன் சமாதானமாக. மூவரும் என்ன செய்வது என புரியாமல் யோசிக்க தொடங்கினர்.

அஞ்சலி அறைக்குள் வர.. விபுவின் அழுகையில் உறக்கம் கலைந்த உதயா.. மெல்ல விபுவை தட்டிக் கொடுத்து அவனை சமாதானம் செய்ய முயன்றான்.

விபுவை கைகளில் ஏந்திக் கொண்ட அஞ்சலி.. “உதி.. உதி..” என பதற்றமாக மெல்லிய குரலில் அழைத்தாள்.

அவள் பதற்றத்தை உணராத உதயா.. “குட் மார்னிங் அஞ்சு.. சீக்கிரமே எழுந்துட்டீயா..” என கேட்டவாறே புரண்டு படுத்தான்.

“உதி.. சீக்கிரம் எழுந்திரு உதி..” என அஞ்சலி பதறியபடியே.. விபுவை சமாதானம் செய்ய.. விபு ஒரு புறம் அழுகையை நிறுத்த மறுத்தான்.

“விபு நைட்ல தூங்க விடாம பண்ணிட்டானா.. அதான் ரொம்ப டயர்டா இருக்கு.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் அஞ்சு..” என கெஞ்சலாக சொன்னான் உதயா.

“அய்யோ உதி.. அப்பா அம்மா மானசி எல்லாரும் வந்துட்டாங்க..” என அஞ்சலி சொன்னாள்.

“ஹே.. எல்லாரும் வந்தாச்சா. நைட் போன் பண்ணிருப்பாங்களோ.. போன்.. போன்.. எங்க..” என எழுந்து தேடினான் உதயா.

“போன் உன் ரூம்ல இருக்கு உதி..” என அஞ்சலி சலிப்புடன் சொல்ல.. “ஓ..” என்ற உதயா எழுந்து அறையில் இருந்து வெளியேற.. அவன் கைகளை பற்றிக்கொண்ட அஞ்சலி.. “உதி.. நீ போகாத..” என்றாள்.

“என்ன அஞ்சு..” என உதயா புரியாமல் விழிக்க.. “அப்பா அம்மா இருக்காங்க.. நீ இங்க தூங்குனது தெரிஞ்சா தப்பா நினைப்பாங்க..” என்ற அஞ்சலி கண்கள் கலங்கினாள்.

“அஞ்சு.. என்னாச்சு இப்ப.. அப்பா அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும்..” என உதயா சொல்லிக் கொண்டிருக்க.. “அஞ்சலி.. விபு ஏன் அழுதுட்டே இருக்கான்..” என கேட்டபடி சாரதாவும் அந்த அறைக்குள் வந்தார்.

பதறிப்போய் உதயாவின் கரத்தை விடுவித்த அஞ்சலி.. தயக்கத்துடன் சாரதாவை பார்த்தாள்.

உதயா எங்கே சென்றானோ என்ற தவிப்பு நீங்கி.. “உதி.. நீ இங்க தான் இருக்கீயா..” என கேட்டார் சாரதா.

அப்பா அம்மாவுக்கு தெரியும் என உதயா சொன்னதே மனதில் பதியாமல் பரிதவிப்புடன் நின்றிருந்த அஞ்சலியை பார்த்தபடியே.. “ம்.. நைட் விபு ரொம்ப நேரம் தூங்கலை.. அதான் அவன்கூட விளையாடிட்டே இங்கையே தூங்கிட்டேன்..” என்றான் உதயா.

“அதை சொல்றதுக்கு ஏன் அண்ணி அவ்ளோ யோசிச்சீங்க.. நான் அதுக்குள்ள நீங்க சம்மதிக்கலையோனு நினைச்சு பயந்துட்டேன்..” என மானசி இயல்பாக சொல்ல வியப்புடன் விழித்தாள் அஞ்சலி.

“ஆமா உதி.. நைட்ல இருந்து உன் போனும் ஸ்விட்ச் ஆப் ஆகிருந்துச்சா.. அதான்.. என்ன நடந்துச்சோ என்னமோனு தவிச்சிட்டோம்..” என்றார் ரவிச்சந்திரன்.

அஞ்சலி தான் நடப்பதை நம்ப முடியாமல் நின்றிருந்தாள். அவள் மனதை புரிந்து கொண்ட சாரதா.. “எங்களுக்கு ஏற்கனவே தெரியும் டா.. நீ என்ன சொல்லப்போறனு தான் தவிச்சிட்டு இருந்தோம்..” என்றார்.

அவரை அணைத்து அழத்தொடங்கி விட்டாள் அஞ்சலி.. “என்னடா என்னாச்சு..” என அவள் தலையை வருடியபடி கேட்டார் சாரதா.

“நா.. நான் ரொம்ப பயந்துட்டேன் மா.. நீங்க என்ன சொல்லுவீங்களோனு..” என அழுகையுடன் சொன்னாள் அஞ்சலி.

“சரி சரி அழாத டா.. ஒன்னுமில்லை..” என ஆறுதலாக சொன்னார் ரவிச்சந்திரன்.

“அஞ்சு.. அழாத.. விபுவுக்கு பசிக்குது போல.. அப்ப இருந்து அழுதுட்டு இருக்கான் பாரு..” என உதயா சொல்ல.. விபுவை கவனித்தாள் அஞ்சலி.

அஞ்சலிக்கு அவள் விரும்பிய பாசம் நிறைந்த குடும்பம் கிடைத்திட  நிம்மதியாக நாட்கள் நகர தொடங்கியது.

“அம்மா ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அப்பா கிட்ட பேசு ம்மா.. நீயே பார்த்தல்ல.. அந்த பொண்ணு எவ்ளோ அழகா இருந்தா..” என யசோதாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் தீபக்.

“சரி நான் பேசுறேன்..” என யசோதா சொல்ல.. “ரொம்ப தேங்க்ஸ் மா..” என்றான் தீபக்.

சாப்பிட அமர்ந்த வாசுதேவனுக்கு பரிமாறியபடியே பேச்சு கொடுத்தார் யசோதா.

“ரத்தினவேல் அண்ணன் பொண்ணு கல்யாணத்துக்கு ரவி அண்ணனும் சாரதா அண்ணியும் அவங்க பொண்ண கூட்டிட்டு வந்திருந்தாங்க..” என யசோதா சொல்ல.. கேட்டும் கேளாதவர் போல சாப்பாட்டிலே தன் கவனத்தை வைத்திருந்தார் வாசுதேவன்.

யசோதா ஒருமுறை தீபக்கை பார்த்துவிட்டு மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தார்.

“உதயா படிப்பு முடிச்சிட்டு நல்ல வேலைல இருக்கானாம்.. மாசம் எண்பதாயிரம் சம்பளமாம்.. சாரதா அண்ணி சொன்னாங்க.. அவங்க பொண்ணு மானசி கூட இந்த வருஷம் படிப்பை முடிக்க போறாளாம்..” என யசோதா சொன்னார்.

உதயாவை பற்றி சொல்லும் போது லேசாக கனிந்த வாசுதேவனின் உள்ளம் மீண்டும் இறுகிப்போனது.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top