WatTruyen.Top

மறக்குதில்லை மனம்..

13

jamunaguru

குணா தனக்காக தன் தாயையும் தமக்கையையும் எதிர்த்து நிற்பது மதுவின் மனதுக்கு வருத்தமாக இருந்தது. இந்த காதலுக்கான தகுதி தனக்கில்லையே என எண்ணி மனம் நொந்தாள் மது.

குறைந்தபட்சம் குணாவிடம் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிவிடு.. அதன்பின் என்ன நடந்தாலும் சரி.. குணாவுக்கு உண்மையாக இருந்த திருப்தியாவது உனக்கு கிடைக்கும்.. என மதுவின் மனம் சொல்லியது.

“குணா.. நா.. நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்..” என தயங்கி தயங்கி தொடங்கினாள் மது.

“ம்.. சொல்லு மது..” என்ற குணா.. அவள் சொல்ல நினைப்பதை உணர்ந்து கொண்டு.. ஆறுதலாக அவள் கரத்தை பற்றிக் கொண்டான்.

“அ.. அது.. அன்னைக்கு..” என மது தொடங்க.. குணாவின் அலைபேசி இடைஞ்சல் செய்தது.

“முக்கியமான கால் மது.. பேசிக்கிறேன்..” என மதுவிடம் சொல்லிவிட்டு பேசத் தொடங்கினான் குணா.

தொழில் நிமித்தமான அந்த அழைப்பு சில நிமிடங்கள் நீண்டது. மது குணாவிடம் பழைய நிகழ்வுகளை சொல்ல.. தன்னை திடப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

குணா போன் பேசி முடிக்கையில்.. அறைக்கதவு தட்டப்பட்டது. மஞ்சுளா தான்.. குணாவை அழைத்தார்.

“ஆங்.. இதோ வர்றேன் ம்மா..” என்ற குணா மதுவை பார்க்க அவள் ஏக்கமாக அவனை பார்த்தாள்.

அவள் மனதை புரிந்து கொண்ட குணா.. “அக்காவை வீட்டில விடுறதுக்கா இருக்கும்.. நான் கொண்டு விட்டுட்டு வர்றேன்..” என்றான். மறுக்க முடியாமல் சரியென தலையசைத்தாள் மது.

“அக்காவை கொண்டு வீட்டில விட்டுட்டு வா..” என்றார் மஞ்சுளா குணாவிடம்.

சரியென்ற குணாவும் சுமித்ராவை அவள் வீட்டில் விட சென்றான். “உனக்கு எங்களை விட அவதான் முக்கியமா போய்ட்டாளா டா..” என கேட்டாள் சுமித்ரா.

“நீங்களும் வேணும்னு தான் நினைக்கிறேன்..” என்றான் குணா.

“இனிமே அவளை தேடமாட்டேன்னு சொன்னதெல்லாம் பொய்.. அவளைத்தான் தேடி அலைஞ்சிருக்க..” என்றாள் சுமித்ரா.

எதுவும் சொல்லாமல் சிரித்தான் குணா. “சிரிக்காத.. அவளை எங்க பார்த்த.. சொல்லு..” என கேட்டாள் சுமித்ரா.

“நான் இப்ப வாங்கினேன்ல.. அந்த கம்பெனில தான் வேலை பார்த்துட்டு இருந்தா..” என்றான் குணா.

“இதெல்லாம் தேவையா அவளுக்கு..” என சலித்துக் கொண்டாள் சுமித்ரா.

“அக்கா நீங்களும் அவளை புரிஞ்சுக்கணும்.. வீட்டை விட்டு எல்லாம் நான் தான்னு நம்பி வந்தா.. அன்னைக்கு அம்மா கூட சண்டை வந்ததும் எனக்கு தான் போன் பண்ணா.. நானும் மீட்டிங் டென்ஷன்ல கோபத்தை காட்டிட்டேன்.. அதான் அவ ப்ரெண்ட் கூட போய் தங்கியிருக்கா..” என்றான் குணா.

“அவளை கூட்டிட்டு நேரா நம்ம வீட்டுக்கு வர வேண்டியது தான.. எதுக்கு அவங்க வீட்டில போய் தங்குன..” என கேட்டாள் சுமித்ரா.

“அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. அதான் அங்க கூட்டிட்டு போனேன்.. அது ஒரு குத்தமா..” என சிரித்தபடியே கேட்டான் குணா.

“எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லு..” என்ற சுமித்ரா தன் வீடு வர.. காரிலிருந்து இறங்கிக் கொண்டாள்.

“வீட்டுக்குள்ள வந்துட்டு போடா..” என குணாவை சுமித்ரா அழைக்க.. “வேண்டாம் க்கா.. அம்மா சாப்பிடாம இருப்பாங்க.. நான் சாப்பிட எதாவது வாங்கிட்டு வீட்டுக்கு போறேன்..” என்றான் குணா.

“சரி.. அம்மாவை பார்த்துக்கோ.. அவளையும் கொஞ்சம் ஒழுங்கா இருக்க சொல்லு..” என சுமித்ரா சொல்ல.. புன்னகையோடு விடைபெற்றுக் கொண்டான் குணா.

சாப்பாடு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த குணா.. தன் அன்னை மஞ்சுளாவை சாப்பிட அழைத்தான்..

“வேண்டாம்.. நீ போ.. போய் சாப்பிடு..” என்றார் மஞ்சுளா.

“அம்மா.. இன்னும் என்னமா..” என சோர்வாக கேட்டான் குணா.

“அதான் நான் தான் எல்லா தப்பும் பண்ணேன்னு நினைக்கிறல்ல நீ..” என மஞ்சுளா கண்ணீருடன் சொன்னார்.

“அம்மா.. நான் அப்டி சொல்லலை.. அவமேலயும் தப்பு இருக்கு.. இல்லைனு சொல்லலை..” என்றான் குணா சமாதானமாக.

சற்று நேரம் அமைதியாக இருந்த மஞ்சுளா.. “சரிடா.. உன் சந்தோஷம் தான் முக்கியம் எனக்கு.. அவதான் உனக்குனு கடவுள் எழுதிருக்காரு.. அதை மாத்த நான் யாரு..” என்றார்.

லேசான புன்னகையோடு.. “சரிம்மா.. சாப்பிட வாங்க..” என்றான்.

சாப்பிட வந்து அமர்ந்த மஞ்சுளா.. “அவளை எங்கடா..” என குணாவிடம் கேட்டார். “இதோ கூட்டிட்டு வர்றேன்..” என்ற குணா.. மதுவை சாப்பிட அழைக்க அறைக்கு சென்றான்.

குணாவிடம் எப்படி சொல்வது என மனதுக்குள் பலமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள் மது. ஆனால் குணாவை கண்டதும் எல்லாம் மறக்க.. “குணா.. நா.. நான்..” என மது தடுமாறினாள்.

அவள் மனம் புரிந்தாலும்.. “சாப்பிட வா மது..” என்றான் குணா.

“அ.. அது..” என மது சொல்ல முடியாமல் தவிக்க.. “சாப்பிட்டு.. அப்புறமா பேசலாம் மது..” என அழைத்துச் சென்றான்.

சாப்பிடும் வேளை குணா தான் இருவரிடமும் இயல்பாக பேசினான். மஞ்சுளாவும் மதுவும் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

சாப்பிட்டு முடித்து அறைக்குள் வந்தனர் மதுவும் குணாவும். மது தன் எண்ணங்களில் மூழ்கியிருக்க.. குணாவின் அலைபேசி ஒலித்தது.

“திவ்யா தான்..” என்ற குணா மதுவிடம் போனை நீட்டினான். “நீ பேசிட்டு இரு.. நான் கதவெல்லாம் பூட்டிட்டு வந்துடுறேன்..” என குணா அறையில் இருந்து வெளியேறினான்.

“ஹலோ.. திவ்யா..” என மது சொன்னாள்.

“மது இப்ப குணா அண்ணா வீட்டிலயா இருக்க..” என மதுவின் குரலை கேட்டதும் உற்சாகமாக பேசினாள் திவ்யா.

“ம்.. சாயந்திரம் தான் அப்பாவும் அம்மாவும் கொண்டு வந்து விட்டாங்க..” என்றாள் மது.

“உன் மாமியார் எதுவும் சொன்னாங்களா..” என கேட்டாள் திவ்யா.

“அப்பா அம்மா கிட்ட பேசவேயில்லை.. என்கிட்ட கேட்க வேண்டியதெல்லாம் குணா கிட்ட கேட்டாங்க.. பாவம் அவரு.. ஏதோ சொல்லி சமாளிச்சாரு..எனக்கு தான் கஷ்டமா இருக்கு..” என்றாள் மது.

“இன்னும் என்ன கஷ்டம்.. இனிமே சந்தோஷமா இரு..” என்றாள் திவ்யா.. மதுவின் வாழ்க்கை சீராகி விட்ட திருப்தியுடன்.

“திவ்யா.. நா.. நான் குணா கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்னு நினைக்கிறேன்..” என்ற மது.. “குணா அதை எப்டி எடுத்துப்பாரோனு பயமா தான் இருக்கு.. திரும்பவும் குணாவை பிரிஞ்சிடுவேனோனு கூட இருக்கு.. ஆனா மறைச்சு மனசுக்குள்ளே வச்சிட்டு அந்த அவஸ்தை தாங்க முடியலை..” என தன்போக்கில் பேசிக் கொண்டே செல்ல திவ்யாவுக்கு சிரிப்பாக வந்தது.

“அண்ணாவுக்கு எல்லாம் தெரியும் மது..” என திவ்யா சொல்ல.. “தி.. திவ்யா நீ என்ன சொல்ற..” என்ற மதுவின் குரல் நடுங்கியது.

“ஆமா மது.. நானும் எல்லாத்தையும் சொல்லிடு சொல்லிடுனு சொல்லிட்டே இருந்தேன்.. நீ கேட்கவே இல்லை.. குணாவை தூரத்துல இருந்தே பார்த்துக்கிறேன்.. அதுவே எனக்கு போதும்னு பேசிட்டு இருந்த..

நீ சரிபட்டு வரமாட்டனு தான்.. உனக்கு தெரியாம பேசலாம்னு நான் வந்தேன்.. ஆனா அன்னைக்கு உன்னை காணலைனு குணா அண்ணா சொன்னாரு.. ஏன் இப்டி என்கிட்ட இருந்து ஓடி ஒளியுறானு அண்ணா புரியாம நின்னப்ப.. நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்..” என திவ்யா விளக்கமாக சொல்லி முடிக்க.. மதுவின் மனம் நடந்தவைகளை தீவிரமாக ஆராய்ந்தது.

“எல்லாம் தெரிஞ்ச பிறகும்.. குணா என்னை தேடி கண்டுபிடிச்சு.. அ.. அப்ப..” என மது வார்த்தைகளின்றி தடுமாற.. “ஆமா மது அண்ணா உன்னை அவ்ளோ லவ் பண்றாரு..” என திவ்யா சொன்னாள்.

போனை கட் பண்ணினாளா.. இல்லையா அதுகூட உணராமல் குணாவை மதுவின் மனம் தேட.. அறைக்குள் வந்து கதவை தாழிட்டுக் கொண்டிருந்த குணாவை இறுக்கி அணைத்துக் கொண்டாள் மது.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top