11
தங்கள் காதலை எதிர்த்த தன் அப்பாவே குணாவை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டார்.. ஆனால் என்ன செய்வது எனக்கு குணாவுடன் வாழ கொடுத்து வைக்கவில்லையே.. நா.. நான்.. நினைக்கவே மதுவின் உடலெல்லாம் கூசியது.
இந்த தவிப்புடன்.. இந்த அருவெறுப்புடன் குணாவுடன் வாழ முடியாது.. அப்பா அம்மா உரிமையாக மாப்பிள்ளை மாப்பிள்ளை என்கிறார்கள்.. இப்போதைக்கு குணாவிடம் மட்டும் இனி சேர்ந்து வாழ்வது நடக்காது என்பதை சொல்லிவிட வேண்டும்.. என உறுதியோடு முடிவு செய்தாள் மது.
எப்படி சொல்வது.. சொல்வதற்கு தனக்கு திடம் இருக்கிறதா என்பதையெல்லாம் எண்ணி பார்க்காமல்.. சொல்லிவிட வேண்டும் என்பதை மட்டும் மனதுக்குள் நினைத்தபடி மெல்ல அறைக்குள் நுழைந்தாள் மது.
மதுவை கண்டதும் மெலிதாக புன்னகைத்தான் குணா. அந்த புன்னகையே லேசாக தடுமாறச் செய்ய.. “பா.. பால் எடுத்துட்டு வரவா..” என கேட்டாள் மது.
வேண்டாம் என தலையசைத்த குணா.. “உட்காரு மது.. கொஞ்சம் பேசணும்..” என்றான் புன்னகை மாறாமல்.
அமராமல்.. “சொல்லுங்க..” என்றாள் மது.
“உனக்கு நியாபகம் இருக்கா மது..” என விஷயத்தை சொல்லாமல் குணா தொடங்க.. “எதையுமே மறக்க முடியலை குணா.. மறைக்கவும் முடியலை..” என கசப்பான நிகழ்வுகளை எண்ணி தவித்தாள் மது.
குணா எப்போது எழுந்து வந்தான் என்பதை மது கவனிக்கவில்லை. திடீரென பின்னிருந்து அவளிடையில் கரம் வைத்து அணைத்தான் குணா.
விலக நினைத்து.. அவன் கரத்தின் மேல் கைவைத்தாள் மது. “இந்த ரூம் உனக்கு நியாபகம் இருக்கா மது..” என குணா கேட்க.. “கல்யாணத்துக்கு முன்னாடி இதுதான் என் ரூம்.. அதுக்கென்ன..” என புரியாமல் விழித்த மது குணாவின் குரலில் இருந்த வேறுபாட்டை கவனித்தாள்.
“நான் இந்த வீட்டில இந்த ரூம் மட்டும் தான் மது பார்த்திருக்கேன்.. இந்த ரூமை விட அதிகமா உன்னை.. உன்னை மட்டும்..” என்றான் குணா மதுவின் நெற்றியில் தொடங்கி.. ஒற்றை விரலால் வருடியபடி.
குணாவின் தீண்டலும் குரலும் கிறக்கம் தர.. விலக நினைத்ததை.. உறுதியான முடிவுடன் சொல்ல நினைத்ததை.. மறந்து கொண்டிருந்தாள் மது.
“இந்த ரூம்ல வச்ச தான மது.. என்கூட வீடியோ கால் பேசுவ..” என குணா சொன்னதும் பழைய நினைவுகளுக்கு மதுவின் மனம் சென்றது.
“மது.. நைட்டியோட படுத்துட்டே பேசுன.. நியாபகம் இருக்கா மது..” என்ற குணாவின் விரல்கள் அவள் கழுத்தை வருடின.
“மது.. ஒரு டைம் குளிச்சிட்டு டவலோட இருக்கேன்னு சொன்னனு ஆசையா வீடியோ கால் பண்ணா.. கண்ணை மட்டும் காட்டி என்கிட்ட விளையாடினல்ல..” என இப்போது போல சோகம் காட்டி குணா சொல்ல.. லேசாக சிரிப்பு வந்தது மதுவுக்கு.
“அப்புறம் ரொம்ப கெஞ்சின பிறகு.. மேடம் தயவு பண்ணி.. இந்த கழுத்து வரைக்கும் காட்டுனீங்க..” என சொன்ன குணா.. மதுவை தன்புறம் திருப்பினான்.
குணாவின் குரலிலும்.. அவன் சொன்னதன் நினைவுகளிலும் உண்டான வெட்கத்தை மறைக்க முடியாமல் மது திண்டாடினாள்.
அவள் வெட்கத்தை பருகிய குணா.. “அப்ப.. இந்த கழுத்துல சொட்டு சொட்டான நின்ன தண்ணீரை அப்படியே என் உதட்டால துடைச்சு விடணும் போல இருந்துச்சு மது..” என்ற குணா.. செயலிலும் இறங்க.. வேறெதுவும் நினைவில் இல்லை மதுவுக்கு.
குணாவின் அணைப்பில் இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியுடனே விடியலை சந்தித்தாள் மது. உறக்கத்தில் இருந்த குணாவின் முகத்தை ரசித்தவளின் மனம்.. குணாவிடம்.. பிரிந்து சென்றதற்கான காரணத்தை.. எப்படி சொல்வது.. அது குணாவுக்கு தெரிய வேண்டாம்.. என பதறியது.
சொல்லாமல் மறைப்பது குணாவுக்கு செய்யும் துரோகம் இல்லையா.. என மதுவின் மனம் கேள்வி எழுப்ப.. செய்வதறியாது திகைத்தாள் மது. ஒன்றவும் முடியாமல் விலகவும் முடியாமல் ஏனிந்த தவிப்பு.. என மனம் நொந்த மது எழுந்து குளிக்க சென்றாள்.
உடைமாற்றி விட்டு மது அறைக்குள் வர.. படுத்திருந்த குணாவின் பார்வை மதுவின் உடலை தீண்டிக் கொண்டிருந்தது.
முந்தைய இரவின் நிகழ்வுகளும்.. தற்போதைய பார்வை தீண்டலும்.. மதுவின் உணர்ச்சிகளை தூண்டியது.
குணா புன்னகையோடு படுக்கையில் இருந்து எழுந்து வர.. “அ.. அது.. நா.. நான்.. போய்.. டீ..” என மது தடுமாறியபடி சொல்ல.. “ம்.. போ..” என்றான் குணா சிரிப்புடன்.
அறையில் இருந்து வெளியே வந்த மது.. சமையலைறைக்குள் சென்றாள். தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளவே சில நிமிடங்கள் ஆயிற்று மதுவுக்கு.
இரண்டு தினங்கள் குணாவுடன் இதே போல் இன்பமாக நகர்ந்தது. அவ்வப்போது.. குணாவிடம் சொல்லாமல் இருப்பது மட்டும் உறுத்தலாக இருந்தது மதுவுக்கு. அதுமட்டும் இல்லாமல் இருந்தால்.. குணாவுடன் இருக்கும் நிமிடங்கள் தான் சொர்க்கம் என தோன்றியது மதுவுக்கு.
தேவியின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் இருந்தது. அன்று குணா தன்னால் வரமுடியாது என மட்டும் போன் செய்தான்.
குணாவின் அருகில் இருக்கும் வரை.. நினைவுக்கு வராத எல்லாம் மனதுக்குள் உழல.. தவித்துக் கொண்டிருந்தாள்.
இரண்டு நாட்கள் குணாவால் வரமுடியவில்லை. மகளின் தவிப்பை பார்த்த.. தேவியும் மேகநாதனும்.. “இரண்டு நாளே தாங்க முடியலை.. இரண்டு வருஷம் எப்டித்தான் பிரிஞ்சு இருந்தாளோ..” என நினைத்துக் கொண்டனர்.
அடுத்த நாள் வீட்டில் ஒருவித பரபரப்பு இருந்தது.. அடிக்கடி எதையோ போனில் பேசிக் கொண்டிருந்தார் மேகநாதன். ஏதோ பொருட்கள் வாங்க என்பது மதுவுக்கு புரிந்தது.. ஆனால் எதற்கு திடீரென இதெல்லாம் என புரியவில்லை.
தேவி மதுவின் நகைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். திடீர்னு என்னாச்சு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என நினைத்துக் கொண்டாள் மது.
“மது கிளம்புடா..” என தேவி வந்து சொல்ல.. “எங்க..” என கேட்டாள் மது.
“மாப்பிள்ளை வீட்டுக்கு மா..” என மேகநாதன் சொல்ல அதிர்ந்து போனாள் மது.
குணா வீட்டுக்கு.. நா.. நான் எப்டி.. ஓ.. அத்தைக்கும் அண்ணிக்கும் நான் வந்தது தெரிஞ்சிருக்கும்ல.. அதான் குணா இரண்டு நாளா வரலை போல.. என நினைத்தாள் மது.
“நடந்து முடிஞ்சதுல யார் மேல என்ன தப்புனு லாம் இன்னும் யோசிச்சிட்டு இருக்காம.. இனிமே என்ன செய்யணும்னு யோசிக்கலாம் டா..” என்றார் மேகநாதன்.
“மாப்பிள்ளை வீட்டில மத்தவங்க எப்டி நடந்துக்கிட்டாலும்.. மாப்பிள்ளை உன்மேல பாசமா தானடா இருக்காரு.. எல்லாம் சரியாகிடும்..” என்றார் தேவி.
நகை பொருள் அது இதுனு அதெல்லாம் எதுக்கு.. என மது புரியாமல் விழிக்க.. “முன்னாடியே உன் கல்யாணத்துக்கு இதெல்லாம் நாங்க பண்ணிருக்கணும் டா.. அப்ப புத்தி கெட்டுப் போய்.. சரி விடு.. அதான் எல்லாம் சரியாகிடுச்சே.. இப்பவாச்சு உனக்கு இதெல்லாம் செஞ்சு நாங்க சந்தோஷப்பட்டுக்கிறோம்..” என்றார் மேகநாதன்.
அவர்களுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என மதுவுக்கு தெரியவில்லை.
“மாப்பிள்ளைக்கு போன் பண்ணி சொல்லிடுங்க..” என தேவி சொல்ல.. “மது ரெடியாகிட்டு வா டா.. நான் மாப்பிள்ளைக்கு போன் பண்ணி சொல்றேன்..” என்றார் மேகநாதன்.
அப்பா அம்மாவையே என்னால் சமாளிக்க முடியவில்லையே.. குணாவின் வீட்டில்.. அத்தை.. அண்ணி.. என்னவெல்லாம் கேட்பார்களோ.. எப்படி சமாளிப்பது.. என மது தவிக்க அவள் மனதில் இருப்பதை அறியாமல் அவளை குணாவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் மேகநாதனும் தேவியும்.
மலர்ந்த முகத்துடன் அவர்களை வரவேற்றான் குணா. பயத்துடன்.. தவிப்புடன்.. அங்கே வந்தாள் மது.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top