WatTruyen.Top

நேசிக்க நெஞ்சமுண்டு..

❤ 09

jamunaguru

💕💕 கொஞ்சம் unexpectedஆ தான் இருக்கும் இந்த epi.. மனசை திடப்படுத்திக் கொண்டு வாசிக்கவும்.. 💕💕

செழியன் தன் மனதில் இருந்தவளின் பெயரை ஆர்த்தியிடம் சொல்லும் முன்.. மிதுன் அங்கே வந்து சேர்ந்தான்.

மிதுனை கண்டதும் ஆர்த்தி.. “டேய் இவன் இப்ப என்ன சொன்னான் தெரியுமா..” என ஆரம்பிக்க.. கையை காட்டி அவள் பேச்சை நிறுத்தினான் மிதுன்.

“அதுக்கு முன்னால நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. அதை கொஞ்சம் அமைதியா கேளு ப்ளீஸ்..”என்றான் மிதுன் ஆர்த்தியை பார்த்து.

அப்படி என்ன முக்கியமான விஷயம் என ஆர்வத்துடன் அவன் முகத்தை பார்த்தனர் ஆர்த்தியும் செழியனும்.

“நானும்.. சித்துவும் லவ் பண்றோம்..” என்றான் மிதுன் கண்கள் ஒளிர.

அதைக் கேட்ட இருவர் முகத்திலும் முதலில் அதிர்ச்சி பரவியது. அதை மெல்லிய புன்னகையோடு விழிகளை உருட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தான் மிதுன்.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட ஆர்த்தி.. சந்தோஷத்தில் குதித்தபடி.. “எப்ப இருந்து டா.. ஏன்டா முன்னாடியே சொல்லலை.. சித்துவும் சொல்லாம மறைச்சிட்டாளே.. ரொம்ப சந்தோஷமா இருக்கு டா.. எனக்கு.. நீங்க இரண்டு பேரும்.. லவ் பண்றது..” என சொன்னாள்.

அவளின் சந்தோஷம் மிதுனின் உற்சாகத்தை மேலும் கூட்ட.. “ஓகே bye.. நான் கிளம்புறேன்.. சித்துமா வெயிட்டிங்..”என்றான்.

செழியன் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருப்பதை கவனித்தவன்.. “நீ ஏன்டா இப்டி இருக்க.. நான் இந்த ஷாக்க இவகிட்ட இருந்து தான் எதிர்பார்த்தேன்.. அவளே குதிச்சிட்டு இருக்கா..”என்றான்.

“ஏன்டா முன்னாடியே சொல்லலை..” என தன் அதிர்ச்சியில் இருந்து வெளிவராமலே கேட்டான் செழியன்.

“நீங்களே கண்டுபிடிச்சிடுவீங்கனு நினைச்சேன் டா.. சித்து கூட அடிக்கடி உங்ககிட்ட சொல்ல சொல்லுவா.. நான் தான்..”என இழுத்தான் மிதுன்.

“சரி சரி.. நான் கிளம்புறேன்.. இன்னைக்கு சித்து கூட நானும் ஊருக்கு போறேன்.. சித்துவோட அம்மா கிட்ட பேசுறதுக்கு..”என்றான் மிதுன்.

“டேய் இவ்ளோ தூரம் வந்துட்டீங்களா..” என அதிர்ச்சியும் சந்தோஷமுமாக பேசிக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.

செழியன் தான் தன் மனதில் ஆழமாக வேர் விட்டிருந்த அந்த காதலை அறுத்தெறிய வழியறியாது தவித்துக் கொண்டிருந்தான்.

மிதுன் தந்த ஆனந்த அதிர்ச்சியில்.. ஆர்த்தி செழியனின் காதலை மறந்து விட்டிருந்தாள்.

செழியன் தான் பாவம்.. தான் நேசித்தவளின் மனதில் தான் இல்லை என்ற வலியையும்.. அவள் தன் நண்பனின் காதலி என்ற உண்மையையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறினான்.

சித்ரா மிதுனின் வருகையை எதிர்பார்த்து கல்லூரி வாயிலில் காத்திருந்தாள். தன் அம்மா தங்கள் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பயமும் பதற்றமும் இருந்தது மனதில்.

புன்னகையோடு கல்லூரியை நோக்கி.. தன் சித்துவை காண ஆசையுடன் வந்து கொண்டிருந்தான் மிதுன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் பிரேக் இன்றி விரைந்து வந்த வாகனம் ஒன்று மோதி.. சித்ராவின் கண் முன்னே.. இரத்த வெள்ளத்தில் துடித்தான் மிதுன்.

“மிதுன்.. மிதுன்..”என கதறினாள் சித்ரா.

மிதுன் தன் சித்துவின் கரத்தை அழுந்த பற்றினான். “என்னை விட்டுவிடாதே..” என்பது போல இருந்தது அந்த அழுத்தம். வழக்கமான மென்மை அதில் இல்லை.

யார் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தார்கள் எப்படி ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்தார்கள் என்பது சித்ராவின் கருத்தில் இல்லை.

தன் கைகளில் உறைந்து போயிருந்த மிதுனின் இரத்தத்தை வெறித்தபடி இருந்தாள் சித்ரா.

நடந்ததை அறிந்து அங்கே வந்த ஆர்த்தியை அணைத்தபடி அழுதாள் சித்ரா.

“மிதுன்.. மிதுன்.. இல்லை.. அவனுக்கு எதுவும் ஆகாது.. அவனால என்னை விட்டு போக முடியாது.. போகமாட்டான்.. நிறைய இரத்தம்.. இங்க பாரு.. எவ்ளோ இரத்தம்.. மிதுன்.. மிதுன்..” என கண்ணீருடன் புலம்பிக் கொண்டிருந்தாள் சித்ரா.

ஆர்த்தியால் அவளை சமாதானம் செய்யவே முடியவில்லை. சித்ராவின் கதறலை பார்த்த பின்பு.. மிதுன் மீது அவள் கொண்டிருந்த நேசம் இன்னும் தெளிவாக புரிந்தது செழியனுக்கு.

“மிதுனை பார்க்கணும்.. என் மிதுனை பார்க்கணும்..”என சித்ரா கதறி அழ.. அவள் மட்டும் சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டாள்.

அது தன் மிதுன் இல்லை.. வேறு யாரோ என்பது போல தோன்றியது சித்ராவுக்கு.

சில அடிகள் கூட எடுத்து வைக்க முடியாமல் தடுமாறினாள். மெல்ல கண்ணீருடன் அவனருகில் சென்றவள்.. அவன் கையை தன் கரங்களுக்குள் வைத்தபடி.. முகம் பதித்து.. “ப்ளீஸ் மிதுன்.. சீக்கிரம் கண் முழிச்சிடு.. சித்துமா..னு கூப்பிடு..”என மெல்லிய குரலில் சொன்னாள்.

தான் பார்த்து ரசித்த அந்த முகம்.. அதே முகம்.. இல்லை களையிழந்து.. உயிரை பற்றிக் கொண்டு இருந்த அந்த முகத்தை பார்த்தாள் சித்ரா.

மிதுனின் உதடுகள் மெல்ல சித்துமா என அசைவது போல தோன்றியது. இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா.

எப்போதும் அவள் கண்ணீரை துடைக்கும் அவன் கரங்கள்.. அசைவற்று கிடந்தது.

யுகங்களாக வாழ்ந்தாலும் தீராத காதலை சித்துமா என்ற ஒற்றை அழைப்பில் அவளுக்கு வாரி வழங்கியவன்.. உயிரற்ற உடலாக மாறிப் போனான்.

“மிதுன்.. மிதுன்..” என கதறி அழுத அவள் கண்ணீரை துடைக்க அவன் கரங்கள் இனி நீளப் போவதில்லை.

சித்துமா.. என்ற ஒற்றை அழைப்பில் உயிரை ஊடுருவும் அவன் குரலை இனி கேட்கவே முடியாது.

மென்மையாக தீண்டும் அந்த கரங்கள்.. அவன் இதழ்களின் அந்த ருசி.. கண்களில் தெரிந்த அந்த காதல்.. கனிவு.. எதுவும் இனி இல்லை..

நீ எனக்கு சொந்தமானவ.. என சொன்னவன்.. அவளை தனியே தவிக்க விட்டுவிட்டு உயிரின்றி கிடந்தான்.

மனசு விட்டு அழுதால் தீர்ந்துவிடும்.. மறந்து விடுவாள்.. மாறி விடுவாள்.. என எல்லாம் அறிந்த பின்னும் கமலி நம்பினார்.

ஆனால் சித்ராவிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. காபியை கொண்டு வந்து நீட்டினால்.. “மிதுனுக்கு டீ தான் பிடிக்கும்..”என்பாள்.

சாப்பாடு வைத்துக் கொடுத்தால்.. “மிதுன் நல்லா சமைப்பான்.. அந்த மாதிரி இல்லை இது.. அந்த ருசி இல்லை இதில..”என்பாள்.

கிட்டத்தட்ட ஒரு குழந்தை போல கண்ணீருடன் அவளை பார்த்துக் கொண்டார் கமலி. அவ்வப்போது குத்தலாக எதாவது சொல்லும் தம்பி மனைவியின் வார்த்தைகளும் அது எதையுமே உணராமல்.. மிதுன் மிதுன் என புலம்பும் மகளையும் கண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் கமலி.

ஆர்த்தி தன் அண்ணன் வினோத் திருமணம் வரை தங்கள் வீட்டில் இருக்கட்டும் என அழைத்துச் சென்றாள் சித்ராவை.

பெரிதாக எந்த மாற்றமும் இல்லை சித்ராவிடம்.. வினோத்தின் யோசனையின்படி.. அவளுக்கு வேலை ஏற்பாடு செய்தனர்.

அவள் வேலைக்கு சென்றாக வேண்டும்.. என்ற கட்டாயம் கமலிக்கு இல்லையென்றாலும் அவளிடம் மாற்றம் ஏற்படும் என எண்ணி சம்மதித்தார்.

பழைய உயிர்ப்பு இல்லை என்றாலும்.. வாழ்ந்தாக வேண்டும் என உணர்ந்து தன் அன்னைக்காக வாழத் தொடங்கி இருந்தாள் சித்ரா.

நண்பனின் இழப்பையும் காதல் தொலைந்த வலியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் வேலை என்ற காரணத்தை வைத்துக் கொண்டு வீட்டுக்கே வராமல் இருந்தான் செழியன்.

சித்ராவின் நினைவு வரும் போதெல்லாம் அவள் மனதில் தான் இல்லை என்ற வலியும்.. அவள் தன் நண்பனின் காதலி என்ற உறுத்தலும் சேர்த்து வதைக்கும் அவனை.

மறக்க நினைத்தாலும் மனதில் இருந்த காதல் அதை செய்ய அனுமதிக்காமல் தவித்துக் கொண்டிருந்தான் செழியன்.

ஆர்த்தியின் திருமணத்தில் மீண்டும் அவளை சந்தித்த போது அவள் மனதில் இன்னும் மிதுன் தான் இருக்கிறான் என்ற உண்மை புரிந்தது.

கமலியின் கவலைக்கு காரணம் சித்ராவின் கல்யாணம் என்பதும் ஆனால் அவள் மனதிலும் வாழ்விலும் மிதுனை தவிர யாருக்கும் இடமில்லை என்பதும் புரிந்தது செழியனுக்கு.

எதுவும் செய்ய இயலாதவனாக இருந்த போது.. வைதேகியும் சத்யநாதனும் சித்ராவை கல்யாணம் செய்து கொள்ள விருப்பமா என கேட்டனர் செழியனிடம்.

அவள் சம்மதம் சொல்வாள் என்ற நம்பிக்கை இல்லாத போதும் தன் சம்மதத்தை சொன்னான் செழியன்.

அவள் சம்மதித்ததே இப்போதைக்கு போதும் என்ற மனநிலையில் இருந்தான் செழியன்.

மிதுனின் போட்டோவை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.

“ஏன்டா என்னை விட்டு போன.. உன் பாசம் வேணும்.. சித்துமா..னு நீ கூப்பிடுறத கேட்கணும்.. எதுவும் பேசாம என்னை கட்டிப்பிடிச்சுக்க நீ வேணும்.. உன் முத்தம் வேணும்.. நீ வேணும் டா.. ஏன் என்னை விட்டுப் போன..” என மிதுன் போட்டோவை பார்த்து அழுது கொண்டிருந்தாள் சித்ரா.

செழியன் சித்ரா திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.. ஒரு இயந்திரம் போல தான் எல்லா நிகழ்வுகளிலும் இருந்தாள் சித்ரா.

வைதேகிக்கு தான் ஆசைப்பட்டது போலவே சித்ரா தன் மருமகளாக வந்ததில் மகிழ்ச்சி. கமலிக்கு தன் மகள் வாழ்வு இனி நன்றாக இருக்கும் என்ற நிம்மதி.

சித்ராவிடம் சிறு மாற்றத்தையாவது இந்த திருமணம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் செழியன் தன்னறைக்குள் நுழைந்தான்.

சித்ரா ஐன்னலருகே நின்றபடி வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள்.

அவள் கோபமாக இருப்பாள்.. அவளிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.. அவள் மனதில் சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும்.. என ஏதேதோ யோசித்தபடி.. மனதுக்குள் தன்னை தயார் செய்து கொண்டான் செழியன்.

“சித்து..” என அழைத்தான் செழியன்.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top