❤ 07
அறையில் இருந்து வெளியே வந்த சித்ரா.. இன்னும் உறங்காமல் இருந்த தாயை கண்டாள். மணியை பார்க்க.. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.
சித்ரா ஏதோ சொல்லத் தொடங்கும் முன்.. கமலி.. கோபத்துடன்.. “இப்டி இன்னும் எவ்ளோ நாளைக்கு ரூமுக்குள்ள அடைஞ்சு கிடந்து அழப்போற..” என கேட்டார்.
பதில் சொல்ல முடியாமல்.. அமைதியாக நின்றிருந்தாள் சித்ரா.
“இப்டி நீ இருந்து என்னத்த சாதிக்க போற.. உனக்கு ஒரு கல்யாணம்.. பண்ணி பார்க்க ஆசைப்படுறது.. தப்பா..” என கோபத்துடன் கேட்டுக் கொண்டிருந்த கமலி திடீரென மயங்கி விழுந்தார்.
திடீரென கமலி மயங்கி விழுந்ததில் பதற்றம் தொற்றிக்கொண்டது சித்ராவை. ஏற்கனவே நாள் முழுக்க சாப்பிடாததில் உடல் பலமின்றி இருந்தது சித்ராவுக்கு.. பதற்றத்தில் உடல் வியர்க்க.. செய்வதறியாது திகைத்தவளின் மூளை யோசிக்க மறுத்தது.
ஆர்த்தி வீட்டிலும் யாருமில்லை.. இருந்தாலாவது வினோத் உதவிக்கு உடனே வந்திருப்பான்.. செழியனுக்கு போன் செய்தாள் சித்ரா.
“நீ பதறாத.. நான் உடனே வர்றேன்..” என்ற செழியன் அந்த நள்ளிரவிலும் உடனே கிளம்பினான்.
கமலியை ஹாஸ்பிட்டலில் அனுமதித்தனர். கமலிக்கு சிகிச்சை அளித்த பின்.. சித்ராவிடமும் செழியனிடமும் பேசிய மருத்துவர்.. “over stressனால வந்த மயக்கம் தான்.. பயப்படுற மாதிரி ஒன்னுமில்லை.. கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க சொல்லுங்க.. காலையில டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்..”என்றார்.
சோர்ந்து போயிருந்த சித்ராவை கண்டதும் புரிந்து கொண்டு டீ வாங்கி கொடுத்தான் செழியன். உடலுக்கும் தெம்பு வேண்டுமே மறுக்காமல் வாங்கிக் குடித்தாள் சித்ரா.
மருந்துகளின் உதவியால் உறங்கிய கமலி.. காலையில் தான் கண்விழித்தார் கமலி.
கமலியிடம்.. “என்னமா கவலை உங்களுக்கு.. stressனால வந்த மயக்கம்னு டாக்டர் சொன்னாங்க.. எதையும் யோசிக்காம ரிலாக்ஸா இருங்க மா..”என்றான் செழியன்.
எதுவும் பேசாமல் அங்கே நின்றிருந்தாள் சித்ரா.
“என்ன பா பண்றது.. பொண்ண பெத்து வச்சிருக்கேன்.. எப்டி கவலைப்படாம இருக்கிறது..” என்ற கமலியின் பார்வை சித்ராவின் மீதிருந்தது.
சித்ரா தன் உதட்டை கடித்தபடி அழுகையை கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சித்தாள். செழியனுக்கு இருவரின் மனநிலையும் புரிந்தாலும் எதுவும் செய்ய இயலாதவனாக.. அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டுக்கு சென்றான்.. அங்கே வைதேகி.. “என்னடா.. எங்க போன.. இவ்ளோ காலையில.. ஒரு போன் பண்ணி சொல்லக் கூடாதா..”என்றார்.
“சித்ராவோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு நைட்ல போன் பண்ணா.. அதான் உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொல்லாம போய்ட்டேன்..”என்றான் செழியன்.
ஏற்கனவே சித்ரா தன் மருமகளாக வந்தால் நன்றாக இருக்கும் என வைதேகியின் மனதில் துளிர் விட்டிருந்த எண்ணம் வலுப்பெற்றது.
அலமாரியில் அழகுற மடித்து வைக்கப்பட்டிருந்த அந்த சட்டையை மெல்ல தன் கைகளால் மென்மையாக தடவினாள் சித்ரா.
❤❤
என்னதான் நீ என்னுடன் இருப்பதே எனக்கு தரும் பரிசு.. என மிதுன் சொல்லியிருந்தாலும்.. அவனுக்கு தான் எதாவது ஒரு பிறந்த நாள் பரிசு கொடுக்க வேண்டுமென ஆசையாக ஒரு சட்டை வாங்கினாள் சித்ரா.
யாரும் அறியாமல் மறைத்து மறைத்து வைத்து மெல்ல தடவிக் கொண்டு.. அதில் மிதுன் எப்படி இருப்பான் என கற்பனைகள் பல செய்து.. காத்திருந்தாள் மிதுன் பிறந்த நாளுக்காக..
சென்ற வருடம் போலவே அதே வீட்டுக்கு அழைத்துச் சென்றான் மிதுன்.
புன்னகையோடு அவளுக்கென பார்த்து பார்த்து வாங்கிய அந்த புடவையை கொடுத்தான் மிதுன்.
“நா.. நானும் உனக்காக இந்த ஷர்ட் வாங்கினேன்..”என தயக்கமாக நீட்டினாள் சித்ரா.
லேசாக முறைத்தபடி.. “நான் உன்கிட்ட என்ன கிப்ட் வேணும்னு கேட்டேன்.. நீ என்ன தர்ற..”என தன் செல்லமான கண்டிப்பை காட்டினான் மிதுன்.
வேண்டாம் என சொல்லிவிடுவானோ என பரிதவிப்புடன் அவனை பார்த்தாள் சித்ரா.
எழுந்து வேறுபுறமாக திரும்பி நின்றான் மிதுன். கோபமாக இருக்கிறானோ.. எப்படி சமாதானம் செய்வது என புரியாமல் தவிப்புடன் அவனை பார்த்தபடி நின்றிருந்தாள் சித்ரா.
புன்னகையோடு அவள் புறம் திரும்பிய மிதுன்.. “சித்துமா.. நான் கேட்காத கிப்ட் லாம் தர்ற.. அப்ப நான் என்ன கேட்டாலும் கிடைக்குமா..”என கண்களில் குறும்பும் சந்தோஷமும் மின்ன கேட்டான் மிதுன்.
அவன் எண்ணம் புரியாமல்.. “எ.. என்னது வேணும்..”என கேட்டாள் சித்ரா.
“ம்.. தெரியாத மாதிரியே கேளு..” என ஒரு மாதிரி குரலில் சொன்னவன் தன் சட்டையின் பட்டனை கழட்டினான்.
மிதுனின் செய்கையால் அவள் விழிகளுக்கு வெளிச்சமான அந்த மார்பின் முடிகள் உள்ளுக்குள் குறுகுறுப்பை உண்டாக்க.. விழிகளை இறுக்க மூடியபடி திரும்பிக் கொண்டாள்.
“போன தடவை கண்ட்ரோல் பண்ணிக்கிறேனு சொன்னானே.. இந்த தடவை அதெல்லாம் பண்ண மாட்டானா.. என்ன பண்ணப் போறான்..” என மனதுக்குள் தவித்த சித்ராவின் உடல் நடுங்கியது.
“சித்துமா..” என்ற அழைப்புடன் அவளை பின்னிருந்து அணைத்தான் மிதுன் வெற்று மார்புடன். அவள் இதயம் மேலும் வேகமாக துடித்தது.
மெல்ல அவளிடம்.. “இன்னைக்கு முழுக்க நீ என் wife..” என்றதும்.. சித்ராவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.
மிதுனின் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சித்தபடி.. “மி.. மிதுன்..” என தடுமாறினாள்.
மெல்ல சிரித்தபடி.. “பயப்படாத சித்துமா.. நான் எதுவும் பண்ண மாட்டேன்..” என மிதுன் சொன்னாலும் சித்ராவின் படபடப்பு குறையவில்லை.
“நீயே ஷர்ட்ட போட்டுவிடு..”என்றான் மிதுன்.
“ம்ஹூம் மாட்டேன்..”என மறுத்தாள் சித்ரா.
அவள் முன் வந்து நின்ற மிதுன்.. “சித்துமா.. என்னைப் பாரு.. ப்ளீஸ்.. நீயே போட்டு விடு.. இங்க தான் வேற யாரும் இல்லைல.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என ஏதேதோ சொல்லி கெஞ்சியும் பிடிவாதமாக மறுத்தாள் சித்ரா.
“நீ போட்டு விடலைனா.. நான் இப்டியே தான் இருப்பேன்.. சட்டை இல்லாம.. இன்னைக்கு முழுக்க..”என நிறுத்தி நிதானமாக சொன்னான் மிதுன்.
அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள் சித்ரா. “நான் இப்டியே இருந்தா.. சட்டை இல்லாம இன்னைக்கு முழுக்க இருந்தா.. என் கண்ட்ரோலும்.. உன் கண்ட்ரோலும் காணாம போயிடும்.. பரவாயில்லையா..”என்றவனின் ஒற்றை விரல்.. அவள் கன்னத்தில் தொடங்கி இதழ்களின் அருகில் வருடியது.
சட்டென்று அவன் விரலை சித்ரா கடிக்க.. “ஆ.. வலிக்குதுடி.. வலிக்குதுடி..”என அலறினான் மிதுன்.
வலியில் மிதுன் துடிக்க.. அவனை பார்த்து சிரித்தாள் சித்ரா.
“சித்துமா.. இப்டியா பண்ணுவ..”என பாவமாக கேட்டவன்.. மீண்டும்.. “ஷர்ட்ட போட்டுவிடு..”என்றான்.
அவனை செல்லமாக முறைத்தபடி சட்டையை போட்டுவிட்டாள் சித்ரா.
“சரி வா சமைக்கலாம்..”என மிதுன் சொல்ல.. “நீதான சமைக்கப் போற.. நான் எதுக்கு..”என கேட்டாள் சித்ரா.
“இன்னைக்கு நீதான் சமைக்கப் போற..” என்றான் மிதுன்.
“நீ வேணா ரிஸ்க் எடு.. நான் லாம் சாப்பிட மாட்டேன்..”என்றாள் சித்ரா.
“அதையும் பார்க்கலாம்.. வா..”என அழைத்துச் சென்றவன்.. அவளை அணைத்தபடியே.. அவள் கையாலே எல்லாவற்றையும் செய்தான். அவ்வப்போது அவள் கன்னத்திலும் கழுத்திலும் தன் இதழ்களின் முத்திரையை பதிக்கவும் அவன் தவறவில்லை.
“சாப்பிடு..”என மிதுன் சொல்ல.. “ம்ஹூம்..”என்றாள் சித்ரா.
“சாப்பிடு..” என தன் வழக்கமான மென்மையான கண்டிப்புடன் சொன்னான் மிதுன்.
பயத்துடனே சாப்பாட்டை வாயில் வைத்த சித்ரா.. சிரிப்புடன்.. “நல்லா இருக்கு..” என்றாள்.
“ம்.. ஊட்டிவிடு..” என மிதுன் சொல்ல.. “நீயே சாப்பிடு..”என்றாள் சித்ரா.
தன் பிடிவாதத்தையும் மென்மையாக காட்டி.. அவள் கையாலே சாப்பிட்டான் மிதுன்.
❤❤
இரு தினங்கள் கடந்திருந்தது. கமலி சித்ராவிடம் பேசவில்லை. அவர் கோபம் வலித்தாலும்.. பேச நினைக்காமல் விலகியே இருந்தாள் சித்ரா.
அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது..
💕💕 மிதுனுக்கு என்னாச்சுனு சீக்கிரமே சொல்லிடுறேன்.. Thanks everyone for your valuable comments..
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top