❤ 40 ❤
ஆதி மித்ராவின் திருமண நாள் நெருங்கியது..
சந்திரமதியின் முன் வந்து நின்றான் கௌதம்.. "எல்லா வேலையும் முடிச்சிட்டேன் டா.. யாழினியை எந்த வேலையும் பார்க்க விடலைடா நான்.."என்றார் பாவமாக.
கௌதம் சிரித்தபடி.. "இன்னும் பத்து நாளைக்கு நீங்க எந்த வேலையும் பார்க்க வேண்டாம் மா.."என்றான்.
அவன் வார்த்தையை நம்ப முடியாமல்.. சந்திரமதி அவனை பார்த்தார்.
"நிஜமா தான்.. மா.. அத்தான் கல்யாணத்துக்காக உங்களுக்கு இந்த special offer.."என்றான் கௌதம்.
அவன் சொன்னதை கேட்டவர்.. "அதுக்குள்ள நாலு மாசம் ஆகிடுச்சா.."என்றார்.
கௌதம் சிரித்தபடி.. "அது கூட தெரியலையா.. ரொம்ப நல்லது.."என்றான்.
ஆதி மித்ராவின் திருமண ஏற்பாடுகளை மாலதியும் ரவிச்சந்திரனும் முன்னின்று பார்த்தனர்.
ஆதிக்கு அவன் அப்பா அம்மா இல்லாத குறை நினைவில் வராத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தனர்.
மித்ராவையும் தன் மகள் போல பார்த்துக் கொண்டார் மாலதி. அவர்களின் நெருக்கமும் அதிகரித்திருந்தது.
கார்த்தி தன் அக்கா விரும்பிய வாழ்க்கை அவளுக்கு கிடைக்க போகும் மகிழ்ச்சியாக இருந்தான்.
கௌதம் ரவிச்சந்திரனுக்கு கல்யாண ஏற்பாடுகளில் உதவியாக இருந்தான்.
யாழினி தன் விருப்பம் போல தான் டெக்கரேஷன் இருக்க வேண்டுமென எல்லாவற்றையும் அவளே பார்த்துக் கொண்டாள்.
சந்திரமதி மகாதேவன் ஸ்வேதா மூவரும் தங்கள் அறையில் பாவமாக அமர்ந்திருந்தனர்.
மகாதேவன்.. "எல்லாருக்கும் வேலை சொல்லிட்டு இருந்தேன்.. இப்ப யார் யாரோ சொல்ற வேலையை நான் பார்க்க வேண்டியதா இருக்கு.."என்றார்.
சந்திரமதியோ.. "நீங்களாவது பரவாயில்லை.. நான் பெத்த பிள்ளையே என்னை பாடாபடுத்துறான்.."என்றார்.
"இரண்டு பேரும் கொஞ்சம் வாயை மூடுறீங்களா.. எல்லாம் உங்களால தான்.."என சலித்துக் கொண்ட ஸ்வேதா.. "இந்த பத்து நாளாவது என்னை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க.."என்றவாறு படுத்துக் கொண்டாள்.
மூவரும் தாங்கள் தீட்டிய திட்டத்தை மறந்து.. தங்களை விட்டா போதும்.. என்ற நிலைக்கு வந்திருந்தனர்.
கல்யாணத்திற்கு முந்தைய நாள்..
கையில் மெஹந்தி வைத்துக் கொண்டிருந்த மித்ரா.. எல்லாரும் அங்கே இருக்க ஆதி மட்டும் மொட்டை மாடிக்கு செல்வதை கவனித்தாள்.
யாரும் கவனிக்காத நேரத்தில் அவளும் ஆதியை பார்க்க சென்றாள்.
"என்ன தனியா இங்க வந்து நிக்கிறீங்க.."என்ற மித்ராவின் குரல் கேட்டு திரும்பினான் ஆதி.
"ஒன்னுமில்லை.."என்று அவள் முகம் பார்க்க.. மித்ராவோ அவன் முகவாட்டத்தை கவனித்தாள்.
"என்னாச்சு.."என சற்று பதற்றமாக கேட்டாள் மித்ரா.
"அப்பா அம்மா நியாபகமாவே இருக்கு.. அதான் தனியா வந்துட்டேன்.."என்றான் ஆதி.
மித்ரா எதுவும் பேசாமல் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
"அம்மாவும் அப்பாவும் இப்ப இருந்திருந்தா ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பாங்க.. அம்மா ரொம்ப சந்தோஷமா இருந்தா குழந்தை மாதிரி நடந்துப்பாங்க.. எல்லா வேலையும் சீக்கிரமா முடிச்சிடணும்னு சுத்திட்டே வருவாங்க..
அப்பா தான் மதிமா கொஞ்சம் பொறுமையா இருன்னு.. அவங்கள சமாளிக்க படாதபாடு படுவாங்க.."என பேசிக் கொண்டிருந்த ஆதி சட்டென தன் பேச்சை நிறுத்தினான்.
"மித்ராவுக்கும் அப்பா அம்மாவை நியாபகப்படுத்திட்டேனே.. அவளுக்கும் கஷ்டமா இருக்குமே.."என மனதுக்குள் பதறியவன் மித்ராவின் முகம் பார்க்க.. அவள் சிரிப்புடன் ஆதியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"சாரி மித்ரா.."என்றான் ஆதி.
"எதுக்கு.."என்றாள் மித்ரா புன்னகையுடன்.
"அ.. அது.. அப்பா அம்மாவை நியாபகப்படுத்திட்டேனா.."என தயக்கமாக மித்ராவை பார்த்தான் ஆதி.
இல்லையென தலையசைத்தாள் மித்ரா.
இருந்தும் தன் தயக்கம் நீங்காமல் ஆதி மித்ராவை பார்க்க.. "அதான் எல்லாமுமா நீங்க என்கூடவே இருக்கீங்களே.."என்றாள் மித்ரா.
புன்னகையுடன் அவளை அணைக்க நினைத்த ஆதி.. அணைக்காமல் விலகினான்.
மித்ரா புரியாமல் அவனை பார்க்க.. ஆதி அவள் கையிலிருந்த மெஹந்தியை காட்டினான்.
யாழினி கல்யாணத்தின் போது நடந்தது நினைவு வந்து மித்ராவும் சிரிக்க.. "அப்புறம் இந்த கௌதமும் யாழினியும் ஒரு வாரத்துக்கு இதையே சொல்லி சிரிப்பாங்க.."என்றான் ஆதி பாவமாக..
அவன் சொன்ன விதத்தில் மித்ரா மேலும் சிரிக்க.. ஆதியும் புன்னகையுடன்.. "வா போகலாம்.."என அங்கிருந்து நகர்ந்தான் மித்ராவுடன்.
ஆதி மித்ராவின் திருமண நாள்..
ஆதி பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த பட்டுப்புடவையில் தன் அழகு மேலும் மெருகேறியிருக்க.. அழகாக ஜொலித்தாள் மித்ரா.
மாலதி.. "என் கண்ணே பட்டுடும் போல.. அவ்ளோ அழகா இருக்க டா.."என்றார் மித்ராவிடம்.
யாழினி.. "அண்ணி சூப்பரா இருக்கீங்க.. அண்ணன் மட்டும் இப்ப உங்கள பார்த்தா வேற யாரும் அண்ணன் கண்ணுக்கு தெரிய மாட்டாங்க.."என சொல்லி மித்ராவை வெட்கத்தில் சிவக்க வைத்துக் கொண்டிருந்தாள்.
பட்டு வேஷ்டி சட்டையில் ஆதியை பார்த்ததும்.. மித்ரா தன் பார்வையை ஆதியை தவிர வேறு எங்கும் செலுத்த முடியாமல் தவித்தாள்.
ஆதியும் மித்ராவை கண்ட நொடி முதல் அவள் அழகில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான்.
ஆதி மித்ராவை தன் மனதில் எப்போதோ மனைவியாக ஏற்றுக் கொண்டிருந்தாலும்.. ஊரறிய அவள் தன் மனைவியாக போகும் நொடிக்காக காதலுடன் காத்திருந்தான்.
மணமேடையில் ஆதியும் மித்ராவும் அமர்ந்திருக்க.. சாரு யாழினி கௌதம் கார்த்தி மாலதி ரவிச்சந்திரன் எல்லோரும் அங்கே நின்று கொண்டிருந்தனர்.
கௌதமும் கார்த்தியும் வேஷ்டி சட்டை அணிந்திருக்க.. "யாழினி.. இரண்டு பேர்ல யாருக்கு வேஷ்டி சட்டை சூப்பரா இருக்கு.."என கேட்டான் கௌதம்.
"கார்த்திக்கு.."என யோசிக்காமல் பதில் சொன்னாள் யாழினி.
கௌதம் அவளை முறைக்க.. எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஆதியும் மித்ராவும் எதையும் காதில் வாங்காமல்.. பார்வையாலே காதலை பரிமாறிக் கொண்டிருந்தனர்.
கௌதம் யாழினியை முறைத்தபடி அவளிடமிருந்து விலகி நிற்க.. யாழினி அவனை நெருங்கி வந்து.. அவன் காதில்.. "என் பதில் தெரிஞ்சிட்டே.. கேள்வி கேட்கிற.. அதான் மாத்தி சொன்னேன்.."என்றாள்.
விழிகள் விரிய.. "அப்டியா பொண்டாட்டி.."என கௌதம் கேட்க.. "ஆமாடா.. லூசு புருஷா.."என யாழினி சொல்ல.. இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
"கெட்டி மேளம்.. கெட்டி மேளம்.."என்ற குரலுக்கு பின்.. மேளச்சத்தம் ஒலிக்க.. அட்சதை தூவி எல்லாரும் வாழ்த்த ஆதி மித்ராவின் கழுத்தில் தாலி கட்டினான்.
இருவரும் தங்கள் அப்பா அம்மாவின் புகைப்படத்தை வணங்கிய பின்.. மாலதி ரவிச்சந்திரனிடமும் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.
சாரு சந்துரு கவின் சதீஷ் எல்லாரும் அன்று முழுக்க உடனிருந்து ஆதி மித்ராவின் மகிழ்ச்சியில் தாங்களும் மகிழ்ந்திருந்தனர்.
புதுமண தம்பதிகள் பெரியவர்களின் ஆசிபெற்றுக் கொண்டு.. தங்கள் வாழ்க்கையை தொடங்க தயாராகினர்.
இருவரும் ஒரே வீட்டில் நான்கு மாதங்களாக இருக்கின்றனர். அந்த அறைக்குள் எத்தனையோ முறை வந்திருக்கிறாள். ஆதியுடன் பலமுறை தனிமையில் இருந்திருந்தாலும்.. இன்று அந்த அறைக்குள் நுழைகையில் மித்ராவின் இதயம் படபடத்தது.
இதயத்துடிப்பின் வேகம் கூடியிருக்க.. மித்ரா ஆதியை பார்த்தாள். ஆதியும் காதலோடு மித்ராவை பார்த்தான்..
கண்களிலே காதல் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்த வேளை.. ஆதி தன் ஒரு கரத்தால் மித்ராவின் இடையை பிடித்து தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
மற்றொரு கரத்தால் அவள் கன்னம் தீண்ட.. விரல்கள் அவள் உதடுகளை வருடத் தொடங்கியது. ஆதியின் தீண்டலில் கிறங்கிப் போனாள் மித்ரா.
உள்ளத்தால் இணைந்த இருவரும் உடலாலும் இணைந்தனர்..
❤❤
"அதுக்குள்ள பத்து நாள் முடிஞ்சிடுச்சா.."என புலம்பிக் கொண்டிருந்தனர் சந்திரமதி மகாதேவன் ஸ்வேதா மூவரும்.
அப்போது அங்கே வந்த ஆதி.. அவர்கள் முன் சில பேப்பர்களை வைக்க.. மூவரும் இன்னும் என்ன செய்யப் போகிறானோ.. என பயத்தில் இருந்தனர்.
"பயப்படாதீங்க.. இது உங்க வீட்டு பத்திரம் தான்.."என ஆதி சொல்ல.. மூவரும் சற்று நிம்மதியடைந்தனர்.
"இனி நீங்க எல்லாரும் அங்கையே போகலாம்.. இதில கொஞ்சம் பணம் இருக்கு.. இத வச்சு புதுசா வாழ ஆரம்பிங்க.. எனக்கு இதுக்கு மேலயும் உங்கள கஷ்டப்படுத்த விருப்பம் இல்லை..
எப்ப உறவை விட சொத்து பெரிசுன்னு நினைச்சீங்களோ.. அப்பவே நீங்க உறவை தொலைச்சிட்டீங்க.."என்றான் ஆதி.
மூவரும் தங்கள் தவறை எண்ணி வருத்தத்தோடு அவனை பார்த்தனர்.
"அப்பா உங்களுக்கு தேவைக்கு அதிகமா கொடுத்தும் உங்களுக்கு அதை காப்பாத்திக்க தெரியலை.. அதே தப்பை நானும் பண்ண தயாரா இல்லை..
ஸ்வேதாவோட கல்யாணம் என் பொறுப்பு.. அதைத்தவிர என்கிட்ட இருந்து வேற எதையும் எதிர்பார்க்காதீங்க.."என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் ஆதி.
ஆதி கௌதமிடம் யாழினி பேரில் இருந்த சொத்துக்களை கொடுத்தான். ஆனால் அதைப்பார்த்த கௌதமின் முகம் வாடியது.
"அத்தான்.. என்னையும் அவங்கள மாதிரி நினைச்சிட்டீங்களா.."என கௌதம் வருத்தமான குரலில் கேட்டான்..
"நான் எப்பவும் உன்னை அப்டி நினைச்சதும் இல்லை.. இனியும் நினைக்க மாட்டேன்.."என்ற ஆதியின் வார்த்தைகளை கேட்டதும் தான் கௌதமிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.
"சித்தியும் சித்தப்பாவும் இதை உன்கிட்ட ஒப்படைக்கணும்னு ஆசைப்படுறாங்க.. அதுதான் சரி.. அதனால தான் நான் இதை உன்கிட்டயே கொடுக்கிறேன்.."என்று ஆதி சொன்னபிறகு.. அதை கௌதம் ஏற்றுக் கொண்டான்.
❤❤
சில மாதங்கள் கடந்திருந்த நிலையில்.. சாரு அழகான ஒரு குட்டி தேவதைக்கு தாயாகியிருந்தாள்.
ஸ்வேதா கௌதமின் ஆபிஸில் வேலை பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.
மகாதேவன் தன் நண்பருடன் சேர்ந்து.. பிஸினஸ் செய்யத் தொடங்கியிருந்தார்.
மித்ராவும் தான் தாயாகப் போவதை தன் உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் உணர்ந்தாள். ஆனால் அதை ஆதியிடம் சொல்லாமல் மறைத்தாள்.
ஆதியுடன் அலுவலகத்தில் இருந்த மித்ரா சோர்வாக இருந்தாள். ஆதியிடம்.. "நான் வீட்டுக்கு போகவா.."என கேட்டாள்.
ஆதியும் அவள் சோர்ந்து போயிருப்பதை கவனித்தான். "என்னாச்சு.. மித்ரா.. ஏன் ரொம்ப டயர்டா இருக்க.. டாக்டர் கிட்ட போவோமா.."என சற்று வருத்தமாக கேட்டான்.
மித்ரா வேண்டாமென மறுத்துவிட்டாள்.
"நீ வீட்டுக்கு போக வேண்டாம்.. அப்புறம் எனக்கு இங்க எந்த வேலையிலயும் கவனமிருக்காது.."என்ற ஆதி.. அங்கிருந்த சோபாவில் அமர்ந்தபடி.. மித்ராவை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டான்.
மித்ரா எதையோ மறைக்கிறாள்.. என்பது ஆதிக்கும் புரிந்தது.
அடுத்த நாள்.. ஆதி அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டு.. மித்ராவுக்காக காத்திருக்க.. மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த மித்ரா மயங்கி விழுந்தாள்.
ஆதி பதற்றமாக.. தன்னறைக்கு மித்ராவை தூக்கிச் சென்று படுக்க வைத்தான்.
மாலதியும்.. "ஒழுங்கா சாப்பிடுறதே இல்லை.. இவளுக்கு என்ன ஆச்சுனு தெரியலை.."என்றவாறு மித்ராவின் அருகில் இருந்து பார்த்துக் கொண்டார்.
சிறிது நேரத்தில் டாக்டர் வந்து மித்ராவை பரிசோதித்துவிட்டு.. மித்ரா தாயாகப் போகும் சந்தோஷமான செய்தியை சொன்னார்.
மித்ரா மயக்கத்தில் இருந்து கண்விழிக்க..
மாலதியும் ரவிச்சந்திரனும் சந்தோஷமாக இருந்தனர்..
ஆனால் ஆதி மித்ராவை முறைத்தபடி.. "உனக்கு முன்னாடியே தெரிஞ்சும் எதுக்கு மறைச்ச.."என கேட்டான்.
மாலதியும்.. "என்ன ஆதி சொல்ற.."என கேட்டார்.
"சொல்லு மித்ரா.."என ஆதி மீண்டும் மித்ராவிடம் கேட்டான்.
"அ.. அது.."என மித்ரா தடுமாற.. அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்ட ஆதி.. சொல்லு என்பதை போல மித்ராவை பார்த்தான்.
"ந.. நமக்கு முன்னாடியே.. யாழினிக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஆனா..
அதான் எனக்கு சொல்ல யோசனையா இருந்துச்சு.."என்றாள் மித்ரா.
"என்ன மா.. நீ.. அதெல்லாம் நடக்கும் போது தான் நடக்கும்.. அப்டியே வச்சிக்கிட்டாலும் நீ இதை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்.."என்றார் மாலதி.
"சரி.. நான் போய் உனக்கு ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்.."என்றவாறு மாலதி அங்கிருந்து சென்றார்.
ஆதி மித்ராவிடம் எதுவும் பேசாமல் இருக்க.. மித்ரா.. "சாரி.."என்றாள்.
"எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு.. மனசுக்குள்ள வச்சிட்டு கஷ்டப்படாத..னு சொல்லிருக்கேன்ல.."என ஆதி லேசான கோபத்துடன் கேட்டான்.
"சாரி.."என்றவாறு மித்ரா ஆதியை அணைத்துக் கொள்ள.. ஆதியும் புன்னகைத்தான்.
கௌதம் வேலை முடித்து வீட்டுக்கு வர.. அவனிடம்.. யாழினி.. மித்ரா கருவுற்றிருக்கும் சந்தோஷமான விஷயத்தை சொன்னாள்.
"சரி.. நாமளும் குழந்தை பெத்துக்கலாமா.."என கௌதம் கேட்டான்.
அந்தக் கேள்வியில் முகம் வாடிய யாழினி.. "சாரி கௌதம்.."என்றாள்.
"எதுக்கு சாரி.."என்றான் கௌதம்.
"பெரியம்மாவும் பெரியப்பாவும் இருந்திருந்தா ஆதி அண்ணா கல்யாணம் தான் முதல்ல நடந்திருக்கும்..
ஆனா நம்ம கல்யாணம் நடந்துடுச்சு.. அண்ணாவுக்கு பிறக்கிற குழந்தை தான் நம்ம குடும்பத்தோட முத வாரிசா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்..
அதான் கொஞ்ச நாள் கழிச்சு நாம குழந்தை பெத்துக்கலாம்னு சொன்னேன்.. உனக்கு.. கஷ்டமா இருக்கா.."என கேட்டாள் யாழினி.
"எனக்கு என் யாழினியா இப்டிலாம் யோசிக்கிறானு ஆச்சரியமா இருக்கு.. சரி வா.. நம்ம வேலையை பார்க்கலாம்.."என்றான் கௌதம்.
யாழினி புரியாமல்.. "என்ன வேலை.."என கேட்டாள்.
"முத வாரிசு வந்தாச்சுல்ல.. நாம இரண்டாவது வாரிசு வர்றதுக்கான வேலையை பார்ப்போம்.."என கௌதம் சொல்ல.. "ச்சீ.. போடா.."என வெட்கத்துடன் அவன் மார்பில் முகம் புதைத்தாள் யாழினி.
❤❤
ஆதி யாழினியின் வளைகாப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டு.. தன் அறைக்கு வர.. அங்கே மித்ராவின் மடியில் தங்கள் மகன் முகிலன் உறங்கிக் கொண்டிருப்பதை புன்னகையோடு பார்த்தான்.
"மித்ரா நீ ரொம்ப மாறிட்ட.."என்றான் ஆதி.
அவன் சொல்ல வருவது புரியாமல்.. குழந்தையை தொட்டிலில் படுக்கவைத்த மித்ரா கேள்வியாய் அவனை பார்த்தாள்..
"இப்பலாம் என் பையன் மட்டும் தான் உன் மடியில படுக்கிறான்.. நான் எப்ப படுக்கிறது.."என ஆதி குழந்தை போல கேட்க.. மித்ரா புன்னகைத்தாள்.
"அதான் உங்க பையன் உறங்கிட்டான்ல.. இப்ப படுத்துக்கோங்க.."என மித்ரா சொல்ல.. ஆதியும் புன்னகையுடன் அவள் மடியில் படுத்துக் கொண்டான்.
ஆனால் ஆதி மித்ரா மடியில் படுத்த சில நிமிடங்களில் முகிலன் அழத்தொடங்கினான்.
மித்ரா சிரித்தபடி முகிலனை எடுக்க எழும்பினாள்.. நான் பார்த்துக்கிறேன் என ஆதி அவனை தூக்கினான்.
"டேய் உனக்கே அப்பாவை பார்த்தா பாவமா இல்லையா.. கொஞ்ச நேரம் உன் அம்மா மடியில படுக்கிறதுக்குள்ள நீ சண்டைக்கு வர்றீயா.."என ஆதி கேட்க..குழந்தை சிரிக்க தொடங்கினான்.
"உனக்கு சிரிப்பா இருக்கா.."என ஆதி குழந்தையை செல்லமாக முறைக்க.. மித்ரா அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கே வந்த கார்த்தி.. குழந்தைக்கு தன் பரிசாக தான் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து தங்கச் செயினை போட்டுவிட்டான்.
அன்பால் நிறைந்திருந்தது ஆதி மித்ராவின் உலகம்..❤❤
❤❤
ரொம்ப lengthy Updateஆ கொடுத்திட்டேனு நினைக்கிறேன்.. எல்லோருக்கும் ரொம்ப பெரிய நன்றி.. இந்த கதை ஆரம்பிச்சப்ப எனக்கே அவ்ளோ பிடிக்கலை.. அப்டியே விட்டுடலாமான்னு கூட யோசிச்சேன். ஒருவழியா உங்களுக்கும் பிடிச்ச மாதிரி எழுதி முடிச்சிருக்கேன்னு நம்புறேன். Thanks all for your support.. உங்க commentsலாம் வாசிக்கும் போது சந்தோஷமா இருந்துச்சு.. வேற எதுவும் ஐடியா வந்தா.. அடுத்த கதையோட உங்க எல்லாரையும் திரும்பவும் சந்திக்கிறேன்.. Thanks for your love n support..❤❤
Jamuna ❤❤
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top