WatTruyen.Top

தொடுவானம்

❤ 33 ❤

jamunaguru

யாழினி இல்லையென தலையசைக்க.. ஆதி என்ன செய்வதென யோசனையில் இருந்தான்.

"இன்னும் என்ன யோசனை.. அவனை கேளுங்க எங்க கொண்டு வச்சான்னு.."என சந்திரமதி சொன்னார்.

"அக்கா.. நான் எடுக்கலை.. அத்தான் நான் எடுக்கலை அத்தான்.."என அழுதான் கார்த்தி.

ஸ்வேதாவும் சந்திரமதியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி அங்கே நடப்பதை ரசித்தனர்.

அப்போது அங்கே வந்த கௌதம்.. "என்ன எல்லாரும் இங்க என்ன பண்றீங்க.."என்றான்.

"கௌதம் அண்ணா கிப்ட்டா தந்த நெக்லஸை காணலை.."என்றாள் யாழினி.

"இதான.. இது ஹால்ல கீழ விழுந்து கிடந்துச்சு.. அத ரூம்ல வைக்க தான் நான் வந்தேன்.."என்றான் கௌதம் நெக்லஸை நீட்டியபடி.

சந்திரமதி ஸ்வேதாவை பார்க்க.. ஸ்வேதா.. "அவன் கோட் பாக்கெட்ல தான வச்சேன்.. அப்புறம் எப்டி.."என யோசித்துக் கொண்டிருந்தாள்.

கார்த்தி அங்கிருந்து அழுதபடியே தன்னறைக்கு செல்ல.. மித்ராவும் ஆதியும் அவன் பின்னாலே சென்றனர்.

கார்த்தி அழுது கொண்டேயிருக்க.. ஆதியும் மித்ராவும் அவனை சமாதானம் செய்ய முடியாமல் திணறினர்.

அங்கே கௌதம்.. யாழினியிடம் நெக்லஸை கொடுத்துவிட்டு.. "பத்திரமா வை.."என்றான்.

அங்கே நடந்ததை அறிந்தவன் சந்திரமதியை பார்த்து.. "ஏன் மா..உங்களுக்கு அறிவே கிடையாதா.. சின்னப் பையன் அவன்.. அவன்கிட்ட இப்டியா பேசுவீங்க.."என்றான் கௌதம்.

அவனை முறைத்தபடி அங்கிருந்து நகர்ந்தார் சந்திரமதி.

அங்கே யோசனையோடு நின்று கெண்டிருந்த ஸ்வேதாவின் கையை பிடித்து இழுத்துச் சென்றான் கௌதம்.

"எதுக்கு இப்டி பண்ண.."என கேட்டான் கௌதம்.

"நா.. நான்.. என்ன பண்ணேன்.."என்றாள் ஸ்வேதா.

"அப்டியே அறைஞ்சிருவேன்.."என்றான் கௌதம் கையை ஓங்கியபடி.

ஸ்வேதா புரியாமல் விழிக்க.. "என்ன நீ கார்த்தி கோட் பாக்கெட்ல போட்ட நெக்லஸ் எப்டி என் கண்ணில பட்டுச்சுனு யோசிக்கிறீயா.."என்றான் கௌதம்.

"அச்சச்சோ.. இவன் பாத்துட்டானா.. இப்ப இவனை எப்டி சமாளிக்கிறது.."என யோசித்தாள் ஸ்வேதா.

"வாயை திறந்து சொல்லு.."என கௌதம் அதட்டலாக கேட்டான்.

"அ.. அது.. ஆதி அத்தானுக்காக தான்.."என்றாள் ஸ்வேதா.

"என்ன உளறுற.."என்றான் கௌதம்.

பொய்யான கண்ணீருடன்.. "அ.. அது.. நான் ஆதி அத்தான லவ் பண்றேன் கௌதம்.. அதான்.. இப்டி பண்ணா.. ஆதி அத்தானும் மித்ரா அக்காவும் பிரிஞ்சிடுவாங்கனு பண்ணேன்.."என்றாள் ஸ்வேதா.

"நீ.. அத்தான லவ் பண்றீயா.."என கேட்டான் கௌதம்.

"ஆமா கௌதம்.. அத்தான நான் ரொம்ப லவ் பண்றேன்.. எனக்கு அத்தான் வேணும்.. நான் அத்தான கல்யாணம் பண்ணிக்கணும்.."என வராத அழுகையை வரவழைத்தபடி சொன்னாள் ஸ்வேதா.

கௌதம் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான். அவன் ஆதியை பார்க்க செல்வதை கவனித்த ஸ்வேதா.. சிரிப்புடன் சந்திரமதியை பார்க்க சென்றாள்.

"என்ன ஸ்வேதா.. சிரிச்சிட்டு இருக்க.. நாம நினைச்சது நடக்காம போயிடுச்சே.."என்றார் சந்திரமதி.

"நடக்கும் மாம்.. dont worry.." என்றாள் ஸ்வேதா.

"என்ன சொல்ற ஸ்வேதா.."என சந்திரமதி கேட்டார்.

"மாம்.. நான் நெக்லஸை அந்த கார்த்தியோட கோட் பாக்கெட்ல போட்டதை கௌதம் பார்த்துட்டான்.."என்றாள் ஸ்வேதா.

"உன்கிட்ட கேட்டானா.. எப்டி சமாளிச்ச.."என சந்திரமதி கேட்டார்.

"நான் ஆதி அத்தான ரொம்ப லவ் பண்றேன்.. கௌதம்.. எனக்கு ஆதி அத்தான் வேணும் கௌதம்..னு கண்ணீர் விட்டேன்.. நம்பிட்டான்.."என்றாள் ஸ்வேதா.

"சூப்பர் ஸ்வேதா.."என்றார் சந்திரமதி.

அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தனர் ஸ்வேதாவும் சந்திரமதியும்..

மித்ரா ஆதியிடம் பேசுவதற்காக வந்தாள். மித்ரா வருவதை கவனித்த ஆதி.. "கார்த்தி தூங்கிட்டானா.."என கேட்டான்.

"ம்.."என தலையசைத்த மித்ரா கண்ணீருடன் ஆதியை அணைத்துக் கொண்டாள்.

"மித்ரா.. அழாத.. ப்ளீஸ்.."என்றான் ஆதி.

மித்ரா ஆதியிடம்.. சந்திரமதி..யாழினி கல்யாணத்தின் போது யாரிடமோ "என் அண்ணன் சம்பாதிச்ச சொத்தை.. யார் யாரோ அனுபவிக்கணும்னு இருக்கு.. அவனுக்கு வந்த வாழ்வு அப்டி இருக்கு.."என கார்த்தியை பற்றி பேசியதை சொன்னாள்.

"கார்த்தி அப்பவே உங்ககிட்ட சொல்றேன்னு தான் சொன்னான்.. நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.."என மித்ரா சொன்னாள்.

"சரி.. இனிமே இப்டி நடக்காது.. நான் பாத்துக்கிறேன்.. நீ போய் தூங்கு.."என்றான் ஆதி.

மனமும் உடலும் சோர்ந்திருக்க.. சரியென தலையசைத்து விட்டு மித்ரா அங்கிருந்து சென்றாள்.

அப்போது அங்கே வந்த கௌதம்.. "அத்தான்.. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.."என்றான்.

"ம்.. சொல்லு.."என்றான் ஆதி.

"அத்தான்.. அந்த நெக்லஸ் ஹால்ல கிடந்ததுனு நான் சொன்னது பொய்.. அத ஸ்வேதா தான் கார்த்தியோட கோட் பாக்கெட்ல போட்டா.. நானே பார்த்தேன்.."என்றான் கௌதம்.

"எதுக்கு இப்டி பண்ணா..னு கேட்டீயா.."என ஆதி கேட்டான்.

"கேட்டேன்.. அவ லூசு மாதிரி பேசிட்டு இருக்கா.."என்றான் கௌதம்.

"என்னடா சொன்னா.."

"அவ உங்களை லவ் பண்றாளாம்.. அதான் அக்காவையும் உங்களையும் பிரிக்க இப்டி பண்ணாளாம்.."

ஆதி யோசனையில் இருக்க.. கௌதம்.. "அத்தான் என்ன யோசிக்கிறீங்க.."னு கேட்டான்.

"நான் உன்கிட்ட இதெல்லாம் சொல்ல வேண்டாம்னு நினைச்சேன்.. ஆனா இப்ப வேற வழி இல்லடா.."என ஆதி தயக்கமாக பார்த்தான்.

"சொல்லுங்க அத்தான்.. என்ன விஷயம்.."என கௌதம் கேட்டான்.

"யாழினி இப்பத்தான் படிப்பை முடிச்சிருக்கா.. உடனே கல்யாணம் பண்ண எனக்கு விருப்பமில்லை.. ஆனா அத்தையும் மாமாவும் அவசரப்படுறதுல ஏதோ காரணம் இருக்குன்னு எனக்கு தோணுச்சு..

அதனால நான் யாருக்கும் தெரியாம விசாரிச்சதுல.. மாமாவோட பிஸினஸ் லாஸ் பத்தி தெரிஞ்சுகிட்டேன்.. அதுமட்டுமில்லா கடன்..

அப்பா கொடுத்த எந்த ப்ராப்பர்ட்டியுமே அவங்ககிட்ட இல்லை.. இதெல்லாம்.."

"அத்தான்.. எனக்கு எதுவுமே தெரியாது.."என கௌதம் சொன்னான்.

"எனக்கும் தெரியும் டா.."என்றான் ஆதி.

"யாழினியோட சொத்தை வச்சு கடனை அடைக்கிறதுக்காக தான்.. உங்க கல்யாணத்தை இவ்ளோ சீக்கிரம் நடத்த நினைச்சாங்க.."என ஆதி சொன்னான்.

"அது தெரிஞ்சும் எதுக்கு அத்தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்க.. வேண்டாம்னு சொல்லிருக்கலாம்ல.."என கௌதம் வருத்தமாக சொன்னான்.

"டேய் அவங்க பண்ண தப்புக்கு நீ என்ன பண்ணுவ.. நீயும் யாழினியும் ஒருத்தரை ஒருத்தர் எவ்ளோ விரும்புறீங்கனு தெரிஞ்சும் நான் உங்களை எப்டி கஷ்டப்படுத்துவேன்.."என்றான் ஆதி.

கௌதம் யோசனையோடு "அத்தான்.. நீங்க சொல்றத வச்சு பார்த்தா.. அப்பாவுக்கு அட்டாக் வந்தது கூட பொய்யா இருக்குமோனு தோணுது.."என்றான்.

"அப்டிலாம் இருக்காது டா.."என்றான் ஆதி.

"எதுக்கும் நான் விசாரிச்சு பார்க்கிறேன் அத்தான்.."என கௌதம் சொன்னான்.

ஆனால் ஆதி மேலும் ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்த கௌதம்.. "அத்தான் இன்னும் என்ன யோசிக்கிறீங்க.."என கேட்டான்.

"ஸ்வேதா சொன்னதை வச்சு பார்த்தா.. அவங்க மித்ராவையும் என்னையும் பிரிக்க நினைக்கிறாங்க.. அது ஏன்னு தான் புரியலை.."என்றான் ஆதி யோசனையோடு.

"சரிடா.. நீ போய் தூங்கு.."என கௌதமிடம் சொன்னான் ஆதி.

"சரி அத்தான்.."என்ற கௌதம் அங்கிருந்து சென்றான்.

முந்தைய நாள் வரை கலகலப்பாக இருந்த வீடு.. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது.

மாலதியும் ரவிச்சந்திரனும் எல்லோரையும் அழைக்க.. எல்லோரும் ஹாலுக்கு வந்தனர்.

"ஆதி நீயே கொடு.."என ரவிச்சந்திரன் ஆதியிடம் சொன்னார்.

"பெரியவங்க நீங்க இருக்கும் போது நான் எதுக்கு.. நீங்க இரண்டு பேரும் சேர்ந்து கொடுங்க.."என்றான் ஆதி.

"என்னது.."என புரியாமல் யாழினி கேட்டாள்.

"உனக்காக நாங்க சேர்த்து வச்ச சொத்து.."என்றார் மாலதி.

சந்திரமதி மகாதேவன் ஸ்வேதா எல்லாரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

"கௌதம்.. வா.. இரண்டு பேரும் சேர்ந்து வாங்கிக்கோங்க.."என ரவிச்சந்திரன் சொன்னார்.

"என்னை இன்சல்ட் பண்றீங்களா மாமா.."என கௌதம் கேட்டான்.

"என்னாச்சு கௌதம்.. ஏன் இப்டி பேசுற.."என ரவிச்சந்திரன் கேட்க.. மாலதியும் புரியாமல் கௌதமை பார்த்தார்.

"கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே இதெல்லாம் கொடுத்தா என்ன அர்த்தம்.. நீங்க இவ்ளோ சொத்து சேத்து வச்சிருக்கீங்கனு தான் நான் யாழினியை லவ் பண்ணேனா.."என்றான் கௌதம்.

"உன்னை நாங்க அப்டி நினைப்போமா.. யாழினிக்கு சேர வேண்டியதை.. இனி உன் பொறுப்புனு உன்கிட்ட ஒப்படைக்கிறோம்.. அவ்ளோ தான் டா.."என ரவிச்சந்திரன் சொன்னார்.

"ஏன் மாமா.. நான் யாழினியை நல்லா பாத்துக்க மாட்டேனா.. இல்லை நான் சம்பாதிக்கிறது போதும்னு உங்களுக்கு தோணலையா.."என்றான் கௌதம்.

ரவிச்சந்திரனும் மாலதியும் அவனுக்கு எப்படி புரியவைப்பது என தெரியாமல் ஆதியை பேசுமாறு சொன்னார்கள்.

கௌதம் பேசுவதில் எரிச்சலாக நின்று கொண்டிருந்தனர் சந்திரமதி மகாதேவன் ஸ்வேதா மூவரும்..

ஆதி பேசத் தொடங்கும் முன்.. யாழினியை முன்னால் நிறுத்திய கௌதம்.. "யாழினி நீ சொல்லு.. உனக்கு நான் சம்பாதிக்கிறது போதுமா.. இல்லை உங்க அப்பா அம்மா சேத்து வச்ச சொத்து தான் வேணுமா.."என கேட்டான்.

என்ன சொல்வதென தெரியாமல் விழித்தாள் யாழினி.

"யாழினி.. நான் நம்ம வாழ்க்கையை தொடங்குறதுக்காக.. நான் இருந்த அந்த ப்ளாட்டைவாங்கிட்டேன். என்னோட பிஸினஸ்லயும் முக்கியமான சில காண்ட்ராக்ட்ஸ் எனக்கு கிடைச்சிடும்.. அது போதும் நாம சந்தோஷமா வாழ..

இன்னும் உங்க அப்பா அம்மோவோட சொத்து தான் வேணும்னு நீ நினைச்சா நாம வாங்கிக்கலாம்.."என கௌதம் சொன்னான்.

அதைக் கேட்ட யாழினி.. "எனக்கு இது வேண்டாம் பா.."என்றாள்.

"என்னடா நீயும் இப்டி சொல்ற.."என மாலதி கேட்டார்.

"கௌதம் சொல்றது தான் மா.. சரி.. எனக்கு இது வேண்டாம்.."என்றாள் யாழினி உறுதியாக.

ரவிச்சந்திரனும் மாலதியும் ஆதியை பார்க்க.. "அவங்க விருப்பம் அதுதான்னா.. நாம என்ன சொல்ல.. இருக்கட்டும்.."என்றான் ஆதி.

ரவிச்சந்திரனும் மாலதியும் அரை மனதோடு தலையசைத்தனர்.

ஸ்வேதா.. "இந்த கௌதம் ஏன் இப்டி பண்றான்.. வர்ற சொத்தை வேண்டாம்னு சொல்றான்.."என சந்திரமதியிடமும் மகாதேவனிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"அவனை பத்தி தெரிஞ்சதால தான்.. உன்னை ஆதியை கல்யாணம் பண்ணிக்க சொன்னோம்.. ஆனா அதுக்கும் அந்த மித்ரா குறுக்க நிக்கிறா.."என மகாதேவன் சலிப்போடு சொன்னார்.

"ம்.. எதாவது பண்ணலாம்.."என்றாள் ஸ்வேதா.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top