❤ 31 ❤
கார்த்திக்கு அன்று கவுன்சிலிங் இருந்தது.. கார்த்தி மார்க் நல்லபடியாக வாங்கியிருந்ததால் அவனுக்கு ஈசியாக மெடிக்கல் சீட் கிடைத்தது.
கவுன்சிலிங் போய்விட்டு மித்ராவும் கார்த்தியும் ஸ்வீட் பாக்ஸோடு வீட்டுக்கு வந்தனர்.
கௌதமும் யாழினியும் "congratulations doctor sir.."என வாழ்த்தினர்.
ஆதி கார்த்திக்கு ஒரு watch giftஆக தந்தான்.
"சூப்பரா இருக்கு அத்தான்.. Thanks.."என்றான் கார்த்தி.
கௌதமும் யாழினியும் அங்கிருந்து சென்றுவிட.. ஆதி மித்ரா கார்த்தியோடு பேசிக் கொண்டிருந்தான்.
அவர்களை வெறுப்புடன் பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர் ஸ்வேதாவும் சந்திரமதியும்.
ஆதி போன் பேசுவதற்காக அங்கிருந்து நகர்ந்து செல்ல.. ஸ்வேதாவும் சந்திரமதியும் அங்கே வந்தனர்.
மித்ரா அவர்களிடம்.. "கார்த்திக்கு மெடிக்கல் சீட் கிடைச்சிருக்கு.. ஸ்வீட் எடுத்துக்கோங்க.."என ஸ்வீட் பாக்ஸை நீட்டினாள்.
அதை எடுத்துக் கொண்ட சந்திரமதி.. "காசு கொடுத்தா.. மெடிக்கல் சீட் லாம் ரொம்ப ஈசியா கிடைச்சிடும்.."என நக்கலாக சொன்னார்.
கார்த்தி சற்று கோபமாக.. "இது ஒன்னும் காசு கொடுத்து வாங்கின சீட் இல்லை.. நான் படிச்சு வாங்கின சீட்.."என சொன்னான்.
ஸ்வேதாவும் சந்திரமதியும் அவனை முறைத்தபடி.. ஆதி கிப்டாக கொடுத்த வாட்ச்சை பார்த்தனர்.
சந்திரமதி.. "இதான் ஆதி வாங்கிக் கொடுத்ததா.."என்றபடி அந்த வாட்ச்சை கையில் எடுத்தார்.
ஸ்வேதாவும் சந்திரமதியும் கண்ணாலே பேசிக்கொண்டனர்.
"ஸ்வேதா.. இதே மாதிரி ஒரு வாட்ச் நம்ம கௌதமும் வச்சிருந்தான்ல.."என கைகளில் வைத்து ஆட்டியபடியே.. அதை ஸ்வேதாவிடம் நீட்டினார்.
அவர் கைகளில் வைத்து அதை ஆட்டுவதை பார்த்த கார்த்தி.. எங்கே கீழே போட்டுவிடுவாரோ.. என பயந்து போயிருந்தான். அவர் கையிலிருந்து பிடுங்கி விடலாம் போல இருந்தது அவனுக்கு.
"ஆமா.."என்றபடி அதை வாங்குவதை போல.. கையை நீட்டிய ஸ்வேதா வேண்டுமென்றே தவறவிட்டாள் அதை.
அதை கவனித்த கார்த்தியும் மித்ராவும் கீழே விழுந்துவிடும் என்றே நினைத்தனர்.
ஆனால் ஆதி வாட்ச் கீழே விழாமல் பிடித்துவிட்டான்.
"என்ன ஸ்வேதா.. கவனமா வாங்க மாட்டீயா.."என லேசான கோபத்துடன் கேட்டான் ஆதி.
"சாரி அத்தான்.. நான்.."என சமாளிக்க நினைத்தாள் ஸ்வேதா.
ஆதி கார்த்தியிடம் வாட்ச்சை கொடுக்க.. அதை வாங்கிக் கொண்ட கார்த்தி.. "எங்க அவங்க கீழ போட்ருவாங்களோனு பயந்துட்டேன்.."என கண் கலங்கினான்.
"இதுக்கு ஏன் கண் கலங்குற.. விடு.. ஒன்னுமில்லை.."என ஆதி சமாதானம் சொன்னான்.
"இல்லை.. நீங்க முத முதல்ல தந்த கிப்ட் அதான்.."என கார்த்தி சொன்னான்.
"உனக்கு வேணும்னா இன்னும் எவ்ளோனாலும் வாங்கித் தருவேன் டா.. இதுக்கு லாம் கண் கலங்காத.."என்றான் ஆதி.
கார்த்தி சரியென தலையசைத்தான். ஆதி கார்த்தி மீது காட்டும் பாசத்தைக் கண்டு மித்ரா சந்தோஷம் கொண்டாள்.
யாழினி கல்யாணத்திற்காக.. எல்லோருக்கும் வாங்குவதற்காக பட்டுப்புடவைகளை வீட்டுக்கே வரவைத்திருந்தான் ஆதி.
மாலதியும் யாழினியும் ஒருபுறம் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ரவிச்சந்திரனும் அவர்களோடு இருந்தார்.
மித்ராவோடு ஆதி அமர்ந்திருந்தான். மித்ரா ஒரு புடவையை எடுத்து.. ஆதியிடம் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஆதியும் மித்ராவிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்க.. எதாவது செய்ய வேண்டும் என வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.
அருகில் இருந்த காபி கப்பை கையில் எடுத்துக் கொண்டு மித்ராவின் அருகில் வந்தாள்.
மித்ராவும் ஆதியும் அவளை கவனிக்காமல் தங்கள் பேச்சில் மும்மரமாக இருந்தனர்.
ஸ்வேதா காபியை வேண்டுமென்றே மித்ரா கையில் இருந்த புடவை மீது கொட்டினாள்.
அதை கவனித்த மித்ரா பதற.. ஆதியும்.. "என்ன ஸ்வேதா இப்டி பண்ணிட்ட.."என கேட்டான்.
"சாரி அத்தான்.. நான் கவனிக்கலை.."என பதறுவது போல் நடித்தாள்.
"என்ன ஸ்வேதா நீ.. இந்த saree உனக்கு நல்லா இருக்கும்னு மித்ரா சொல்லிட்டு இருந்தா.. நீயே இதில காபியை கொட்டிட்ட.."என்றான் ஆதி.
ஸ்வேதா இதற்கு என்ன சொல்வது என தெரியாமல் திருதிருவென முழிக்க.. "சரி உனக்கு வேற எது பிடிச்சிருக்குன்னு பாரு.."என்றான் ஆதி.
தலையை அசைத்தபடி பார்க்க ஆரம்பித்தாள் ஸ்வேதா.
மித்ராவுக்கான புடவையை ஆதியே தேர்வு செய்தான்.
அன்று இரவு.. "மாம்.. இப்டி சின்ன சின்னதா பண்றதெல்லாம் சரியா வராது மாம்.. வேற எதாவது பெருசா பண்ணனும் மாம்.. என்ன பண்றது மாம்.."என ஸ்வேதா கோபமும் எரிச்சலுமாக பேசினாள் சந்திரமதியிடம்.
"பொறுமையா யோசிப்போம்.. ஸ்வேதா.. நமக்கு சாதகமா எதாவது நடக்கும்.."என சந்திரமதி சமாதானம் சொன்னார்.
மித்ரா அவ்வப்போது யாழினி கௌதம் கல்யாண வேலையில் கவினிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருந்தாள்.
ஆதியும் மித்ராவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த முரளி கவினிடம்.. "கவின் உனக்கு வருத்தமா இல்லையா.."என கேட்டான்.
"இல்லைடா.."என்றான் கவின்.
"மித்ரா நீ நேசிச்ச பொண்ணு டா.. அவங்க சேரக்கூடாதுன்னு தான ஆதி குரூப்ஸ் வொர்க்க மித்ரா கிட்ட இருந்து மறைச்ச.."என முரளி கேட்டான்.
"அப்டி நான் நினைக்கலைடா.. அவங்க நெருக்கமாகிறதுக்கு நான் காரணமா இருக்க கூடாதுன்னு நினைச்சேன்.. ஆனா ஆதி மித்ராவுக்காக எவ்ளோ பண்ணிருக்காரு.. அதுமட்டுமில்ல மித்ரா மனசில எப்ப நான் இல்லைனு தெரிஞ்சுதோ அப்பவே நான் என்னை மாத்திக்க ஆரம்பிச்சிட்டேன்.."என கவின் சொன்னான்.
கல்யாணத்திற்கு முந்தைய நாள் இரவு.. யாழினியும் மித்ராவும் கைகளில் மெஹந்தி வைத்துக் கொண்டிருக்க.. மாலதி.. மித்ராவிடம்.."ஆதியும் கார்த்தியும் எங்க மித்ரா.."என கேட்டார்.
"தெரியலை அத்தை.. நானும் ரொம்ப நேரமா அவங்கள பார்க்கலை.."என்றாள் மித்ரா.
"மா.. இந்த கௌதமும் எங்க போனான்னே தெரியலை.."என்றாள் யாழினி.
மாலதி ரவிச்சந்திரனிடம்.. "ஆதிக்கு ஒரு போன் பண்ணி பாருங்க.."என்றார்.
"ம்.. சரி.."என்றவர் ஆதிக்கு போன் செய்த வேளை.. ஆதி கார்த்தி கௌதம் மூவரும் ஒன்றாக வீட்டுக்கு வந்தனர்.
அவர்களை எல்லாரும் லேசான அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
மூவரும் பட்டு வேஷ்டி சட்டையில் வந்து நின்றனர்.
"என்னடா இன்னைக்கே வேஷ்டி சட்டை போட்ருக்கீங்க.."என ரவிச்சந்திரன் கேட்டார்.
"நாளைக்கு சூட் அதான் இன்னைக்கே வேஷ்டி சட்டை.."என்றான் ஆதி.
கௌதம்.. "யாழினி நீ சொல்லு.. மூணுபேர்ல யார் சூப்பரா இருக்கோம்.."என கேட்டான்.
யாழினி மூன்று பேரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். "அத்தான் நீங்க தான் அழகா இருக்கீங்க னு.. சீக்கிரமா சொல்லு.."என்றான் கௌதம்.
"நீயும் அண்ணாவும் அழகா இருக்கீங்க.. ஆனா கார்த்தி தான் சூப்பரா இருக்கான்.."என்றாள் யாழினி.
கார்த்தியும் ஆதியும் சிரிக்க.. கௌதம் யாழினியை முறைத்துவிட்டு.. "உன்கிட்ட போய் கேட்டேன் பாரு.."என்றான்.
"அத்தை நீங்க சொல்லுங்க.."என கௌதம் மாலதியிடம் கேட்டான்.
எல்லாரையும் ஒருமுறை பார்த்து விட்டு.. "யாழினி சொன்ன மாதிரி.."என ஆரம்பித்தார் மாலதி.
"போதும் நிறுத்துங்க.. கல்யாண மாப்பிள்ளை நான்.. பார்லர் லாம் போய் எவ்ளோ அழகா வந்திருக்கேன்.. யாராவது என்னை சொல்றீங்களா.."என சலித்துக் கொண்டான் கௌதம்.
எல்லாரும் கௌதமை பார்த்து சிரித்துக் கொண்டிருக்க.. "மித்ரா அக்கா.. நீங்க சொல்லுங்க.."என கௌதம் மித்ராவிடம் கேட்டான்.
மித்ரா சிரிப்பபுடன் ஆதியை பார்க்க.. "அத்தானை பார்க்க கூடாது... என்னை மட்டும் பார்த்து சொல்லுங்க.."என கௌதம் சொன்னான்.
"நீங்க தான் சூப்பரா இருக்கீங்க மாப்பிள்ளை சார்.. போதுமா.."என மித்ரா சிரிப்புடன் சொன்னாள்.
"ஆங்.. அது.. தேங்க்ஸ் கா.."என்றான் கௌதம்.
"அய்யோ.. அய்யோ.. அழகா இருக்கனு அவங்களா சொல்லணும்.. இப்டி கேட்டு வாங்கக் கூடாது.."என யாழினி கௌதமிடம் சொன்னாள்.
"அதான் நீ என்னை சொல்லலைல.. நீ பேசாத.."என்றான் கௌதம்.
"நானே பார்லர் போகலை.. உனக்கு மட்டும் என்ன"என யாழினி கௌதமிடம் கேட்டாள்.
"அப்ப நேத்து எதையோ மூஞ்சில தடவிட்டு காசு வாங்கிட்டு போனாங்களே.. அது என்ன.."என கௌதம் கேட்டான்.
"அது.. just facial.."என்றாள் யாழினி.
"எல்லாம் அதேதான்.."என கௌதம் சொல்ல.. யாழினி அவனை முறைத்தாள்.
கார்த்தியும் அவர்களோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
மித்ரா மெஹந்தி ஒரு கையில் மட்டும் போட்டிருக்க.. எழுந்தாள்..
அதை பார்த்த மாலதி.. "என்ன மித்ரா.. ஒரு கையில தான் போட்ருக்க.. இன்னொரு கையிலயும் போட்டுக்க.."என்றார்.
"இல்லை அத்தை போதும்.."என்றாள் மித்ரா.
"ரொம்ப டயர்டா இருக்க.. போய் ரெஸ்ட் எடு மா.. காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும்.."என்றார் மாலதி.
"தண்ணீ குடிச்சிட்டு.. ரூமுக்கு போறேன் அத்தை.."என மித்ரா சொல்லிவிட்டு கிச்சனுக்கு சென்றாள்.
எல்லாரும் அவரவர் வேலையில் மூழ்கியிருக்க.. ஆதி மித்ரா பின்னால் சென்றான்.
மித்ராவின் இடையை பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்தான் ஆதி. அவள் கழுத்தில் முகம் புதைத்து.. கிறக்கமாக.. "மித்ரா.."என்றான்.
"ம்.."என்றாள் மித்ரா.
"வேஷ்டி சட்டையில நான் எப்டி இருக்கேன்.."என்றான் ஆதி.
"நல்லா இல்லை.."என்றாள் மித்ரா.
லேசான அதிர்ச்சியுடன்.. "நல்லா இல்லையா.."என கேட்டான் ஆதி.
"ஆமா.."என்றாள் மித்ரா.
மித்ராவை தன்புறமாக திருப்பிய ஆதி.. "நிஜமா நல்லா இல்லை.."என கேள்வியாய் அவளை பார்த்தான்.
"அ.. அது.."என மித்ரா தடுமாற.. "நல்லா இல்லாம தான்.. அப்டி சைட் அடிச்சீயா.."என ஆதி கேட்டான்.
"நான்.. நான்.."என மித்ரா தடுமாற.. ஆதி சிரிப்புடன்.. "நீ.. நீ.."என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்டான்.
மித்ரா அங்கிருந்து நகர முயற்சிக்க.. அவளை மேலும் இறுக்கி அணைத்தான் ஆதி.
மித்ரா ஆதியின் கண்களை பார்த்து.. "ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க.. என்னால வேற யாரையும் பார்க்க கூட முடியலை.."என்று சொன்னவள் தன் உதடுகளை கடிக்க..
ஆதி புன்னகையுடன்.. அவள் இதழ்களை சுவைக்கத் தொடங்கினான். மித்ராவும் அவன் சட்டையை பற்றியபடி தன்னையே தொலைத்துக் கொண்டிருந்தாள்.
பிரிய மனமின்றி இருவரும் விலகினர் சில நிமிடங்களுக்கு பிறகு..
ஆதி முதலில் செல்ல.. கௌதமும் யாழினியும் அவனை பார்த்து சிரித்தனர்.
காரணம் புரியாமல்.. "என்ன.."என்றான் ஆதி.
"அத்தான்.. இதான் புது பேஷனா.. சட்டைக்கு மெஹந்தி போடுறது.."என்றான் கிண்டலாக கௌதம் சிரித்தபடி.
அப்போது மித்ராவும் அங்கே வர.. ஆதியின் சட்டையில் தன் கையிலிருந்த மருதாணி ஒட்டியிருப்பதை பார்த்தாள்.
இருவரும் அசடு வழிய சிரித்தபடி அங்கிருந்து சென்றனர்.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top