WatTruyen.Top

தொடுவானம்

❤ 16 ❤

jamunaguru

மித்ராவுக்கு ஆதியை இரண்டு நாள் பார்க்க முடியாது என்ற கவலை ஒருபுறம்..

அப்பா இறந்த பின் அந்த ஊருக்கு செல்லவில்லை.. இப்போது மீண்டும் சென்றாக வேண்டும் என்ற கலக்கத்தில் தவித்தாள் மித்ரா.

கடமையென வேலைகளை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்த மித்ராவின் எதிரில் வந்தான் ஆதி.

ஆதியின் முகத்திலும் மித்ராவின் பிரிவை எண்ணி கவலை தெரிந்தது.

"எத்தனை மணிக்கு கிளம்பணும்.."என ஆதி கேட்டான்.

"நைட் எட்டு மணிக்கு பஸ்.."என்றாள் மித்ரா.

"இங்க கொஞ்ச நேரம் இருக்கலாமா.."என கேட்டான் ஆதி.

சரியென தலையசைத்த மித்ரா ஆதியோடு அந்த பார்க் பெஞ்சில் அமர்ந்தாள்.

இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

சில நிமிடங்கள் என்ன பேசுவதென தெரியாமல்.. இருந்த ஆதி.. மித்ராவை பார்க்க.. மித்ராவின் கன்னத்தில் கண்ணீர் வழிவதைக் கண்டு பதறினான்.

"மித்ரா.. என்னாச்சு.."என கேட்டபடி.. ஆதி மித்ராவின் பார்வை செல்லும் திசையை பார்த்தான்.

அங்கே ஒரு சின்னக் குழந்தை அப்பாவோடு விளையாடிக் கொண்டிருந்தது.

மித்ராவின் கண்ணீருக்கு காரணம் புரிந்த ஆதியோ.. "மித்ரா.. இங்க பாரு.. அழாத.."என சமாதானம் செய்ய முயன்றான்.

"ஆ.. ஆதி.. அப்பா.. ஏன் என்னை விட்டு போனாங்க.."என மேலும் அழத் தொடங்கினாள்.

"மித்ரா.. அழாத மா.."என ஆதி சொன்னான்.

ஆதியின் சட்டையை இறுகப் பற்றியபடி ஆதியின் நெஞ்சில் தலைசாய்த்த மித்ரா.. அழுது கொண்டிருந்தாள்.

ஆதி மித்ராவின் தலையை வருடியபடி இருந்தான்.

"ஆதி.. அப்பா.. அப்பா நெஞ்சுவலி வர்றதுக்கு முன்னால.. நான் ஊருக்கு வருவேன்னு எ.. எனக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சிருக்காங்க.."என அழுதாள் மித்ரா.

ஆதி எதுவும் பேசாமல் அவள் தலையை வருடினான்.

"கார்த்திக்கு எக்ஸாம் ஆரம்பிச்ச பிறகு.. அப்பா குடிக்கலை.. அப்பா குடிக்கிறத விட்டுட்டாங்க.. இனி எப்பவும் போல இருப்பாங்க.. சந்தோஷமா இருக்கலாம்னு.. நினைச்சேன்.. ஆ.. ஆனா.."என மித்ரா அழுதாள்.

மித்ரா தன் மனதிலே புதைத்து வைத்திருந்த எல்லாவற்றையும் சொல்கிறாள் என்பது புரிந்தது ஆதிக்கு..

அவள் எல்லா கவலையையும் கொட்டித் தீர்க்கட்டும் என அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் ஆதி.

ஆதி மித்ராவை அணைத்தபடி இருக்க.. அவர்களை ஒருவர் சந்தோஷமாகவும் இன்னொருவர் வருத்தமாகவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மித்ரா.. "இனி.. இனி எனக்கும் கார்த்திக்கும் யாரு.. இருக்கா.."என்றாள் அழுதபடி.

அவ்வளவு நேரம் அமைதியாக அவள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த ஆதி.. மித்ராவை தன் அணைப்பிலிருந்து விடுவித்தான்.

மித்ராவின் கன்னங்களில் தன் கைகளை வைத்து அவள் முகத்தை பார்த்தான். வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்தான்.

மித்ராவின் கண்களை காதலோடு பார்த்தான் ஆதி.

"மித்ரா.. உனக்கும் கார்த்திக்கும் இனி நான் இருக்கேன்.. காலம் முழுக்க.. இனி நீ என் பொறுப்பு.. உன்னை கண்கலங்காம பார்த்துக்கிறேன்.. ஐ லவ் யூ மித்ரா.."என்றான் ஆதி.

ஆதி மித்ராவின் கண்களில் சோகத்தை தாண்டி தன் மீதான காதலை தேடிக் கொண்டிருந்தான்.

மித்ரா ஆதியின் கண்களில் தெரிந்த காதலில் தன்னையே தொலைத்துக் கொண்டிருந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்கள் என்பதை இருவருமே அறியவில்லை.

மித்ராவின் போன் ரிங் ஆனது. இருவரும் அப்போது தான் தாங்கள் பார்க்கில் இருப்பதையே உணர்ந்தனர்.

ஆதி தன் கைகளை விலக்கிக் கொண்டான். மித்ரா போனை அட்டெண் செய்தாள்.

சாரு தான் அழைத்திருந்தாள்.. "என்ன மித்ரா.. எங்க இருக்க.. மணி என்னாகுதுனு பாரு.. இன்னைக்கு ஊருக்கு வேற போகணும்ல.."என பேசிக் கொண்டிருந்தாள்.

"வர்றேன்.."என மட்டும் சொல்லிவிட்டு போனை கட் செய்தாள் மித்ரா.

ஆதி போனில் யார் என்பதை போல மித்ராவை பார்த்தான்.

"ஊ.. ஊருக்கு.. கிளம்பணும்.."என மித்ரா சொன்னாள்.

ஆதி மித்ராவின் bagல் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்து.. "முகத்தை கழுவிக்கோ மித்ரா.. கார்த்தியும் சாருவும் பார்த்தா.. ஏன் அழுத..னு கேட்கப் போறாங்க.."என்றான்.

மித்ராவும் முகத்தை கழுவிவிட்டு தன் துப்பட்டாவில் துடைத்துக் கொண்டாள்.

மித்ரா வீட்டுக்கு செல்லும் வரை கூடவே வந்த ஆதி.. வீட்டுக்குள் செல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

மித்ராவின் முகம் வாடிப்போய் இருப்பதை கவனித்த சாரு.. ஆதியை பிரிஞ்சு இருக்கிறத நினைச்சு வருத்தப்படுறா போல..னு நினைச்சு அவகிட்ட எதுவும் கேட்கலை.

மித்ராவும் கார்த்தியும் ஊருக்கு கிளம்பினர்.

தன் கவலைகளை அழுது தீர்த்த மித்ராவிடம்.. நான் இருக்கேன் உனக்கு..னு சொல்லி தன் மனசில இருக்கிறதையும் ஆதி சொல்லிட்டான்.

ஆனா மித்ரா அப்ப இருந்த மனநிலை தெரிஞ்சும்.. அவகிட்ட இருந்து பதில் எதிர்பார்க்க வேண்டாம் என நினைத்ததால் ஆதி மித்ராவை வீட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top