6💕
"பாரதியார் தெருவில யார் வீட்டுக்கு போறீங்க.."னு சக்தி ஸ்கூட்டில போகும் போது நிரஞ்சன் கிட்ட கேட்கிறா.
"சுந்தரம்.."
"சுந்தரமா.."
"ம்.. ஆமா.."னு நிரஞ்சன் சொல்லிட்டு இருக்கும் போது சக்திக்கு கால் வருது.
சக்தி வண்டியை நிறுத்திட்டு.. நிவேதாவோட callஐ அட்டெண் பண்றா.
"சொல்லுங்க டீச்சர்.."
"சக்தி எனக்கு அந்த தள்ளுவண்டி கடையில போளி வாங்கிட்டு வாயேன்.."
"போடி.. நான் அந்தக் கடையெல்லாம் தாண்டி வந்துட்டேன்.. என்னால முடியாது.."
"சக்தி ப்ளீஸ் டீ.. வாங்கிட்டு வா.."
"போடி.. நல்லா அலைய விடு.. வாங்கிட்டு வர்ர்றேன்.. எனக்கு வேணும் அதனால.."னு சொல்லிட்டு சக்தி போனை கட் பண்றா.
நிரஞ்சன் அவளை ஷாக்கா பார்க்கிறான்.
"ஏங்க அப்டி பார்க்கிறீங்க.. சீக்கிரமா போனை கட் பண்ணிட்டேன்னா.."னு சக்தி கேட்கிறா.
"இல்லை.. டீச்சர்னு சொன்னீங்க.. கொஞ்ச நேரத்துல போடி.. வாடி..னு சொல்றீங்க.. அதான்.."னு நிரஞ்சன் சொல்றான்.
"ஓ.. என் சிஸ்டர் தான்.."
"ஓ.."
"பக்கத்துல ஒரு கடை வரைக்கும் போகணும்.. நீங்களும் கூட வர்றீங்களா.."னு சக்தி கேட்கிறா.
நிரஞ்சன் யோசிக்கிறான். சக்தி.. "பரவாயில்லை வாங்க.. நீங்க போக வேண்டிய இடத்துக்கு நானே கொண்டு விட்டுறேன்.. போளி வாங்கித் தர்றேன்.. வாங்க.."னு சொல்றா.
அவ பண்றதை பார்த்து நிரஞ்சனுக்கு சிரிப்பா வருது.
அந்தக் கடைக்குப் போனதும் "அண்ணா இரண்டு போளி இப்ப சாப்பிட.. நாலு பார்சல் பண்ணிடுங்க.."னு சக்தி சொல்றா.
சூடா போளி வந்ததும் சாப்பிட்டுட்டே சக்தி நிரஞ்சன் கிட்ட "எதுக்கு இங்க வந்துருக்கீங்க..னு நீங்க சொல்லவே இல்லையே.."னு கேட்கிறா.
"இங்க தான் எனக்கு பொண்ணு பாத்திருக்காங்க.. அந்தப் பொண்ணு வீட்டுக்கு தான் போறேன்.."னு நிரஞ்சன் சொல்றான்.
"அப்டியா.. பொண்ணு பேரு என்ன.."னு சக்தி கேட்கிறா. சக்தி லைட்டா guess பண்ணிட்டா.. இருந்தாலும் கன்பார்ம் பண்ணிக்க தான் கேட்கிறா.
"நிவேதா.."னு நிரஞ்சன் சொன்னதும்.. சக்தி "அந்தப் பொண்ணா.." அப்டினு முகத்தை சுழிக்கிறா.
"அதுக்கு ஏங்க.. இப்டி முகத்தை வைக்கிறீங்க.."னு நிரஞ்சன் கேட்கிறான்.
"ஒ.. ஒன்னுமில்லையே.."னு சக்தி சொல்றா.
"அழகா இருப்பாங்களா.."னு நிரஞ்சன் கேட்கிறான்.
"ம்.. ம்.. ஏதோ என் அளவுக்கு இல்லைன்னா கூட சுமாரா இருப்பா.."னு சக்தி சொல்ல.. நிரஞ்சன் சிரிச்சிட்டே தலையாட்டுறான்.
"ஏன்.. நான் அழகா இல்லையா.. சிரிக்கிறீங்க.."னு சக்தி கேட்கிறா.
"அய்யோ.. சும்மா சிரிச்சேன்.."னு நிரஞ்சன் சொல்றான்.
சக்தி நிரஞ்சனோட பேசிட்டு இருந்ததை அர்ஜீன் பார்த்துட்டே இருக்கான். ஆனா சக்தியும் நிரஞ்சனும் அதை கவனிக்கவே இல்லை.
"ம்.. அது.. பொண்ணு பார்க்கனு சொல்றீங்க.. நீங்க மட்டும் வந்துருக்கீங்க.."னு சக்தி கேட்கிறா.
"வீட்டில எல்லாரும் வந்து பாத்துட்டாங்க.."
"அவங்களுக்கு லாம் பிடிச்சிருக்கா.."னு சக்தி கேட்கிறா.
"ம்.. ரொம்ப.. பிடிச்சிருக்கு.. ஆனா அவங்க தங்கச்சி தான் எங்க பாட்டியை நல்லா கலாய்ச்சு விட்ருக்காங்க.."னு நிரஞ்சன் சிரிச்சிட்டே சொல்றான்.
"என்னங்க.. பாட்டியை கலாய்ச்சத சிரிச்சிட்டே சொல்றீங்க.."னு சக்தி தனக்கும் அதுக்கும் சம்பந்தமோ இல்லாத மாதிரி கேட்கிறா.
"பாட்டி பண்ணதும் கொஞ்சம் டூ மச் தான்.. பாட்டியே அத சாதாரணமா எடுத்துக்கிட்டாங்க.. அப்புறம் நாங்க எதுக்கு அதை பெரிசா எடுத்துக்கணும்.."னு நிரஞ்சன் சொல்ல.. சக்திக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.
"பரவாயில்லை.. நம்மால எந்த ப்ராப்ளமும் இல்லை.."னு சக்தி மனசுக்குள்ள நினைக்கிறா.
"இருந்தாலும் அந்தப் பொண்ணுக்கு வாய் காது வரைக்கும் நீளம் தான்.."னு சக்தி வேற யாரையோ சொல்ற மாதிரி சொல்றா.
"அப்டித்தான் பாட்டியும் சொன்னாங்க.."னு நிரஞ்சன் சிரிக்கிறான்.
"அண்ணா.. பார்சல் ரெடியா.."னு கேட்டுட்டு சக்தி பணம் கொடுக்கிறா.
நிரஞ்சன்.. நான் கொடுக்கிறேனு சொன்னதுக்கு சக்தி.. "நீங்க வேணா தனியா பார்சல் வாங்கிங்கோ.. நிவேதாவுக்கு ரொம்ப பிடிக்கும்.."னு சொல்றா.
"ஓ.. அப்டியா.. உங்களுக்கு எப்டி தெரியும்.."னு நிரஞ்சன் கேட்கிறான்.
"இந்த ஊர்ல எல்லாருக்கும் பிடிக்கும்.. வாங்கிட்டு வாங்க.. நான் பைக் பக்கத்தில இருக்கேன்.."னு சொல்லிட்டு சக்தி போறா.
சக்தி தன் ஸ்கூட்டி பக்கத்தில போய் நிக்கிறா. அப்ப அர்ஜீன் வந்து.. "உனக்கு இதே வேலை தானா.."னு சொல்றான்.
சக்திக்கு அவனை பார்த்ததும் கடுப்பா இருக்கு. ஆனாலும்..
"உங்களுக்கும் இதே வேலை தானா.."னு சக்தி சொல்றா.
"இவன் எத்தனாவது ப்ரெண்ட்.."னு அர்ஜீன் நிரஞ்சனை காட்டி சக்தி கிட்ட கேட்கிறான்.
"Thats none of your business mister.."னு சக்தி சொல்லிட்டு இருக்கும் போது நிரஞ்சன் வர்றான்.
ஏதும் பிரச்சனையோ..னு நிரஞ்சன் பார்க்கிறான்.
"வாங்க.. நிரஞ்சன்.. போகலாம்.."னு சக்தி நிரஞ்சனை பார்த்து சொல்லிட்டு அர்ஜீனை முறைச்சிட்டே கிளம்புறா.
நிரஞ்சனும் அர்ஜீனை கவனிச்சதுல சக்தி தன் பேரை சொல்லிக் கூப்பிட்டத கவனிக்கலை.
நிரஞ்சனுக்கு அப்ப தான் தோணுது.. "என் பேர் எப்டி உங்களுக்கு தெரியும்.. நான் சொன்னதா எனக்கு நியாபகமே இல்லையே.."னு சக்தி கிட்ட நிரஞ்சன் கேட்கிறான்.
சக்தி சிரிக்கிறா.
"பதில் சொல்லுங்க.. உங்களுக்கு எப்டி தெரியும்.."னு நிரஞ்சன் கேட்கிறான்.
#சக்தியோட சேட்டை கூடிட்டே போகுது..😜
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top