WatTruyen.Top

அடியே.. அழகே..

45💕

jamunaguru


சக்தியும் அர்ஜூனும் ஒருவழியா தங்களோட சண்டையை கொஞ்சல்ல முடிச்சிட்டு.. கிளம்பி கீழ வர்றாங்க.

இந்திராவும் சரவணனும் அவங்க இரண்டு பேரும் வந்ததும் சாப்பிடலாம்னு காத்திருந்தாங்க.

அர்ஜூனும் சக்தியும் வந்ததும் எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுறாங்க.

இந்திராவும் சக்தியும் வழக்கம் போல.. அவங்க கதை பேசிட்டு இருக்காங்க..

சாப்பிட்டு முடிச்சதும் அர்ஜூன் இந்திரா கிட்டயும் சரவணன் கிட்டயும் ப்ரீத்தியோட அம்மா பத்தி சொல்றான்.

"நாளைக்கு அவங்களுக்கு சர்ஜரி பண்றாங்க.."னு அர்ஜூன் சொல்றான்.

"சரி.. அப்ப நானும் அம்மாவும் ஹாஸ்பிட்டல்ல போய் அவங்கள பார்த்துக்கிறோம்.. நீங்க இரண்டு பேரும் கம்பெனிக்கு போங்க.."னு சரவணன் அர்ஜூன் கிட்ட சொல்றார்.

"ம்.. சரி ப்பா.."னு அர்ஜூன் சொல்றான்.

அர்ஜூனும் சக்தியும் வேலை பார்த்துட்டு இருக்காங்க. அப்ப சக்திக்கு கீதா போன் பண்றாங்க.

"ஹலோ சக்தி.."

"ஆங்.. சொல்லு.. ம்மா.."னு சக்தி சொல்றா.

"என்ன மரியாதை லாம் பலமா இருக்கு.. பேசுறது என் பொண்ணு தானா.."னு கீதா கிண்டல் பண்றாங்க.

"கீதா.. சரியில்லை.. இந்த சக்தி வீட்டில இல்லாம உனக்கு பயமே இல்லாம போச்சு.. வீட்டுக்கு வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்.."னு சக்தி போன்ல கீதா கிட்ட பேசுறத கேட்டு அர்ஜூன் சிரிக்கிறான்.

சக்தியும் அர்ஜூன் சிரிக்கிறதை கவனிச்சிட்டே கீதா கூட போன்ல பேசிட்டு இருக்கா.

"சக்தி மா.. நீயும் மாப்பிள்ளையும் எப்ப ப்ரீயா இருப்பீங்க.."னு கீதா கேட்கிறாங்க.

"எதுக்கு கீதா.."னு சக்தி கேட்கிறா.

"தீபாவளி வரப்போகுதுல.. உனக்கும் மாப்பிள்ளைக்கும் டிரெஸ் எடுக்க.. நீங்களும் வந்தா.. உங்களுக்கு பிடிச்ச மாதிரி எடுத்துக்கலாம்ல.. அதான்.."னு கீதா சொல்றாங்க.

"சரி நான் அப்புறமா கேட்டுட்டு சொல்றேன்.."னு சக்தி சொல்றா.

"இப்பவே கேட்டு சொல்லேன்.. அப்புறம் மறந்துட போற.."னு கீதா சொல்றாங்க.

"சரி கேட்டு சொல்றேன்.."னு சொல்லிட்டு சக்தி அர்ஜூன் கிட்ட.. "அர்ஜூன்.. தீபாவளிக்கு டிரெஸ் எடுக்க போறதுக்கு எப்ப ப்ரீயா இருப்போம்னு அம்மா கேட்கிறாங்க.. எப்ப போகலாம்.."னு கேட்கிறா.

"சண்டே போலாம் அம்மு.."னு அர்ஜூன் சொல்றான்.

"ம்.. சரி.."னு அர்ஜூன் கிட்ட சொல்லிட்டு.. போன்ல கீதா கிட்ட.. "சண்டே போலாம் கீதா.."னு சொல்றா.

"சரி சக்தி.. நான் இதை கேட்க தான் போன் பண்ணேன்.."னு கீதா சொல்றாங்க.

"அதெல்லாம் இருக்கட்டும்.. தல தீபாவளிக்கு மாப்பிள்ளைக்கு என்னலாம் செய்யப் போறீங்க..னு கேட்டாங்க.. நான் என்ன பதில் சொல்லணும்.."னு சக்தி கேட்கிறா.

அவ சொன்னதை கேட்டு.. அர்ஜூன்.. "நான் எப்ப இதெல்லாம் கேட்டேன்.."னு அவளை பார்த்து முழிக்கிறான். சக்தி அர்ஜூன் முழிக்கிறது பார்த்து சிரிக்கிறா.

கீதா.. "இதெல்லாம் மாப்பிள்ளை கேட்டாரா.. நீ கேட்கிறீயா.."னு கேட்கிறாங்க.

"பரவாயில்லை கீதா.. கண்டுபிடிச்சிட்டீயே.."னு சக்தி சொல்றா.

"சரி.. உன் விளையாட்டெல்லாம் நிறுத்திட்டு வேலையை பாரு.. நான் அப்புறம் பேசுறேன்.."னு சொல்லிட்டு கீதா போனை கட் பண்றாங்க.

சக்தி சிரிச்சிட்டு போனை வேலை பார்க்க ஆரம்பிக்கிறா. அர்ஜூன் எதுவும் பேசாம வேலை பார்த்துட்டு இருக்கான்.

கொஞ்ச நேரம் கழிச்சு.. அர்ஜூன் எழுந்து சக்தி டேபிள் மேல சாஞ்சு உட்கார்றான்.

"அம்மு.. சாப்பிடலாம்.. வா.."னு அர்ஜூன் கூப்பிடுறான்.

"ஆங்.. சரி.."னு சொல்லிட்டு சக்தி எழுந்திருக்கிறா.

அர்ஜூன் சக்தியை தன்னோட சேர்த்து நெருக்கமா அணைக்கிறான்.

சக்தி.. "என்ன பண்ற அர்ஜூன்.."னு சிணுங்கிறா.

அர்ஜூன் அவ முகத்தில தன் கையால தடவுறான்.. சக்தி முகத்தில விழுந்திருந்த முடியை எடுத்து பின்னால வைக்கிறான்.

"அம்மு.."னு அர்ஜூன் கிறக்கமா கூப்பிடுறான்.

சக்தியும் கண்ணை மூடியபடி.. "ம்.."னு சொல்றா.

அர்ஜூன் சக்தி காதை பிடிச்சு திருகுறான்.. சக்தி.. "ஆஆ.. அர்ஜூன்.."னு அலறுறா.

"வர வர உனக்கு சேட்டை ரொம்ப கூடிப்போச்சு.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தியை இன்னும் இறுக்கமா கட்டிப்பிடிச்சு.. "மாப்பிள்ளைக்கு தல தீபாவளிக்கு என்ன செய்யப்போறாங்க..னு நான் கேட்டேனா.."னு அர்ஜூன் கேட்கிறான்.

சக்தி சிரிச்சிட்டே.. "சும்மா தான் கேட்டேன்.. கீதாவுக்கு தெரிஞ்சிடுச்சு.. நானே தான் கேட்கிறேன்னு.."னு சொல்றா.

அர்ஜூன் அவ பேசுறதை கேட்டு சிரிச்சிட்டே அவளை பார்க்கிறான்.

சக்தியும் அர்ஜூன் சிரிக்கிறத தன்னை மறந்து பார்க்கிறா.

அர்ஜூன் அவ பார்க்கிறத பார்த்து.. என்ன என புருவத்தை உயர்த்தி கேட்கிறான்.

"ஐ லவ் யூ அர்ஜூன்.."னு சக்தி சொல்றா.

"ஐ லவ் யூ டூ.. அம்மு.."னு அர்ஜூன் சொல்லிட்டு சக்தி நெத்தியில கிஸ் பண்றான்.

சாயந்திரம் சக்தியும் அர்ஜூனும் வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வர்றாங்க.

இந்திராவும் சரவணனும் ப்ரீத்தியோட அம்மாவை பார்த்துட்டு வந்ததை பத்தி சொல்றாங்க.

"அர்ஜூன்.. நீ இன்னைக்கு ஹாஸ்பிட்டலுக்கு போக போறீயா.."னு இந்திரா கேட்கிறாங்க.

"இல்லை.. ம்மா.. நான் டாக்டர் கிட்ட போன்ல பேசினேன்.. நாளைக்கு நானும் அம்முவும் போறோம்.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தி இந்திரா கிட்ட கம்பெனில நடந்ததை சொல்ல.. இந்திரா சக்தி கிட்ட அவங்க ஊர்ல நடந்த கதையை சொல்ல.. னு இரண்டு பேரும் பேசிட்டு இருக்காங்க.

சாப்பிட்டு முடிச்சு ரூமுக்கு வந்ததும் சக்தி அர்ஜூன் கிட்ட.. "அர்ஜூன்.. தாத்தா ஊருக்கு என்னை எப்ப கூட்டிட்டுப் போவ.."னு கேட்கிறா.

"என்ன அம்மு.. திடீர்னு.."

"இல்லை.. அம்மா.. ஊரை பத்தி நிறைய பேசுனாங்களா.."

"உடனே உனக்கும் பார்க்கணும் போல இருக்கோ.."னு அர்ஜூன் கேட்கிறான்.

"ஆமா.. என்னை எப்ப கூட்டிட்டுப் போவ.."னு சக்தி குழந்தை மாதிரி கேட்கிறா.

"ம்.. போகலாம்.. கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன்.."னு அர்ஜூன் சொல்றான்.

"சரி.."னு சக்தி தலையாட்டுறா.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top