26💕
அர்ஜூன் வீட்டுக்கு வரவேயில்லை.. ரொம்ப நேரமாச்சு..
இந்திரா ரொம்ப டயர்டா இருந்தாங்க.. "அம்மு.. நீ கார்த்திக்கு போன் பண்ணு.. அர்ஜூன் அவன்கூடதான் இருப்பான்.. எனக்கு ரொம்ப தூக்கம் வருது.."னு சொல்லிட்டு எழுந்து போறாங்க.
"சரி.."னு சொல்லிட்டு சக்தி கார்த்திக்கு போன் பண்றா.
கார்த்தி.. "அர்ஜூன் என் கூட இல்லையே மா.. சரி நான் பார்த்துட்டு போன் பண்றேன்.."னு சொல்றான்.
சக்தி ஹால்ல சோபால உட்கார்ந்து வெயிட் பண்றா.
கார்த்தி அர்ஜூன் போற இடத்துக்கு எல்லாம் தேடிப்போறான்.. எங்கையுமே இல்லை..
ஒரு வேளை அங்க போயிருப்பானோ.. னு சொல்லிட்டு கார்த்தி அந்த இடத்துக்கு போறான்.
அர்ஜூன் அங்க தான் இருந்தான். அது அர்ஜூன் உதய் கார்த்தி மூணுபேரும் அடிக்கடி மீட் பண்ற ஸ்பெஷல் place..
கார்த்தி.. "அர்ஜூன்.. ஏன் இப்டி பண்ற.. இங்க எதுக்கு வந்த.. சக்தி அங்க வெயிட் பண்ணிட்டு இருக்கா.. வா.."னு சொல்றான்.
"கார்த்தி.. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் டா.."னு அர்ஜூன் புலம்புறான்.
"அர்ஜூன்.. என்னாச்சு.. என்ன தப்பு பண்ண.. சொல்லு.."னு கார்த்தி கேட்கிறான்.
"அ.. அந்த ப்ரீத்தி.. அன்னைக்கு கம்பெனிக்கு வந்தா.."
"அவ எதுக்குடா வந்தா.. அவளுக்கு இன்னும் யார் உயிர் வேணுமாம்.."
"அவ மேல உள்ள கோபத்தை.. சக்தி மேல காட்டிட்டேன்.. சக்தியை ரெஸ்டாரண்ட்ல ஒருத்தன் லவ் சொல்லும் போது தான் பார்த்தேன்.. அதுல அவ மேல எந்த தப்பும் இல்லை.. ஆனா அத மனசில வச்சிட்டு அவள தப்பா பேசிட்டேன் டா.."னு அர்ஜூன் சொல்றான்..
"டேய் என்னடா பண்ணி வச்சிருக்க.. சரி வா வீட்டுக்கு போகலாம்.. சக்தி அப்பவே போன் பண்ணா.."னு கார்த்தி சொல்றான்.
"சக்தி என்னை மன்னிப்பாளா டா.."னு அர்ஜூன் கேட்கிறான்.
"சக்தி புரிஞ்சிப்பா டா.. வா போகலாம்.."னு கார்த்தி சொல்றான்.
அர்ஜூன் மனசெல்லாம் ரொம்ப உறுத்தலா இருக்கு.
கார்த்தி அர்ஜூனை வீட்டில கொண்டு விடுறான். சக்தி ஹால்லே படுத்து தூங்கிட்டு இருக்கா.
அர்ஜூன் சக்தியை பார்த்தபடி நின்னுட்டு இருக்கான்.
"சக்தி.. சக்தி.."னு எழுப்புறான்.
சக்தி முழிச்சு பார்க்கிறா. எதுவும் பேசாம எழுந்து ரூமுக்கு போறா.
அர்ஜூன் மனசுக்குள்ள.. "மன்னிப்பு கேளுடா.. வாயை மூடிட்டு இருக்க.. பேசு.. பேசு.."னு தன்னைத்தானே திட்டியபடி ரூமுக்குள்ள போறான்.
சக்தி வழக்கம் போல போர்வையை எடுத்துட்டு.. பால்கனிக்கு போகப்போறா.
அர்ஜூன் ஒருவழியா வாயைத் திறந்து.. "சக்தி.."னு கூப்பிடுறான்.
சக்தி திரும்பி என்ன என்பது போல் அர்ஜூனை பார்க்கிறா.
"சக்தி.. சாரி.."னு அர்ஜூன் சொல்றான்.
"எதுக்கு.."னு சக்தி கேட்கிறா.
"அ.. அது.. அது.."னு அர்ஜூன் தடுமாறுறான்.
"லேட்டா வந்ததுக்கா.. நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்னா.. அதுக்கெல்லாம் சாரி தேவையில்லை.. இது உங்க வீடு.. நீங்க உங்க விருப்பம் போல வரலாம்.. அதை கேட்கிற உரிமை எனக்கில்லை.."னு சக்தி சொல்றா.
"அதில்லை சக்தி.. அது நான் அன்னைக்கு பேசுனதுக்கு.. சாரி.. இன்னைக்கு ரெஸ்டாரண்ட்ல உன் ப்ரெண்ட்டை பார்த்தேன்.."னு சொல்லி அர்ஜூன் நடந்ததை சொல்றான்.
சக்தி எதுவும் பேசாம கட்டில்ல உட்கார்றா.
"ஓ.. சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. ரகு என்கிட்ட ப்ரொப்போஸ் பண்ணப்பவே நீங்க தப்பா புரிஞ்சிட்டு பேசுறீங்கனு எனக்கு தெரியும்.. ஆனா உங்களை பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேங்கிற எண்ணம் உங்களுக்கு எப்ப வந்துச்சு மிஸ்டர் அர்ஜூன்.."னு சக்தி கேட்கிறா.
அர்ஜூன் பதில் சொல்லத் தெரியாம அமைதியா இருக்கான்.. இப்ப தான் சக்தியை எவ்ளோ ஹர்ட் பண்ணிருக்கான்னு அவனுக்கு புரியுது..
"பதில் சொல்லுங்க மிஸ்டர் அர்ஜூன்.. நான் உங்க பணத்துல நகை துணினு வாங்கி செலவு பண்ணேனா.. இல்லை ஊர் சுத்திட்டு இருந்தேனா.. எத வச்சு நான் பணத்துக்காக கல்யாணம் பண்ணேன்ற முடிவுக்கு வந்தீங்க.."னு சக்தி கேட்கிறா.
அர்ஜூன்.. "அது.. அது.. அன்னைக்கு இருந்த கோபத்தில.."
"ஓ.. யார் மேலயோ உள்ள உங்க கோபத்துக்கு என்னை தப்பா பேசுவீங்களா.."
"அப்டி இல்லை.."
"போதும்.. எனக்கு உங்க பணம் தேவையில்லை. பாசம் உங்க கிட்ட இருந்து கிடைக்கப் போறதில்லை.. அதவிட பல மடங்கு பாசத்தை அம்மா எனக்கு தர்றாங்க. அது போதும் எனக்கு.."னு சொல்லிட்டு சக்தி வழக்கம் போல பால்கனில போய் படுத்துக்கிறா.
சக்தி கோபத்தில நியாயம் இருக்குன்னு புரிஞ்சாலும்.. தன்னால சக்தி எவ்ளோ காயப்பட்டிருக்கானு நினைச்சு வருத்தப்படுறான் அர்ஜூன்.
அர்ஜூன் யோசிச்சு பார்க்கிறான்.. சக்தி கல்யாணத்துக்கு பிறகு எந்த அநாவசிய செலவும் பண்ணதில்லை.. ஒருமுறை கோவிலுக்கு போகும்போது இந்திரா தன்னோட நகையை கொடுத்து போடச் சொன்னதுக்கு சக்தி வேண்டாம்.. இதான் சேரிக்கு மேட்ச்சா இருக்குன்னு சிம்பிளா வந்தது எல்லாம் மனசில வருது..
அச்சோ.. தப்பு பண்ணிட்டேனேனு மனசுக்குள்ள அர்ஜூன் புலம்பிட்டே தூங்காம இருக்கான்.
அர்ஜூன் கிட்ட அவ்ளோ கோபமா பேசிட்டு பால்கனில உள்ள ஊஞ்சல்ல வந்து உட்கார்ந்த சக்தி கண்ணில இருந்து கண்ணீர் வழியுது.
"ஏன் அர்ஜூன்.. ஏன்.. நான் ஏன் உன் மேல ஆசைப்பட்டேன்.. இப்டி உன் மனசில நான் இல்லைனு ஆகுறதுக்கா.."னு நினைச்சு கண்கலங்குறா சக்தி.
"ஏற்கனவே விருப்பமில்லாம தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட.. நானா உன்கிட்ட பேசினா எங்க என்மேல உனக்கு வெறுப்பு வந்துடுமோன்னு தான் நான் விலகி இருந்தேன்.. ஆனா நான் பண்ற சேட்டையெல்லாம் ரசிச்சு நீ சிரிச்ச ஒவ்வொரு சிரிப்பையும் நான் மனசில அப்டியே பொக்கிஷமா சேர்த்து வச்சிருக்கேன் அர்ஜூன்..
நிறைய நாள் நான் அம்மா அப்பா கூட பேசும் போது விளையாடும் போது உன் கண்ணில ஒரு சந்தோஷம் தெரியும்.. நான் பார்க்கலைனு நினைச்சு என்னையே நீ பார்த்திட்டு இருப்ப.. எப்பவோ எனக்குள்ள உன் மேல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு.. ஆனா அத உன்கிட்ட சொல்லத்தான் தைரியமில்லை..
கடைசியா நாம பேசிக்கிட்ட போது கூட உன்னை மறந்து நீ எப்டி சந்தோஷமா சிரிச்ச.. அதுவும் அந்த சிரிப்புக்கு காரணம் நான் தானே.. அதனாலயே நான் எவ்ளோ சந்தோஷமா இருந்தேன் தெரியுமா அர்ஜூன்..
நீ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க.. அது தப்புன்னு தெரியும் போது நீ என்னை ஏத்துப்ப..னு நம்புனேன்..
ஆனா உன் லைப்ல வேற ஒரு பொண்ணு இருந்திருக்கா.. அவளை மறக்க முடியாம தான் நீ என்கிட்ட இருந்து விலகிப் போயிருக்க..
இப்பக்கூட என்னை முழுசா மனைவியா ஏத்துக்க நீ தயாரா இல்லை தான அர்ஜூன்.."னு சக்தி மனசுக்குள்ள வேதனையோட அழுறா.
ப்ரீத்தி அர்ஜூனோட லவ்வர்.. அவளை மறக்க முடியாம தான்.. அர்ஜூன் தன்கிட்ட இருந்து விலகி இருக்கிறதா சக்தி ரொம்ப சரியா தப்பா புரிஞ்சுக்கிறா.
அதே நேரம் அர்ஜூன்.. தங்களோட கல்யாண போட்டோவை பார்க்கிறான்.
"சக்தி உன்னை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்.. உங்க வீட்டில இருக்கும் போது நீ எவ்ளோ சந்தோஷமா.. குழந்தை மாதிரி விளையாடிட்டு இருந்த.. அந்த சந்தோஷத்தை நீ என்கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நான் தருவேன்.. இனி நீ தான் என் வாழ்க்கை.."னு சக்தி போட்டோ கிட்ட பேசிட்டு இருக்கான்.
இரண்டு பேரும் தூங்காம யோசிச்சு யோசிச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காங்க.. எப்ப தூங்குனாங்க.. னு அவங்களுக்கே தெரியலை.
அர்ஜூன் கண் முழிச்சதும் சக்தியை பார்க்கணும்னு பால்கனிக்கு போறான்.. அங்க சக்தி.. போர்வையை இழுத்து மூடிட்டு படுத்திருக்கா.. ஆனா சக்தியோட உடம்பெல்லாம் நடுங்குது..
அர்ஜூன் என்னாச்சுனு பதற்றத்தோட சக்தியை தொடுறான்.. சக்தி உடம்பெல்லாம் நெருப்பா கொதிக்குது.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top