WatTruyen.Top

அடியே.. அழகே..

14💕

jamunaguru

நிவேதாவும் நிரஞ்சனும் கிளம்புறாங்க. சக்தி உதய்ய பார்க்க போறத நினைச்சு சந்தோஷமா இருக்கா.

"சக்தி.. என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க.."னு நிவேதா கேட்கிறா.

"நீ கிளம்புறல்ல.. அதான்.."னு சக்தி சொல்றா.

நிவேதா சக்தியை அடிக்க துரத்துறா. இரண்டு பேரும் வீட்டையே ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு இருக்காங்க.

ஒரு வழியா சண்டையெல்லாம் முடிச்சிட்டு நிவேதா நிரஞ்சன் கூட கிளம்புறா.

கீதாவும் சுந்தரமும் வழியனுப்பி வைக்கிறாங்க.

சக்தி உதய்ய பார்க்க போறதுக்காக கிளம்புறா. அந்த நேரம் சக்தியோட ப்ரெண்ட் சிவா போன் பண்றான்.

"சக்தி எங்க இருக்க.."னு சிவாவோட குரல் ரொம்ப பதற்றமா இருக்கு.

"வெளியே கிளம்பிட்டு இருக்கேன்.. நீ ஏன் ஒரு மாதிரியா பேசுற.."

"கொஞ்சம் கிளம்பி கோவிலுக்கு வா.. ரொம்ப urgent.."னு சிவா சொல்றான்.

சக்தி "கோவிலுக்கு வர சொல்றதுக்கு ஏன் இப்டி பதற்றமா பேசுறான்"னு யோசிச்சிட்டே போறா.

அங்க மதி வீட்டுக்கு தெரியாம விக்கிய கல்யாணம் பண்ணிக்கிற முடிவில இருந்தா.

சிவாவும் இன்னும் சில ப்ரெண்ட்ஸ்ம் "இப்டி கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்.. இரண்டு பேர் வீட்டிலயும் பேசலாம்.."னு சொல்லிட்டு இருந்தாங்க.

ஆனா மதி தன் முடிவை மாத்திக்கிறதா இல்லைங்கிறது சக்திக்கு புரிஞ்சது.

சக்தி அவளை சமாதானம் பண்ணமுடியுமா.. என்ன பேசலாம்னு யோசனைல நின்னுட்டு இருந்தா.

அந்த நேரம் மதியோட அப்பா அம்மா வந்தாங்க.

மதியோட அம்மா.. "மதி.. கொஞ்சம் புரிஞ்சுக்கோ..மா.. உனக்கு அப்புறம் ஒருத்தி இருக்கா.. நீ இப்டி பண்ணா.. அவ வாழ்க்கை என்னாகும் கொஞ்சம் யோசிச்சு பாரு மா.."னு கெஞ்சிட்டு இருந்தாங்க.

மதியோட அப்பாவும் அவகிட்ட பேசிட்டு இருந்தாங்க.

ஆனா அவங்க இரண்டு பேரையும் மீறி.. மதி விக்னேஷ கல்யாணம் பண்ணிக்கிறா.

மதியோட அப்பாவும் அம்மாவும் அதை தாங்கிக்க முடியாம அழுதுட்டு இருக்காங்க.

சக்திக்கு ஏனோ அவங்கள பார்க்கும் போது சுந்தரமும் கீதாவும் அழுற மாதிரி தோணுது. மனசெல்லாம் பதறுது.

சக்தி அங்க இருக்க முடியாம வீட்டுக்கு வந்துடுறா. சக்திக்கு ஏதோ இனம்புரியாத பயமும் படபடப்பும் வருது.

"சக்தி என்னாச்சு.. ஏன் இப்டி இருக்க.."னு கீதா கேட்கிறாங்க.

சக்தி மதி கல்யாணம் பண்ணிக்கிட்டதையும் அவங்க அப்பாவும் அம்மாவும் அழுதது பாவமா இருந்துச்சுனு சொல்றா.

"பொண்ண பெத்தவங்க எல்லாரும் பிள்ளைங்களுக்காக யோசிக்கிறத விட.. சுத்தி உள்ளவங்க என்ன பேசுவாங்களோனு தான் யோசிக்க வேண்டியிருக்கு.."னு கீதா சொல்றாங்க.

சக்தி எதுவும் பேசாம கீதா மடியில படுத்துக்கிறா.

மனசுக்குள்ள ஏதேதோ நினைப்பு ஓடுது சக்திக்கு.

சக்திக்கு தூக்கமே வரலை..

"எனக்கு ஏன் மதியோட அப்பா அம்மா அழும் போது.. அப்பா அம்மா முகம் நியாபகம் வந்தது..

அவ அளவுக்கு சுயநலமா அப்பா அம்மாவை தூக்கி எறியமாட்டேனே நான் காதலுக்காக..

மதியும் இவ்ளோ நாள் இப்டி இல்லையே.. அப்ப காதல் சுயநலமா மாத்திடுச்சா அவளை..

ஒரு வேளை நான் அப்டி மாறினா அப்பா அம்மா என்ன ஆவாங்க.. அவங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்க..

நான் அவ்ளோ சுயநலமா யோசிக்க மாட்டேன்.. அவ்ளோ முட்டாள் இல்லை நான்..

மாற மாட்டங்கிறதுக்கு என்ன உறுதி.. கொஞ்ச நாள் பேசின ஒருத்தன் மேல நம்பிக்கை வச்சு அது காதல்னு யோசிக்கிற அளவுக்கு போய்ட்ட.. நீயும் உன் காதல் பெரிசுனு ஏன் யோசிக்க மாட்ட.."

சக்திக்கு பயம் வருது.. "நான் மாறிடுவேனா.. மாறக்கூடாது.. இப்ப என்ன பண்ண.. உதய் மேல இருக்கிறது வெறும் ஈர்ப்பு.. அதில இருந்து வெளியே வா.. சக்தி.."னு தனக்குள்ளே பேசிக்கிறா.

உதய்கிட்ட இருந்து மெசேஜ்.. "அம்மு.. ஏன் இன்னைக்கு வரலை.."னு.

சக்தி பதில் அனுப்ப தோணாம வெறிச்சு பார்த்துட்டு இருக்கா.

"இனி எப்பவுமே சந்திக்க வேண்டாம் உதய்."னு சக்தி பதில் அனுப்புறா.

"அம்மு.. என்னாச்சு.."னு உதய் மெசேஜ் பண்றான்.

ஆனா சக்திக்கு அவன்கிட்ட எதுவும் சொல்லத் தோணலை.

#சக்தி பண்றது சரிதானா..

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top